பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com

Monday, September 9, 2019

வஸீலா” என்றால் *என்ன❓

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻...

*☄பிரார்த்தனையின்*
                      *ஒழுங்குகள்

*☄*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻....தொடர் ➖ 8⃣1⃣*

*☄பிரார்த்தனையின்*
                      *ஒழுங்குகள் { 10 }*

*☄வஸீலா” என்றால்*
                  *என்ன❓ [ 01 ]*

*🏮🍂“எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் “வஸீலா” என்று கூறப்படும்” அதாவது தமிழில் “துணை சாதனம்” என்று கூறலாம். கடலில் பயணம் செய்வதற்கு கப்பல் “வஸீலா”வாக அதாவது துணை சாதனமாக உள்ளது என்று கூறுவர்.*

_மகான்களை இடைத்தரகராகக் கொண்டு “வஸீலா” தேடுவது கூடுமா❓_

*يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு “வஸீலா”வைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 5:35) 📖*

*🏮🍂மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் அவனை நோக்கி ஒரு “வஸீலா”வை தேடிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறான்.*

*🏮🍂நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை, எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை, எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை, ஏதாவது ஒரு மகானை பிடித்துக் கொண்டால் போதும் கடவுளை நெருங்கி விடலாம்* என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களில் இருக்கிறது.

*🏮🍂ஆனால் இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் “வஸீலா” என்ற துணை சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று தான் நபி (ஸல்) கற்றுத் தந்துள்ளார்கள்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் தனது நேசத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு துஆவை கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் “அல்லாஹ்வே, நான் உன்னிடத்தில் சொர்க்கத்தையும், அதன் பக்கம் என்னை நெருக்கமாக்கி வைக்கக் கூடிய நல்லறங்களையும், நல்ல வார்த்தைகளையும் கேட்கிறேன்” என கேட்குமாறு சொல்லிக் கொடுக்கிறார்கள்.*_

*📚 (நூல்: அஹ்மது 23870) 📚*

*🏮🍂நாம் செய்யக் கூடிய நல்லறங்களும், நல்ல வார்த்தைகளும் தான் நம்மை சுவர்க்கத்தின் பக்கம் அதாவது இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியவை ஆகும்.* எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நேசத்திற்குரிய மனைவி *ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவற்றை அல்லாஹ்விடம் கேட்குமாறு கற்றுக் கொடுக்கிறார்கள்.*

*🏮🍂இறைவனின் பக்கம் நெருங்கு வதற்கு, தன்னை “வஸீலா”வாக எடுத்துக் கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் கூறவேயில்லை.* அப்படியிருக்க வேண்டுமென்றால் தன்னுடைய பாசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். *ஆனால் அவர்களுக்கும் கூட சொல்லிக் கொடுக்கவில்லை.*

*🏮🍂திருமறைக் குர்ஆனில் அல்லாஹ், நல்லறங்களின் மூலமாகத் தான் தன்னிடத்தில் உதவி தேட வேண்டும் என்று கற்றுத் தருகிறான்.*

*وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏*

_*🍃பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.*_

*📖 (அல்குர்ஆன் 2:45) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

                           ✍🏼.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment