பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

சூனியம் - ஸிஹ்ரு* (Part -7)

*சூனியம் - ஸிஹ்ரு* (Part -7)

சூனியம் செய்யப்பட்டால் அதன்மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையை யூதர்கள் எப்படி ஏற்படுத்தினார்கள்?

இதுதான் நாம் பார்க்கப்போவது.

யூதர்கள் மிகவும் கோழைகள். அதிக நாள் வாழவேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள். மக்களிடமிருந்து பொருளாதாரத்தை சுரண்டும் வித்தை தெரிந்தவர்கள். பிறரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் கையாண்ட வித்தைதான் "சூனியக் கலை".

தீய சக்திகளை வசப்படுத்தி அவற்றை ஏவி விடுவதன் மூலமாக ஒருவருக்கு நன்மையோ அல்லது தீமையோ செய்ய முடியும் என்பதுதான் அவர்கள் கூறிய "சூனியக் கலை".

தீயசக்திகளை வசப்படுத்தி மாயங்களை நிகழ்த்திய சாலமோன்(சுலைமான்) என்பவரிடமிருந்து அக்கலையை கற்றுக்கொண்ட தங்களின்  முன்னோர்கள் வழியாக அந்த சூனியக்கலையை தாங்களும் அறிந்திருப்பதாக கூறினார்கள் யூதர்கள்.

அதாவது, அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தவைகளின் மூலம்
நபி சுலைமான்(அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைத்தான், "தீயசக்திகளை" வசப்படுத்தி சுலைமான் சூனியம் செய்தார் என்று யூதர்கள் கூறினர். அந்த சூனியத்தைதான் தாங்கள் அறிந்திருப்பதாகவும் யூதர்கள் கூறினர்.

சுலைமான் நபி செய்வது அற்புதம் அல்ல,  "தீயசக்திகளை வசப்படுத்தி செய்யப்படும் வெறும் சூனியம் மட்டுமே அது" என்று சுலைமான் நபி காலத்தில் அவருக்கு எதிராக சொல்லப்பட்ட ஒன்றைத்தான் மதீனாவில் இருந்த யூதர்களும் கூறினார்கள்.

இது குர்ஆன் வசனம் 2:102 ல் கண்டிக்கப்படுகிறது. மேலும், யூதர்கள் கூறும் அந்த சூனியத்தை கற்றுக் கொடுத்தது ஷைத்தான்களே என்றும் அவ்வசனம் கூறுகிறது.

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ...(2:102)

சுலைமானின் (அற்புதங்கள் நிறைந்த) ஆட்சிக்கெதிராக (அதை சூனியம் என்று) ஷைத்தான்கள் கூறியதையே இவர்களும்(யூதர்கள்) பின்பற்றுகின்றனர்.
(சூனியம் எனும்) இறை மறுப்பை சுலைமான் செய்யவில்லை. மக்களுக்கு சூனியத்தை  கற்றுக்கொடுக்கும் ஷைத்தான்களே (அந்த) இறை மறுப்பை செய்தார்கள்...(2:102)

சூனியம் என்பதை இறை மறுப்பு என்கிறது குர்ஆன் வசனம். அந்த இறை மறுப்பை சுலைமான் நபி செய்யவில்லை என்பதையும், சுலைமான் நபியின் பெயரில் யூதர்கள் பொய்யுரைப்பதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது. இறைமறுப்பாகிய சூனியத்தை மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்தது  ஷைத்தான்களே என்றும் வசனம் கூறுகிறது.

மனிதர்களுக்கு ஷைத்தான்கள் எப்படித் கற்றுத்தருவார்கள் என்ற சந்தேகம் நமக்கு எழக்கூடும். இதுவும் நாம் தெரிந்கொள்ள வேண்டிய ஒன்றுதான். 

ஆரம்பகாலத்தில் வானுலகச் செய்திகள் சிலவற்றை ஒட்டுக்கேட்டு மனிதர்களுள் சிலருக்கு  ஷைத்தான்கள் கொண்டுவந்து சேர்க்கும் நடைமுறை இருந்ததை குர்ஆன் வசனம் கூறுகிறது...

மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர்...(72:6)

மேலும், சோதிடர்கள் கூறும் சில செய்திகள் உண்மையாகத்தானே இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு...

"அந்த (சில)உண்மையான வார்த்தைகளை ஜின் ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 6213)

முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு தூதுத்துவம் வந்ததற்குப் பிறகு வானுலகச் செய்தியை ஒட்டுக் கேட்பதை தடுக்கப்பட்டதாகவும் வசனம் கூறுகிறது...

(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.(72:9)

பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்...(72:10)

வானுலகச் செய்திகள் சிலவற்றை ஷைத்தான்கள் மூலம் மனிதர்கள் அறிய முடிந்த ஒரு காலமும் இருந்ததை குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் உறுதிபடுத்துகின்றன.

தீயசக்திகளை வசப்படுத்துவதன் மூலம் மனிதர்களின் எதிர்காலத்தைக் கூறும் சோதிடத்தையும், மனிதர்களுக்கு நன்மையையோ அல்லது தீமையையோ அளிக்கக் கூடிய சூனியத்தையும் செய்ய முடியும் என்று நம்பிக்கை மக்களுக்கு இருந்ததால்தான், தாங்கள் செய்யும் சூனியம் தாக்கம் எற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த யூதர்களால் முடிந்தது.

யூதர்கள் கூறிய அந்த சூனியத்தைதான் குஃப்ர் என்கிறது குர்ஆன் வசனம். அதாவது, தீயசக்திகளை வசப்படுத்தி பிறருக்கு நன்மையையோ அல்லது தீமையையோ அளிக்கக் கூடியதுதான் "சூனியக் கலை" என்ற யூதர்களின் ஸிஹ்ரைத்தான் குஃப்ர் என்கிறது குர்ஆன் வசனம். சூனியம் என்பது கலை அல்ல. அது ஒரு ஷைத்தானிய செயல்.

ரைட். சூனியத்தை உண்மை என்பவன் சுவர்க்கம் புக மாட்டான் என்ற ஹதீஸுக்கு வருவோம்.

தீயசக்திகளை வசப்படுத்தி சூனியம் செய்யப்படுவதாக சொல்வதையும் "ஸிஹ்ரு" என்பார்கள்.

இதன் மூலம் நாம் அறிவது...

(1) தீயசக்திகளை வசப்படுத்தி சூனியம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என்பது உண்மை.

(2) தீயசக்திகளை வசப்படுத்தி சூனியம் செய்கிறேன் என்று கூறும் சூனியக்காரன் இருக்கிறான் என்பது உண்மை.

இந்த இரண்டையும் உண்மைபடுத்துபவரை அந்த ஹதீஸ் குறிக்கவில்லை. அதாவது, சூனியம் எனும் ஷைத்தானிய செயல் இருக்கிறது, அந்த ஷைத்தானிய செயலை செய்யும் சூனியக்காரன் இருக்கிறான் என்பது உண்மை என்பவரை அந்த ஹதீஸ் குறிக்கவில்லை.

(3) சூனியக்காரனின் சூனியத்தில் தாக்கம் இருக்கிறது என்பது உண்மை.

(4) சூனியம் வைக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை.

இந்த இரண்டையும் உண்மை என்பவனைத்தான் அந்த ஹதீஸ் குறிக்கிறது. அதாவது,

"சூனியக்காரனின் சூனியத்திற்கு தாக்கம் இருக்கிறது என்பது உண்மை" என்று ஒருவன் நம்பினால் அவன் சுவர்க்கம் புகமாட்டான் என்பதுதான் அந்த ஹதீஸ் கூறும் கருத்து. தெளிவாக இருக்கும் இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிறோம் என்று கிளம்பிய பீஜே மற்றும் ஸலபுகள்தான் தேவையற்ற முடிச்சுக்களை போட்டு வைத்துள்ளனர்.

"உண்மை என்று நம்பக்கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் எதைக் கூறினார்களோ அதையே கேள்வியாக மாற்றினார் பீஜே.

"சூனியக்காரனின் சூனியத்திற்கு தாக்கம் இருக்கிறதா?" என்று அடிமுட்டாள்தனமான  ஒரு தேவையற்ற கேள்வியை எழுப்பினார் பீஜே. இதற்கு கிடைத்த பதில்களும் தேவையற்றதாகவே ஆகின.

சூனியத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் ஒரு அப்பாவிக் கூட்டமும், அச்சூனியத்தை அகற்றுகிறோம் என்று அந்த அப்பாவிகளிடம் காசு சம்பாரிக்கும் ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு "சூனியக்காரனின் சூனியத்திற்கு தாக்கம் இருக்கிறது" என்று பதிலளித்து நபிமொழியை மீறினர்.

"சூனியக்காரனின் சூனியத்திற்கு அல்லாஹ் நாடினால் தாக்கம் இருக்கும்" என்று பதிலளித்த ஸலபுகள் இதன் மூலம், வரம்பு மீறும் வேலையைச் செய்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இதன் மூலம், தன்னுடைய சூனியக்கொள்கையை பின்பற்றுகிறவர்களை ஒரு கட்சியாகவும், மற்ற அனைவரையும் "சூனியக்கட்சி" என்றும் பிரித்தார் பீஜே. சூனியக்கட்சிக்காரர்களை பின்பற்றி தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுத்து தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் வேறு எந்த பள்ளிக்கும் போகாதவாறு "சூனியம்" செய்தார் பீஜே. இதன் மூலம் தனிப்பள்ளி கொள்கை வீறுநடை போட்டது. பீஜேவின் சூனியத்தை பேசும் தனிப்பள்ளிகள் அதிகமாகின.

ரைட். தனிப்பள்ளிகளை அதிகப்படுத்தியது பீஜேவின் சாமர்த்தியம். நமக்கு அது தேவையில்லை.

பல அமானுஸ்ய நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு சூனிய முடிச்சுகளை அவிழ்க்கவே முடியாது.

முடிச்சுக்களை அவிழ்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment