பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 1, 2019

திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி,

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻....

*☄தூங்கும் முன்*
          *கடைப்பிடிக்க வேண்டிய*
                       *ஒழுங்குகள்

*☄ ஓத வேண்டிய*
                  *துஆக்கள்

*🏮🍂மேலும் படுக்கைக்குச் செல்லும் போது, திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி, நமது உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்._*

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا الْمُفَضَّلُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ ، *عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله علي وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَفِيهِمَا {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} ، وَ{قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} ، وَ{قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங் கைகளை இணைத்து அதில், ”குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ்” ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.*_

*🎙 அறிவிப்பவர்:*
               *ஆயிஷா (ரலி)*

        *📚 நூல்: புகாரி 5017 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄112 வது அத்தியாயம்☄*

*بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ هُوَ اللهُ أَحَدٌ (1)اَللهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ(4)*

_பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு[F]வன் அஹத்._

        _இதன் பொருள்:_

_*🍃அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.*_

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄113 வது அத்தியாயம்☄*

*بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ الْفَلَقِ (1)مِنْ شَرّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)*

_பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B] ரப்பி(B]ல் ப[F]லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(B]. வமின் ஷர்ரின் னப்ப[F]ஸாத்தி பி[F]ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்._

        _இதன் பொருள்:_

_*🍃அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!*_

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄114வது அத்தியாயம்☄*

*بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلهِ النَّاسِ (3)مِنْ شَرّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4)الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ(5)مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ(6)*

_பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பி(B]ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ[F] ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்._

        _இதன் பொருள்:_

_*🍃அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர்.*_

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

       
                            ⤵⤵⤵
                          ✍🏼.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment