பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, September 24, 2019

பாவமானதைக் கேட்கக் கூடாது

*🕋🕋மீள் பதிவு🕋🕋*

*🤲🤲🤲ஏற்றுக் கொள்ளப்படாத துஆக்கள்🤲🤲🤲*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📕📗📙📘 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு🌈🌈🌈*

*🌐பாவமானதைக் கேட்கக் கூடாது🌐*

*✍✍✍பிரார்த்தனை செய்யும் போது இறைவனால் தடை செய்யப் பட்டுள்ளதைக்கேட்கக்கூடாது. உதாரணமாக ஒருவன் திருடப் போகும் போது, "இறைவா, நான் திருடப்போகின்றேன். எனக்கு நிறைவாகப் பொருட்கள் கிடைக்கச் செய்” என்பது போல்பிரார்த்திக்கக் கூடாது.✍✍✍*

*🏓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*🏓

📕📕📕"நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று (மனிதன்)கூறுகின்றான்.உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும், பாவமானவற்றிலும் பிரார்த்தனைசெய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது.📕📕📕

*அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*நூல்: முஸ்லிம் 2735*

*🌎உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்🌎*

*✍✍✍பிரார்த்தனை செய்யக் கூடியவனின்உணவும், உடையும், பானமும் ஹலாலானமுறையில் இருக்க வேண்டும். பிறரை ஏமாற்றியோ அல்லது மோசடி செய்தோ,அடுத்தவர்களின் பொருளை அபகரித்தோ அல்லது வட்டிப் பணத்திலோவாங்கிய உணவுமற்றும் உடைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் பிரார்த்தித்தால் அந்தப்பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது.✍✍✍*

*🕋அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:🕋*

📘📘📘அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையேமுஃமின்களுக்கும் ஏவுகின்றான்என்று கூறி விட்டு,📘📘📘

*✍✍✍தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான)நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்.✍✍✍*

*(அல் குர்ஆன் 23:51)*

📗📗📗நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாகஇருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.📗📗📗

*(அல்குர்ஆன் 2:172)*

*✍✍✍ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றிகுறிப்பிட்டார்கள். "அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்துபரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, எனதுஇறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனதுஉணவு, அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில்மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*நூல்: முஸ்லிம் 1844*

📙📙📙உறவைத் துண்டிக்காமலும் பாவமானகாரியத்தில் அல்லாமலும் எந்த ஒருபிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்குவிரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒருசேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனதுபாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில்அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நாங்கள்அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு"அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்📙📙📙.

*அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)*

*நூல்: அஹ்மத் 11150*

*✍✍✍ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங் கையுடன்அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்✍✍✍* .

📚📚📚"உங்களுடைய இறைவன் சங்கையானவன்.அவனுடைய அடியார் தனது கையை அவன்பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்குவெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்📚📚📚.

*அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)*

*நூல்: இப்னு மாஜா 3911*

*✍✍பாவமானதையும், உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும்ஒப்புக் கொள்ளப்படும்என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும்பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம்ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.✍✍*

📕📕அல்லாஹ்வைத் தவிர பிறரிடம் கையேந்தி விடாதீர்கள்!
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவேயாகும்.📕📕

*(அல்குர்ஆன் 27:62)*

*✍✍அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவோ, தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவோ, சக்தி பெறமாட்டார்கள்.✍✍*

*(அல்குர்ஆன் 7:197)*

*🌐ஒருங்கிணைந்த மனதுடன், பணிவாகப் பிரார்த்தியுங்கள்!🌎*

📘📘(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் -வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.📘📘

*(அல்குர்ஆன் 7:55)*

*✍✍பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள் அச்சத்தோடும் ஆசை யோடும் அவனை பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிகசமீபத்தில் இருக்கிறது.✍✍*

*(அல்குர்ஆன் 7:56)*

*🤲🤲இன்னும் ஏற்படாத துஆக்கள்🤲🤲*

✍ ✍ *சாபமிடுவது வெறுக்கப்பட்ட காரியமாக இஸ்லாம் போதித்தாலும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அதை அனுமதிக்கிறது. அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு அநீதி இழைத்தவனை சபிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதே சமயம் அதில் வரம்பு மீறுவதை கண்டிக்கிறது. வரம்பு மீறினால் அதன் பாவத்தை வரம்பு மீறியவரே சுமக்க வேண்டி வரும்.✍✍*

💎💎"ஒருவருக்கொருவர் சாபமிடுபவர்களில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள், அவர்களில் யார் இதை முதலில் தொடங்கினார்களோ அவரே அதன் (பாவ) சுமையை சுமப்பார், அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறினால் தவிர."💎💎

*சுனன் அபூதாவூது, 13/237.*

*✍ ✍️ அநீதி இழைக்கப்படும் சமயத்தில் காக்கப்படும் மெளனம் மரணத்திற்கு சமமானது. அநீதிக்குள்ளாக்கப்பட்டவர் தனக்கு அநீதி இழைத்தவனுக்கு எதிராக குரல் எழுப்பவும், அவ்வாறு குரல் கொடுப்பதன் மூலம் அநீதி இழைப்பவனை தடுத்து நிறுத்தவும் இஸ்லாம் அனுமதிக்கிறது.✍✍*

*👺அராஜகம் செய்யாதீர்கள்!👺*

    📗📗அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.📗📗

*(ஸஹீஹுல் புகாரி 4403)*

    *✍✍உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!✍✍*

*(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)*

📙📙பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
விலக்கப்பட்ட உணவு, உடை, பானங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நன்மையை ஏவாமலும், தீமையை தடுக்காமலும் இருப்பது கூடாது. என் உயிர் எந்த இறைவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக் கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள், இல்லையென்றால் இறைவன் உங்கள் மீது அவனுடய வேதனையை அனுப்புவான் பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான், என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ஆதாரம்: திர்மிதி
குடும்பத்தாரின் உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திப்பது கூடாது. யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்) அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் ஆகவே, நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றார்! அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள்.📙📙   

    *ஆதாரம்: திர்மிதி*

*✍✍பாவம் மன்னிக்கப்படுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று அல்லாஹ்விற்கு ஷிர்க் வைக்காமல் இருக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்.✍✍*

*(அல்குர்ஆன் 4:48)*

📚📚பிரார்த்தனை என்பது அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று,  பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மட்டும் கேட்க வேண்டும், அல்லாஹ்வின் படைப்புகளில் எந்த படைப்பிடத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மட்டும் தான் பிரார்த்தித்து கேட்க வேண்டும் என்று கூறக்கூடிய குர்ஆன் வசனங்களின் எண்களை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன் அதை குர்ஆனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,📚📚

*பார்க்க அல்குர்ஆன் 40:60, 2:186,  35:13-14, 22:73, 7:144, 46:4-5, 40:20, 39:38, 27:62, 10:107, 6:17, 46:5, 16:20-21, 16:17, 22:73-74, 27:62, 3:135, 39:53, 2:186, 42:49, 21:89-90, 11:70-73, 26:80, 21:83-84*

*✍இன்னும் இது போன்ற பல குர்ஆன் வசனங்களும் இருக்கின்றன. அவைகளையும் தெரிந்து அல்லாஹ்விடத்தில் மட்டும் பிரார்த்தித்து ஈருலக வெற்றிகளையும் பெறுவோமாக!✍*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment