பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, September 4, 2019

முஸ்லிம்களா???*

*நாம்_இந்துக்களா? அல்லது #முஸ்லிம்களா???*

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்!

1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்.

2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு.

3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்.

4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு.

5. அங்கே சிலைக்கு பட்டுப்புடவை : இங்கே கப்ருக்கு பட்டுத்துணி.

6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்.

7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு.

8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.

9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்.

10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்.

11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை.

12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்.

13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை.

14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்.

15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.

16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்.

17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்.

18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி.

19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து.

20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.

21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு.

22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.

23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை.

24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு.

25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பேய் ஆடும்.

26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.

27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.

28. அங்கே திதி திவசம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.

29. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.

30. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,

31. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.

32. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.

33. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.

34. அங்கே காவடி ஊர்வலம் :. இங்கே தர்கா ஊர்வலம்.

.

#வேண்டாம்_மாற்றுமத_கலாச்சாரம்!

(மற்றக்) கூட்டத்தார்களைப் போன்று யார் நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர் தான். (நம்மைச் சார்ந்தவர் இல்லை).
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்தபடி மார்க்கத்தை பின்பற்றுவோம்..
இஸ்லாத்தில் இல்லாத இது போன்ற குப்பைகளை தூக்கி எரிவோம்!!!

பெயரளவில் முஸ்லிமாக இல்லாமல்,.
அல்லாஹ்வின் பார்வையில் முஸ்லிமாக மரணிப்போம்!!

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ 
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
(அல்குர்ஆன் : 3:102)

*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*

*உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்*

No comments:

Post a Comment