📗📗 *திருமணம் செய்ய தடுக்கப்பட்டவர்கள்* 📗📗
இரண்டு வகையில் வருவார்கள்
*
🎈1. *நிரந்தரமாக தடுக்கப்பட்டவர்கள்**
🎈2 *.குறிப்பிட்ட காலத்திற்காக தடுக்கப்பட்டவர்கள்*
👉🥎 *நிரந்தரமாக தடுக்கப்பட்டவர்கள் 3 பிரிவுகளில் வருவார்கள் *
👉. *இரத்த உறவு முறையால் தடுக்கப்பட்டவர்கள்.*
🔲1.தாய்,தாயிடைய தாய்,தந்தையுடைய தாய்
🔲2.மகள்,மகளுடைய மகள்,மகனுடைய மகள்
🔲3.உடன் பிறந்த சகோதரிகள்,
தந்தை வழி சகோதரிகள்,
தாய் வழி சகோதரிகள்.
🔲4.உடன் பிறந்த சகோதரியுடைய மகள், தந்தை வழி சகோதருடைய மகள்,
தாய் வழி சகோதரியுடைய மகள்.
🔲 5.உடன் பிறந்த சகோதரனுடைய மகள், தந்தை வழி சகோதரனின் மகள், தாய் வழி சகோதரியின் மகள்.
🔲 6.தந்தையுடன் பிறந்த சகோதரிகள்
🔲 7.தாயுடன் பிறந்த சகோதரிகள்.
ஆதாரம்:
حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاٰخِ وَبَنٰتُ الْاُخْتِ
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், ( 4:23)
👉 *திருமண உறவினால் தடுக்கப்பட்டவர்கள்*
🔲 1.தந்தையின் மனைவி
🔲 2.மகனுடைய மனைவி
🔲 3.மனைவியின் தாய்
🔲 4.மனைவியின் மகள்
🔲 5.பெண் தன் தாயின் கணவரை திருமணம் செய்யக்கூடாது.
ஆதாரம்
وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ
உங்கள் மனைவியரின் தாய்மார்களும் (தடுக்கப்பட்டவர்கள்)ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது.
(அல்குர்ஆன் : 4:23)
وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا وَسَآءَ سَبِيْلًا
முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
(அல்குர்ஆன் : 4:22)
👉 *பால்குடி உறவினால் தடுக்கப்பட்டவர்கள்*
🔲 1.பால்குடி தாய்
🔲 2. பால்குடி சகோதரி
🔲 3.பால்குடி சகோதரனின் மகள்
🔲 4.பால்குடி சகோதரியின் மகள்
🔲 5.தந்தையின் பால்குடி சகோதரி
🔲 6.தாயின் பால்குடி சகோதரி
🔲 7.மனையிடம் பால்குடித்த பெண்.
ஆதாரம்
وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ
உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும்,
(அல்குர்ஆன் : 4:23)
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் பிறப்பு இரத்த உறவு எந்த உறவுகளையெல்லாம் மணமுடிக்க தகாத நெருங்கிய உறவாக்குமோ, அந்த உறவு களையெல்லாம் பால்குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும். ( புகாரி 5099)
🥎 *2.குறிப்பிட்ட காலத்திற்காக தடுக்கப்பட்டவர்கள்*
இவர்கள் இரண்டு வகையில் வருவார்கள்.
முதல் வகையினர் ஒன்று சேர்வதினால் தடை செய்யப்பட்டவர்கள்,
🔲 1.உடன் பிறந்த சகோதரிகளை ஒருசேர திருமண பந்தத்தில் இணைப்பு.
وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ
இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - (அல்குர்ஆன் : 4:23)
🔲 2.ஒரு பெண்ணையும் அவளின் மாமியையும் அல்லது அவளின் சின்னம்மாவையும் ஒருசேர திருமண பந்தத்தில் இணைப்பது.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள், ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர தீவிரமாக்கி கொள்ளக்கூடாது....... புகாரி 5109
👉 *சில காரணத்திற்காக தடை செய்யப்பட்டவர்கள்.*
🔲 1.இத்தாவில் இருக்கும் ஒருவரின் மனைவியை மற்றொருவர் திருமணம் செய்ய கூடாது.
وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّکَاحِ حَتّٰى يَبْلُغَ الكتاب اجله
இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்;
(அல்குர்ஆன் : 2:235)
🔲 2.மூன்று தலாக் விடப்பட்ட பெண் வேறொருவரை திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டு பிறகு விவகாரத்து பெறாத வரையில் முன்னவர் திருமணம் செய்ய முடியாது.
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهٗ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يَّتَرَاجَعَآ اِنْ ظَنَّآ اَنْ يُّقِيْمَا حُدُوْدَ اللّٰهِ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
(அல்குர்ஆன் : 2:230)
🔲 3.இஹ்ராம் நிலையில் இருக்கும் போது செய்யக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள், இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்ய கூடாது, திருமணம் செய்து வைக்கப்படும் கூடாது, பெண் கேட்கவும் கூடாது. நூல் முஸ்லிம்.
🔲 4.முஸ்லிமான ஆண் காஃபிரான பெண்ணை திருமணம் செய்யக் கூடாது.
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;(அல்குர்ஆன் : 2:221)
இதில் வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
🔲 5.ஒரு முஸ்லிமான பெண் காஃபிரான ஆணை திருமணம் செய்யக் கூடாது.
وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; (அல்குர்ஆன் : 2:221)
நூல்:~
*அல்ஃபிக்ஹுல் முயஸ்ஸர்.*
No comments:
Post a Comment