*சூனியம் - ஸிஹ்ரு* (Part -5)
*மஸ்ஹூரா*
" *ஸிஹ்ரு செய்யப்பட்ட* ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும்... (17:47)
..."மூஸாவே! உம்மை *ஸிஹ்ரு செய்யப்பட்ட* வராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.(17:101)
..." *ஸிஹ்ரு செய்யப்பட்ட* மனிதரையே பின்பற்றுகிறீர்கள்''...(25:8)
"தீயசக்தியால் வசப்படுத்தப்பட்ட" மனிதர் என்ற அர்த்தத்தில்தான் இறைத்தூதர்களை "மஸ்ஹூரா" என்று மறுப்பாளர்கள் அழைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் வானத்தின் மேலேறிச் சென்று இறைவனின் அத்தாட்சிகளைப் பார்த்தாலும்கூட தங்கள் கண்கள் பார்க்கும் உண்மையை மறுப்பதற்கும் இதே மஸ்ஹூரா என்ற வார்த்தையைத்தான் மறுப்பாளர்கள் பயன்படுத்துவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் *ஸிஹ்ரு செய்யப்பட்ட* கூட்டமாகி விட்டோம்'' என்றே கூறுவார்கள். (15:14,15)
அதாவது, மறுப்பாளர்கள் வானத்தின் மேலேறிச் சென்று பார்க்கக்கூடிய அத்தாட்சிகள் அவர்களுக்கு உண்மைபோல தெரிவதற்குக் காரணம் அவர்கள் "தீயசக்தியால் வசப்படுத்தப்பட்டதால்தான்" என்று கூறி உண்மையை மறுப்பார்கள் என்கிறது குர்ஆன் வசனம்.
*ஸிஹ்ரு*
அல்லாஹ்வின் உதவியால் இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்களை "தீயசக்திகளின் செய்ல்" என்று அற்புதங்களை மறுத்தனர் மறுப்பாளர்கள்.
ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் உதவியால் நிகழ்த்திய அற்புதங்களை வெறும் "ஸிஹ்ரு"தான் என்றனர் மறுப்பாளர்கள்.
...என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான *ஸிஹ்ரு* தானே தவிர வேறில்லை'' என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது,...(5:110)
அத்தனை உண்மைகளையும் "தீயசக்திகளின் செயல்" என்று புறந்தள்ளினர் மறுப்பாளர்கள்.
மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது இது இட்டுக்கட்டப்பட்ட *ஸிஹ்ரைத்* தவிர வேறில்லை...என்றனர் (28:36)
பார்க்கும் வகையில் நமது சான்றுகள் அவர்களிடம் வந்தபோது "இது தெளிவான *ஸிஹ்ரு* என்றனர்"...
(10:76, 34:43, 37:15, 46:7, 43:30, 54:2, 61:6, 27:13, 10:77, 74:25, 28:48)
மறுப்பாளர்களின் கண்களுக்கு முன்னால் இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்களை "தீயசக்திகளின் செயல்" என்று கூறி அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுத்தனர்.
..."மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான *ஸிஹ்ரு* தானே தவிர வேறில்லை'' என்று மறுப்போர் கூறுகின்றனர்.(11:7)
மரணத்திற்குப் பிறகு உயிர்ப்பிக்கப்படுவோம் என்று சொல்வதும் "தீயசக்திகளின் செயல்" தான் என்று மறுமையைப் பொய்ப்படுத்தினர் மறுப்பாளர்கள்.
அம்மறுப்பாளர்களை நரகத்தில் கருகச்செய்யும்போது இதுதானா "தீயசக்திகளின் செயல்" என்று நீங்கள் கருதியது? என்று கூறப்படும் என குர்ஆன் வசனம் கூறுகிறது.
நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. இது ஸிஹ்ரா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா? (52:14,15)
ஆக, ஸிஹ்ரு என்பதை "தீயசக்திகளின் செயல்" என்ற அர்த்தத்தில் மறுப்பாளர்கள் கூறியதை குர்ஆனில் இருந்து அறியமுடிகிறது.
*ஸாஹிருன்*
அல்லாஹ்விடமிருந்து வந்த அத்தாட்சிகளைக் கண்டு இறைத்தூதர்களின் பின்னால் மக்கள் செல்லும்போது அந்த மக்களை தங்களுடைய முந்தைய மூட நம்பிக்கைகளிலேயே இருக்க வைப்பதற்காக இறைத்தூதர்களை "ஸாஹிருன்" என்று மறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அதாவது "ஸிஹ்ரு செய்பவர்" என்று பிரச்சாரம் செய்வார்கள்.
"இவ்விருவரும் "ஸிஹ்ரு செய்பவர்கள்". தமது ஸிஹ்ரின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழிமுறையை அழிக்கவும் நினைக்கின்றனர்'' எனக் கூறினர்.(20:63)
அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்டு தூதர்களை பின்பற்றும் மக்களை
"தீயசக்திகளைக் கொண்டு வசப்படுத்தியதாக" இறைத்தூதர்கள் மீது அவதூறு கூறினர் மறுப்பாளர்கள்.
அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். "இவர் பொய்யர்; ஸிஹ்ரு செய்பவர்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறினர்.(38:4)
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, ஸிஹ்ரு செய்பவர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.(51:52)
இறைத்தூதர்கள் அனைவரையும் "ஸாஹிருன்" என்று கூறாமல் மறுப்பாளர்கள் இருந்ததில்லை என்று குர்ஆன் சாட்சி பகர்கிறது. அதாவது, இறைத்தூதர்கள் "தீய சக்திகளைக் கொண்டு மக்களை வசப்படுத்தியதாகவே" மறுப்பாளர்கள் கூறியதை விவரிக்கிறது.
இறைத்தூதர்களை "ஸிஹ்ரு செய்யப்பட்டவர்கள்" என்றும், தூதர்கள் நிகழ்த்தும் அற்புதங்களை "ஸிஹ்ரு" என்றும், உண்மையின்பால் மக்களை தூதர்கள் ஈர்க்கும்போது அவர்களை "ஸாஹிருன்" என்றும் மறுப்பாளர்கள் கூறுவார்கள் என்பதை குர்ஆன் வசனங்கள் மூலம் அறியமுடிகிறது.
ரைட். விஷயத்துக்கு வருவோம். மஸ்ஹூரா என்ற வார்த்தையில் பீஜே போட்ட முடிச்சில் சலபுகளும் சிக்கித் தவிக்கத்தான் செய்கின்றனர்.
அந்த வார்த்தையில் பீஜே போட்ட முடிச்சை அவிழ்ப்பதற்காகத்தான் நாம் இத்தனை வசனங்களையும் மேலே பார்த்தோம்.
"சூனியத்தை உண்மை என்பவன் சுவனம் புக மாட்டான்" என்ற ஹதீஸில் போடப்பட்டிருக்கும் முடிச்சையும் அவிழ்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.
No comments:
Post a Comment