பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 12, 2019

வஸீலா” ☄ எதிர்வாதம் ☄*

          *✍🏻...

*☄பிரார்த்தனையின்*
                      *ஒழுங்குகள்

*☄வஸீலா” என்றால்*
                  *என்ன❓

        *☄ எதிர்வாதம் ☄*

*يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ‏*

*🏮🍂நபி (ஸல்) அவர்களின் பொருட்டாலும் மகான்களின் பொருட்டாலும் இறைவனிடம் “வஸீலா” தேடலாம் என்று கூறுபவர்கள்,*

_“இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பக்கம் ஒரு “வஸீலா”வைத் தேடிக்கொள்ளுங்கள்”_

*📖 (அல்குர்ஆன் 5:35) 📖*

_என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்._

*🏮🍂இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.*

_“வஸீலா”வுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது._

*🏮🍂இவ்வசனத்தின் துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே! என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள்.* “மகான்களும் “வஸீலா’ தேட வேண்டும்” என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

*🏮🍂நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் “வஸீலா” தேடும் கட்டளை உள்ளது.*

_இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன._

*☄இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!*

*☄அல்லாஹ்வின் பக்கம் ஒரு “வஸீலா”வைத் தேடிக் கொள்ளுங்கள்.*

*☄அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்.*

*🏮🍂இறைவனை அஞ்சுவதும் அறப்போர் செய்வதும் எப்படி நபி (ஸல்) அவர்களுக்கும் கடமையோ அதைப் போன்று தான் அல்லாஹ்வின் பக்கம் ஒரு “வஸீலா”வைத் தேடிக் கொள்வதும் அவர்கள் மீது கடமையாகும்.*

*🏮🍂எனவே, நபி (ஸல்) அவர்கள் “வஸீலா” தேடுவதற்கு எந்த மகானைப் பிடிப்பார்கள்❓ என்று சிந்தித்தால் இப்படி உளற மாட்டார்கள்.*

*🏮🍂மகான்கள் கூட “வஸீலா” தேடுகிறார்கள் என்று பின் வரும் வசனம் தெளிவாகவே கூறுகிறது.*

*اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ اِلٰى رَبِّهِمُ الْوَسِيْلَةَ اَيُّهُمْ اَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَهٗ وَيَخَافُوْنَ عَذَابَهٗؕ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا‏*

_*🍃இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமான வர்களே தமது இறைவனை நோக்கி “வஸீலா”வைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின் றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டிய தாகும்.*_

*📖 (திருக்குர்ஆன் 17:57) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment