*சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?* (Part -3)
இறைத்தூதர்கள் கேள்வியெழுப்பி சவால் விட்டதைப்போன்று நாமும் சவால் விடலாம் என்ற முடிவுக்கு பீஜே அவர்கள் வந்தது சரியானதுதானா என்பதைப் பார்ப்போம்.
ஒரு இனைவைப்பாளரிடம்,
உன்னுடைய கடவுளின் ஆற்றலை நிரூபித்துக்காட்டு என்று முஸ்லிம் ஒருவரால் கேள்வி எழுப்பப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அவரால் அவர் கூறும் கடவுளின் ஆற்றலை நிரூபித்துக் காட்ட முடியாது. உடனேயே அந்த இனைவைப்பாளர் பதிலுக்கு, நீ கூறும் அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபித்துக் காட்டு என்று கூறினால் அந்த முஸ்லிம் நபராலும் அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபித்துக்காட்ட முடியாது.
ஆனால், இறைத்தூதர்களைப் பார்த்து அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபித்துக் காட்டு! என்று மறுப்பாளர்கள் கூறும்போது அற்புதம் வேண்டி அல்லாஹ்விடம் துஆச் செய்வதற்கு வாய்ப்பு பெற்றவர்கள் இறைத்தூதர்கள். [அல்லாஹ் நாடினால் உடனடியாகவோ, தாமதாகவோ அல்லது, அந்த சமுதாயத்தை அழித்தோ
தனது ஆற்றலைக் காட்டுவான்]
அற்புதம் நிகழ்த்தி உனது ஆற்றலைக் காட்டு! என்று அல்லாஹ்விடம் வலியுறுத்துவதற்கு நமக்கு வாய்ப்பு ஏதும் இல்லை. அதாவது, இறைத்தூதர்களுக்கு இருந்த வாய்ப்பு நமக்கு கிடையாது.
நீங்கள் வணங்குபவைகளுக்கு ஆற்றல் இருக்கிறதா? என்று இறைத்தூதர்கள் இனைவைப்பாளர்களிடம் கேட்டதைப்போல் நாமும் கேட்க முடியாது.
அதையும் மீறி பீஜே அவர்கள் கூறுவதைப் போன்று நாமும் கேட்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு கிடைக்கக்கூடிய பதில்களை பார்ப்போம்.
கேள்வி : நீங்கள் வணங்குபவைகளுக்கு ஆற்றல் இருக்கிறதா?
பதில் (1) : ஆம், அவற்றிற்கு ஆற்றல் இருக்கிறது, நாங்கள் கேட்டதை அவை எங்களுக்கு வழங்குகின்றன.
உங்களுக்கு சந்தேகமிருந்தால் நீங்களும் எங்கள் தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் கேட்டதை எங்களுடைய தெய்வங்களால் தரமுடியவில்லையென்றால் அவை சக்தியற்றவை என அப்போது நாங்களும் நம்புவோம்.
பதில் (2) : எங்களுடைய தெய்வங்களுக்கு சக்தி இருக்கிறதா என்று கேலி செய்கிறீர்களா! அப்படியென்றால் நீங்கள் கூறும் அல்லாஹ்வுக்கு சக்தி இருக்கிறதா என்று நிரூபித்து காட்டுங்கள். அப்போது அல்லாஹ்வை நாங்களும் நம்புவோம்.
கிடைத்த இந்த இரண்டு பதில்களையும் வைத்து நாம் என்ன செய்ய முடியும்?
அவர்களுடைய தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்து, அவை சக்தியற்றவை என்று நாம் நிரூபிக்க வேண்டுமா?
அதாவது, நாம் ஒரு இனைவைப்பு காரியத்தை செய்துதான் அவர்களுடைய தெய்வங்களுக்கு ஆற்றல் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமா?
அல்லாஹ்வுடைய ஆற்றலை அற்புதம் மூலம் காட்டு என்று நாம் அல்லாஹ்விடம் வலியுறுத்தி பிரார்த்திக்க முடியுமா?
முதலாவது பதிலை எதிர்கொள்வதாக இருந்தால் இனைவைக்க நேரிடும்.
இரண்டாவது பதிலை எதிர்கொள்வதாக இருந்தால், அவர்களுடைய தெய்வங்களுக்கு ஆற்றல் இல்லை என்பதுபோலவே அல்லாஹ்வுக்கும் ஆற்றல் இல்லை (நவூதுபில்லாஹ்) என்பதை ஏற்பதாக ஆகிவிடும்.
பிறருடைய தெய்வங்களுக்கு ஆற்றல் இருக்கிறதா என்று இறைத்தூதர்கள் கேட்ட கேள்வி அறிவுபூர்வமானது. அதே கேள்வியை நாம் கேட்டால் அது அறிவீனமானது. இறைத்தூதர்கள் கேள்வி கேட்டதுபோலவே நாமும் கேட்கலாம் என்று பீஜே கூறியது அறிவற்றத்தனமானது.
இறைத்தூதர்கள் கேட்ட அனைத்து கேள்விகளையும் நாமும் கேட்க முடியாது என்ற நிலையில், அந்த கேள்விகளை ஆதாரமாக வைத்து சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா என்று பீஜே அவர்கள் கேட்ட கேள்வி ஒரு அறிவீனமான கேள்வி. முடிந்தால் அந்த சூனியத்தை எனக்கெதிராக செய்யுங்கள் என்று அவர் சவால் விட்டது ஒரு அடிமுட்டாள்தனமானது.
இந்த கேள்விக்கு கிடைத்த பதில்களைப் பார்ப்போம்.
பீஜே : சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?
பதில் : ஆம், ஆற்றல் இருக்கிறது.
பீஜே : சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
பதில் : பல வருடங்கள் குழந்தை இல்லாதவருக்கு சூனியம் செய்த பிறகு குழந்தை பிறந்தது. அநியாயம் செய்த ஒருவனுக்கு எதிராக சூனியம் செய்தபோது விபத்தில் அவனது கை முறிந்தது. இன்னொருவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. ஆகையால் சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறது.
பீஜே : இவையெல்லாம் விதிப்படி நடந்தவை. சூனியத்தால் நடக்கவில்லை.
சூனியத்திற்கு ஆற்றல் இல்லை.
பதில் : சூனியத்திற்கு ஆற்றல் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். சூனியத்திற்கு ஆற்றல் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம். பல வருடங்கள் குழந்தை இல்லாத ஒருவருக்கு சூனியம் செய்யுங்கள். நீங்கள் சூனியம் செய்தும் அவருக்கு குழந்தை பிறக்காவிட்டால் சூனியத்திற்கு ஆற்றல் இல்லை என்று நாங்களும் நம்புகிறோம்.
பீஜே : ???!!!
இந்த பதிலிற்கு என்ன சொல்வார் பீஜே?
ஐயோ! என்னை சூனியம் செய்யச் சொல்கிறார்களே! என்னை குஃப்ரை செய்யச் சொல்கிறார்களே!! என்று முதலைக் கண்ணீர் விடுவதைத் தவிர்த்து அவருக்கு வேறு வழியில்லை.
பீஜே அவர்களின் அடுத்த ஆயுதம், சூனியத்திற்கு ஆற்றல் இருந்தால் அதை தனக்கெதிராக பிரயோகிக்கச் சொல்லி சவால் விடுவது.
இந்த சவாலில் இருக்கும் அறிவீனத்தை அறியாமலேயே
ஏழரை லட்சம் உறுப்பினர்களும் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
சவால் விடுவதில் என்ன அறிவீனம் இருக்கிறது என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.
அதைப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.
No comments:
Post a Comment