பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 1, 2019

பெண்கள் கட்டாயம் முகத்தை - 1

*🧕🧕🧕மீள் பதிவு🧕🧕🧕*

*🧕🧕🧕பெண்கள் கட்டாயம் முகத்தை மறைக்க வேண்டுமா ❓ ❓ ❓ ஓர் இஸ்லாமிய பார்வை🧕🧕🧕*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு 👇👇👇👇👇*

             *பாகம் 1*

*ஜில்பாப்*

என்பது முகத்தை மறைக்கும் ஆடை என்று இவர்கள் கொடுக்கும் விளக்கமே இந்த வாதத்திற்கு அடிப்படையாகும்.

*ஜில்பாப் என்ற சொல்லுக்கு அகராதி நூல்களில்*

தலை மீது போட்டுக் கொள்ளும் கிமார் எனும் முக்காட்டை விட பெரிய துணி என்றும்,

*ஆடைக்கு மேல் போர்த்திக் கொள்ளும் மேலங்கி என்றும்,*

கைலி போன்ற ஆடை என்றும்,

*உடலை முழுமையாக மறைக்கும் ஆடை என்றும்*

பல அர்த்தங்கள் உள்ளன.

பெண்கள் தமது முகம் உட்பட அனைத்து உறுப்புக்களையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடையோர் உடல் முழுவதும் மறைக்கும் ஆடை என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டு வாதிடுகின்றனர்.

ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருந்தால் குறிப்பிட்ட இடத்தில் எது பொருத்தமான அர்த்தம் என்று கவனித்துத் தான் அதற்குப் பொருள் செய்ய வேண்டும். அகராதியில் இருக்கிறது என்பதற்காக நாம் விரும்புகின்ற ஒரு அர்த்தத்தைச் செய்யக் கூடாது. இந்த அடிப்படையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இவ்வசனத்தில் *(திருக்குர்ஆன் 33:59)* பயன்படுத்தப்பட்டுள்ள ஜில்பாப் என்ற சொல்லுக்கு முழு உடலையும் மறைக்கும் ஆடை என்று பொருள் செய்ய முடியாது. தலையில் போட்டு மார்பில் தொங்க விடும் ஆடை என்ற அர்த்தம் தான் செய்ய வேண்டும். இப்படித்தான் பொருள் செய்ய வேண்டும் என்று இவ்வசனமே நமக்கு வழிகாட்டுகிறது.

*முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.*

*ஜில்பாப்* எனும் ஆடை இரண்டு அம்சங்களைக் கொண்டது என இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

*ஜில்பாப்* அணிவதால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பது முதல் விஷயம்.

*அவர்கள் அறியப்பட வேண்டும் என்பது இரண்டாவது விஷயம்* .

ஜில்பாப் எனும் மேலங்கி ஆண்களால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும். *அவர்கள் யார் என்று அறியப்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் மேற்கண்ட வசனத்தில் உள்ள இரு அம்சங்கள்.*

பொதுவாகப் பெண்கள் தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டுவதுதான் ஆண்களால் அவர்கள் தொல்லைப்படுத்தப்படுவதற்கு முதல் காரணமாக உள்ளது. ஆடை அணிந்த பின்னர் மார்பகங்கள் மீது மேலங்கியைப் போட்டுக் கொண்டால் அந்த நிலை நீங்கி விடும்.

அதே நேரத்தில் முகத்தின் மீது மேலங்கியைப் போட்டுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு போட்டுக் கொண்டால் அவர்கள் அறியப்படுவது அவசியம் என்ற இரண்டாவது அம்சம் அடிபட்டு போய்விடும்.

*யார் என்று அறியப்படும் வகையில் தான் பெண்களின் ஆடை இருக்க வேண்டும் என்று இவ்வசனம் தெளிவாகக் கட்டளையிடுகிறது. ஒருவர் யார் என்று அறியப்படுவதற்கு முகம் திறந்திருப்பது அவசியமாகும்.* முகத்தை வைத்துத் தான் இன்னார் என்று அறிய முடியும்.

*அல்குர்ஆன் 24:31* வசனத்தில் தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் என்று சொல்லப்படுவதும் இதையே குறிக்கிறது.

*ஜில்பாப்* என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து கொள்ள *ஜில்பாப்* என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள சில ஹதீஸ்களை நாம் துணையாகக் கொள்ளலாம்.

*உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:*

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். தொழும் இடத்திலிருந்து மாதவிடாயுள்ள பெண்கள் விலகியிருக்க வேண்டும் (என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள ஜில்பாப் (மேலங்கி) இல்லையே (அவள் என்ன செய்வாள்?) என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளுடைய தோழி தனது ஜில்பாப்களில் (மேலங்கிகளில்) ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும் என்றார்கள்.

*நூல் : புகாரி 351*

*திருக்குர்ஆன் 33:59* வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள *ஜில்பாப்* என்ற சொல்லே இந்த ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு அவர்கள் *ஜில்பாப்* அணிவது அவசியம் என்றும் *ஜில்பாப்* இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

பெருநாள் தொழுகைக்கு வரும் பெண்கள் *ஜில்பாப்* போட்டுக் கொண்டு தான் வர வேண்டும் என்பது இதில் இருந்து தெரிகிறது. *ஜில்பாப்* அணிந்த பின்னரும் பெண்களின் முகம் திறந்து இருந்துள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் பாங்கும், இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும், இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும், நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் 'தர்மம் செய்யுங்கள்! நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகுகள் ஆவீர்கள்' என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து, ஏன் (இந்த நிலை) அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.

*நூல்: முஸ்லிம் 1607*

*முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே*

*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 2*

No comments:

Post a Comment