பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

சூனியம் - ஸிஹ்ரு* (Part - 6)

*சூனியம் - ஸிஹ்ரு* (Part - 6)

"சூனியத்தை உண்மை என்பவன் சுவனம் புக மாட்டான்" என்ற ஹதீஸை புரிந்து கொள்வதிலும் பல முடிச்சுக்களை போட்டுவைத்திருக்கின்றனர். அவற்றையும் அவிழ்ப்போம்.

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا *مُؤْمِنٌ بِسِحْرٍ* وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், *சூனியத்தை உண்மை என்பவன்*, (பெற்றோருக்கு) மாறு செய்பவன்" ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். (அஹ்மது 26212)

முஃமினுன் பி ஸிஹ்ரி (مُؤْمِنٌ بِسِحْرٍ) என்ற வார்த்தைதான் பீஜே மற்றும் ஸலபுகளால் முடிச்சிடப்பட்ட வார்த்தை.

முஃமினுன் பி ஸிஹ்ரி என்றால் "ஸிஹ்ரை ஈமான் கொண்டவர்" என்று நேரடி அர்த்தம் வருகிறது. இதற்கு, "ஸிஹ்ரை உண்மைபடுத்துபவர்" என்று அர்த்தம்.

"ஸிஹ்ரை உண்மைபடுத்துபவர்" என்றால் என்ன அர்த்தம்?

இதில்தான் புரிதல் குழப்பம் இருக்கிறது. இதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.

*பெண்களின் ஸிஹ்ரு*

சில பெண்கள் பார்வையாலே சில ஆண்களை வீழ்த்தி விடுகிறார்கள் என்பதையும், அந்த பார்வையால் கவரப்பட்டு அவள் பின்னாலே ஆண் சென்று விடுகிறான் என்பதையும்,  பெண்களின் பார்வையால் வசீகரிக்கப்பட்டு ஏமாற்றப்படும் ஆட்களையும் கேள்விப்படுகிறோம்.

** ஒரு பெண் தனது கண்களால் ஆண்களை வசப்படுத்துவதையும் அரபு மொழியில் "ஸிஹ்ரு" என்பார்கள். (المَرْآةُ تَسْحَرُ النَّاسَ بِعَيْنِهَا)

இதன் மூலம் நாம் அறிவது...

(1) பெண்னின் கண்களில் ஸிஹ்ரு இருக்கிறது என்பது உண்மை.

(2) பெண், தனது கண்களால் ஸிஹ்ரு செய்கிறாள் என்பது உண்மை.

(3) பெண்னின் அந்த ஸிஹ்ரில் தாக்கம் இருக்கிறது என்பது உண்மை.

(4) அந்த ஸிஹ்ரில் ஆண்கள் வசப்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை.

இந்த ஸிஹ்ரை உண்மைபடுத்தியவரை அந்த ஹதீஸ் குறிக்கவில்லை.

*மேஜிக் எனும் ஸிஹ்ரு*

நம்முடைய கற்பனைக்கெட்டாத வகையிலெல்லாம் தந்திரம் செய்து வித்தைகாட்டக் கூடிய மேஜிசியன் இருப்பதை அறிந்திருக்கிறோம். மேஜிக் செய்பவர்களின் வித்தை நமது கண்களை நம்மாலேயே நம்ப முடியாத ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதையும் அறிந்திருக்கிறோம்.

** மேஜிக் நிகழ்ச்சிகளில் தந்திரம் செய்யப்படுவதையும் அரபு மொழியில் "ஸிஹ்ரு" என்பார்கள்.

இதன் மூலம் நாம் அறிவது...

(1) மேஜிக் எனும் தந்திரத்தில் ஸிஹ்ரு இருக்கிறது என்பது உண்மை.

(2) மேஜிக் செய்பவன் தனது தந்திரத்தால்
ஸிஹ்ரு செய்கிறான் என்பது உண்மை.

(3) மேஜிக் செய்பவனின் அந்த ஸிஹ்ரில் தாக்கம் இருக்கிறது என்பது உண்மை.

(4) அந்த ஸிஹ்ரில் பார்வையாளர்கள் வசப்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை.

இந்த ஸிஹ்ரை உண்மைபடுத்துபவரை அந்த ஹதீஸ் குறிக்கவில்லை.

*பேச்சில் ஸிஹ்ரு*

பேச்சின் மூலம் பிறரை மயக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. தனது பேச்சின் மூலம் ஏழரை லட்சம் உறுப்பினர்களையும் கட்டிப்போட்டிருந்த பீஜே அவர்களும் இதற்கு ஒரு உதாரணம்தான்.

** பேச்சின் மூலம் பிறரை கவிழ்ப்பதையும் "ஸிஹ்ரு" என்று ஹதீஸ் இருக்கிறது. (நபிமொழி : إِنَّ مِنَ البَيَانِ لَسِحْرًﺍ)

இதன் மூலம் நாம் அறிவது...

(1) பேச்சில் ஸிஹ்ரு இருக்கிறது என்பது உண்மை.

(2) பேசுபவன் தனது பேச்சினால்
ஸிஹ்ரு செய்கிறான் என்பது உண்மை.

(3) பேசுபவனின் அந்த ஸிஹ்ரில் தாக்கம் இருக்கிறது என்பது உண்மை.

(4) அந்த ஸிஹ்ரின் மூலம் கேட்பவர்கள் வசப்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை.

இந்த ஸிஹ்ரை உண்மைபடுத்துபவரை அந்த ஹதீஸ் குறிக்கவில்லை.

பிறகு எந்த ஸிஹ்ரைத்தான் அந்த ஹதீஸ் குறிக்கிறது என்று யாரோ கோபமாக கேட்பது காதில் விழுகிறது!

வரலாற்றின் பின்னோக்கி கொஞ்சம் போவோம், முடிச்சுக்களை அவிழ்ப்போம்.

மதீனாவில் இருந்த பல குழுக்களுக்குள் குழப்பம் ஏற்பட்டபோது, மக்காவில் இருந்த நபி(ஸல்) அவர்களிடம் மதீனாவின் தலைமையை ஏற்று குழப்பத்திற்கு முடிவு கட்டுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இறை கட்டளையின் பிரகாரம் நபி(ஸல்) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜிரத் செய்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் தலைமையை பல குழுக்களும் ஏற்றுக் கொண்டதால் வேறுவழியின்றி சிலர் ஏற்பதுபோல் நடிக்கவும் செய்தனர். (அவர்கள்தான் நயவஞ்சகர்கள்). நபி(ஸல்) அவர்களின் தலைமையை ஏற்க விரும்பாததை பகிரங்கப்படுத்திய ஒரு  குழுவும் இருந்தது. அதுதான் யூதர்களின் குழு.

நபிகளாரின் செல்வாக்கும் இஸ்லாமும் வளர்வதை சகிக்க முடியாத யூதர்கள் தங்களிடமிருந்த "சூனியக் கலை"யின் மூலமாக முஸ்லிம்களுக்கு சூனியம் வைத்துவிட்டதாக பரப்பினர். இந்த சூனியத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு குழந்தை பிறக்காது என்றும் பரப்பப்பட்டது.

"யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது“ என்று பலராலும் கூறப்பட்ட நிலையில் ஒரு குழந்தை பிறந்ததற்கு முஸ்லிம்கள் மகிழ்ந்ததாக ஹதீஸ் கூறுகிறது. (புஹாரி 5469)

ரைட். நாம் பார்க்க வேண்டியது யூதர்களின் சூனியம் பொய்யாகப் போனதைப் பற்றியல்ல,

சூனியம் செய்யப்பட்டால் அதன்மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை அந்த மக்களிடம் இருந்ததைப் பற்றித்தான் நாம் பார்க்க வேண்டும். மக்களிடம் இந்த நம்பிக்கையை யூதர்கள் எப்படி ஏற்படுத்தினார்கள்?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment