*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 இஸ்லாமிய 🔥*
⤵
*🔥 ஒழுங்குகள் 🔥*
*✍🏻...
*☄ஓதிப்பார்த்தலின்*
*ஒழுங்குகள்
*☄ வலக்கரத்தால் வலியுண்டான இடத்தைத் தடவி ஓதிப்பார்த்தல் ☄*
ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻋﻠﻲ، ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ، ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﺣﺪﺛﻨﻲ ﺳﻠﻴﻤﺎﻥ، ﻋﻦ ﻣﺴﻠﻢ، ﻋﻦ ﻣﺴﺮﻭﻕ، *ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﻳﻌﻮﺫ ﺑﻌﺾ ﺃﻫﻠﻪ، ﻳﻤﺴﺢ ﺑﻴﺪﻩ اﻟﻴﻤﻨﻰ -[133]- ﻭﻳﻘﻮﻝ: «اﻟﻠﻬﻢ ﺭﺏ اﻟﻨﺎﺱ ﺃﺫﻫﺐ اﻟﺒﺎﺱ، اﺷﻔﻪ ﻭﺃﻧﺖ اﻟﺸﺎﻓﻲ، ﻻ ﺷﻔﺎء ﺇﻻ ﺷﻔﺎﺅﻙ، ﺷﻔﺎء ﻻ ﻳﻐﺎﺩﺭ ﺳﻘﻤﺎ»* ﻗﺎﻝ ﺳﻔﻴﺎﻥ: ﺣﺪﺛﺖ ﺑﻪ ﻣﻨﺼﻮﺭا، ﻓﺤﺪﺛﻨﻲ، ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻣﺴﺮﻭﻕ، ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻧﺤﻮﻩ
_*🍃ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து,*_
_அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்_
என்று பிரார்த்தித்தார்கள்.
*(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!)*
*📚 நூல்: புகாரி 5743 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ஓதி, கைகளில்*
*ஊதித் தடவுதல்*
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، *عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ نَفَثَ فِي كَفَّيْهِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَبِالْمُعَوِّذَتَيْنِ جَمِيعًا، ثُمَّ يَمْسَحُ بِهِمَا وَجْهَهُ، وَمَا بَلَغَتْ يَدَاهُ مِنْ جَسَدِهِ. قَالَتْ عَائِشَةُ فَلَمَّا اشْتَكَى كَانَ يَأْمُرُنِي أَنْ أَفْعَلَ ذَلِكَ بِهِ. قَالَ يُونُسُ كُنْتُ أَرَى ابْنَ شِهَابٍ يَصْنَعُ ذَلِكَ إِذَا أَتَى إِلَى فِرَاشِهِ.*
_*🍃ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதி, தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.*_
*📚 நூல்: புகாரி 5748 📚*
_இவ்வாறு மூன்று தடவை செய்வார்கள் என புகாரி 5018வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது._
*🏮🍂நோயுற்றவர் தாமாகவே இந்த அத்தியாயங்களை ஓதி தம்மீது தடவிக் கொள்ளலாம். நபியவர்கள் தாம் நோயுற்ற போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்கு ஓதிப்பார்க்குமாறு வேண்டியுள்ளதால் நாமும் மற்றவர்களிடம் அவ்வாறு தமக்குச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளலாம்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
⤵⤵⤵
✍🏼...
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment