*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 இஸ்லாமிய 🔥*
⤵
*🔥 ஒழுங்குகள் 🔥*
*✍🏻...
*☄பிரார்த்தனையின்*
*ஒழுங்குகள்
*☄மகான்கள் பொருட்டால்*
*கேட்கக் கூடாது
*☄ முட்டாள்தனம் ☄*
*🏮🍂மகான்களே அல்லாஹ்விடம் நெருக்கத்திற்காக “வஸீலா”வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது அவர்களை “வஸீலா”வாகக் கொள்ளலாம் என்பது முட்டாள் தனமாகும்.* தன்னுடைய வயிற்றுக்கே சோறு இல்லாதவனிடம் எனக்கு பிச்சை போடு என்று கேட்பது போன்றதாகும்.
*🏮🍂இறந்து விட்ட நல்லடியார்களின் பொருட்டால் “வஸீலா” தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன் வைக்கின்றார்கள்.*
1010- حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الأَنْصَارِيُّ ، قَالَ : حَدَّثَنِي أَبِي عَبْدُ اللهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَنَسٍ ، *عَنْ أَنَسٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ، فَقَالَ : اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ.*
_அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:_
_*🍃 மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் போது உமர் (ரலி), அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக! என்று உமர் (ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.*_
*📚 நூல்: புகாரி 1010, 3710 📚*
*🏮🍂இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ அல்லது மகான்களையோ “வஸீலா”வாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான சான்றாகும்.*
*🏮🍂அதாவது, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவே தான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.* மேலும், அவர்கள் தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.
*🏮🍂அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி (ஸல்) அவர்களை “வஸீலா”வாகக் கொள்ளவில்லை.* இதிலிருந்தே இறந்துவிட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் *அவர்களை “வஸீலா”வாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.*
*🏮🍂நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிறுத்தி இறைவனிடம் மழைக்காகப் பிரார்த்திக்கிறார்கள்.* இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
*🏮🍂அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத் தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிறுத்தி இருக்கலாம்.*
*🏮🍂சிறந்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ் (ரலி) அவர்களை விட உமர் (ரலி) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர் (ரலி) அவர்கள் முன்னிறுத்தப் படவில்லை.*
*🏮🍂இதிலிருந்தே மகான்களை “வஸீலா”வாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது. உமர் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிறுத்தியது அவர்களுடைய பணிவைக் காட்டுகிறது.*
*🏮🍂உமர் (ரலி) சிறந்தவராக இருந்தும் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிறுத்தியதைப் போன்று, இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் சாதாரண ஒரு மனிதரை முன்னிறுத்துவார்களா❓*
*🏮🍂இறந்தவர்களையோ மகான் களையோ “வஸீலா”வாகக் கொள்ளலாம் என்பதற்கும் இந்த செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம்.*
*🏮🍂எனவே, நல்லறங்களைத் தான் நாம் இறைவனை நெருங்குவதற்குரிய “வஸீலா”வாகக் கொள்ள வேண்டும். இதுவே தெளிவான நபிவழியாகும்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
⤵⤵⤵
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment