*ஸிஹ்ரு - சூனியம்* (part -2)
பீஜே சூனியம் வைத்தாரா? என்பதைப் பார்ப்போம்.
ஸிஹ்ரு (سِحْرُ) என்ற அரபு வார்த்தைக்கு இணையான வார்த்தையாகத்தான் நாம் சூனியம் என்று கூறுகிறோம்.
தமிழில் சூனியம் என்று நாம் சொல்லும்போது அது இரண்டுவிதத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
சூனியம் என்றால் "ஒன்றுமில்லாமை" என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. இதற்கும் அரபு மொழியின் "ஸிஹ்ரு" என்பதற்கும் சம்பந்தமில்லை. [சம்பந்தம் இல்லாத இந்த அர்த்தத்தையும் சம்பந்தப்படுத்துவார் பீஜே]
பில்லி, ஏவல், செய்வினை, வசியம், மாயம், மந்திரம் போன்ற அமானுஸ்யங்களை குறிப்பதற்கும் "சூனியம்" என்ற வார்த்தையே பயன்படுகிறது. இந்த அர்த்தத்தில்தான் ஸிஹ்ரு என்ற அரபு வார்த்தை சூனியம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.
ஸிஹ்ரு (سِحْرُ) என்ற அரபு வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருந்தாலும் மூன்று பிரதான அர்த்தங்களில் அது கையாளப்படுகிறது.
(1) பார்ப்பவர் கண்களை தந்திரமாக
மயக்குதல் (மேஜிக்)
(2) பேச்சின் மூலம் கேட்பவர் சிந்தனையைக் கவர்தல் (பயான்)
(3) தீய சக்திகள் மூலம் அமானுஷ்யங்களை நிகழ்த்துதல் (சூனியம்)
இந்த மூன்று அர்த்தங்களுள் இரண்டாவதான "பயான்" மூலம் ஸிஹ்ரு செய்தார் பீஜே.
நபிமொழி: إِنَّ مِنَ البَيَانِ لَسِحْرًﺍ
"நிச்சயமாக, பயானில் ஸிஹ்ரு இருக்கிறது" என்ற நபிமொழியை உண்மைப்படுத்தும் விதமாக தன்னுடைய பயான்(பேச்சு) மூலம் ஏழரை லட்ச உறுப்பினர்களுக்கும் "ஸிஹ்ரு" செய்தார் பீஜே. அவருடைய ஆழ் மனதில் தோன்றிய எண்ணங்களையெல்லாம் பயான் செய்தார்.
"ஸிஹ்ரு" என்ற வார்த்தையை மேஜிக் என்ற அர்த்தத்தில்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். அவ்வாறாக அல்லாமல் ஸிஹ்ரு என்ற வார்த்தையை சூனியம் என்று புரிந்து கொண்டால் "சூனியத்திற்கு தாக்கம் உண்டு" என்று ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் வந்துவிடும் என்றார்.
சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்றும்,
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்பும்போது கீழ்வரும் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றார்.
👇👇👇👇
**அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றத்தைச் செய்யும் நிலை ஏற்படுகிறது.
**திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படுகிறது.
**நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்பினால் திருக்குர்ஆனின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படுகிறது.
**நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.
என்றெல்லாம் பயான் செய்தார். இது hypothetical assumption என்ற உச்சகட்ட கற்பனை.
நடக்காத ஒரு கருத்தை உருவாக்கி வைத்து, அந்த கருத்தையே திரும்பத் திரும்ப பேசச் செய்து, அந்த கருத்திற்கேற்றவாரு துனைக் கேள்விகளை எழும்பச் செய்து, பெரும் அச்சத்தை உருவாக்கும் ஒருவித மனநோய்தான் அந்த கற்பனை.
இதுபோன்ற கற்பனைகள் வரலாற்றின் நெடுகிலும் காணப்படத்தான் செய்கிறது. முந்தயைகால அறிஞர்கள் பலராலும் பல கற்பனை கருத்துக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த கற்பனைகளெல்லாம் அந்த அறிஞர்களின் தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கப்பட்டது. பீஜே அவர்கள் தோற்றுவித்த இந்த கற்பனை கருத்து, ஏழரை லட்சம் உறுப்பினர்களின் மார்க்கமாகவே மாறிவிட்டதுதான் சூனிய சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.
வசம்பைச் சுட்டு கிளியின் நாக்கில் தேய்த்து பேசுவதற்கு பழக்கப்படுத்தினால் நாம் பேசுவதையே கிளியும் திரும்பப்பேசுமாம். அதுபோல, தனது சூனியப் பேச்சின் மூலம் ஏழரை லட்சம் உறுப்பினர்களின் நாக்கிலும் தன்னுடைய சூனியக் கருத்தையே பேசவைத்தார் பீஜே.
பீஜே அவர்களின் சூனியப் பேச்சு தாக்கம் பெறத் துவங்கியது. அதாவது, பீஜேவின் சூனியம் வேலை செய்யத் தொடங்கியது.
இன்ஷா அல்லாஹ் சூனிய முடிச்சுக்களை அவிழ்ப்போம்... தொடரும்...
பிறை மீரான்
Part - 1
https://m.facebook.com/story.php?story_fbid=674934749596330&id=100012394330588
No comments:
Post a Comment