பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, September 6, 2019

பணிவோடு பிரார்த்திக்க வேண்டும

*☄பிரார்த்தனையின்*
                      *ஒழுங்குகள் { 02 }*

*☄பணிவோடு*
          *பிரார்த்திக்க வேண்டும்*

*🏮🍂பிரார்த்தனை செய்யும் போது, அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.*

*اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ۚ‏*

_*🍃உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.*_

*📖 (அல்குர்ஆன் 7:55) 📖*

*اِذْ نَادٰى رَبَّهٗ نِدَآءً خَفِيًّا‏*

_*🍃அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.*_

*📖 (அல்குர்ஆன் 19:3) 📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄உறுதியான*
            *நம்பிக்கையுடன்*
                 *கேட்க வேண்டும்*

*🏮🍂பிரார்த்தனை செய்யும் போது “இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.*

*وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا‌ ؕ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ‏*

_*🍃அச்சத்துடனும், நம்பிக்கை யுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.*_

    *📖(அல்குர்ஆன் 7:56)📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄வலியுறுத்திக் கேட்க வேண்டும்*

*🏮🍂இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, “நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்” என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, “இதை நீ தந்து தான் ஆக வேண்டும்;* உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது” என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

6338- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ ، *عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمِ الْمَسْأَلَةَ ، وَلاَ يَقُولَنَّ اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي فَإِنَّهُ لاَ مُسْتَكْرِهَ لَهُ*

_*🍃“நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை” என்று நபியவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                   *அனஸ் (ரலி),*

      *📚நூல்: புகாரி 6338)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

                            ⤵⤵⤵
                

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment