பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 16, 2019

ஹாஜி-யார்❓

*☪☪மீள் பதிவு☪☪*

*👹👹👹மார்க்கத்தின் எச்சரிக்கை👹👹👹*

*🛑🛑🛑பித்அத் ஒரு வழிகேடு உங்களை அது நரகத்தில் தள்ளி விடும்🔵🔵🔵*

*🌎🌎இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்🌎🌎*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும் 📚📚📚ஸஹியான📚📚📚 ஹதீஸ்📚📚📚 ஆதாரங்களில் இருந்து📚📚📚*

*🕋🕋ஹாஜி-யார்❓ விளம்பரத்தால் வீணாகும் வணக்கங்கள்🕋🕋*

*✍✍✍இன்று திறப்பு விழா காணும் பிரியாணி ஹோட்டல் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று விளம்பர போஸ்டர்கள் வீதிகளில் ஒட்டப்படுவதைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்தப் போஸ்டர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக, காசிம் மரைக்காயரின் ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று வழியனுப்பு விழா போஸ்டர்களும், ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும் போது, ஹாஜி பக்கீர் லெப்பையை வரவேற்கிறோம் என்று வரவேற்பு போஸ்டர்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்படுகின்றன.✍✍✍*

🕋🕋🕋ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் கடமையாகி விடாது. யாருக்கு ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கு வசதியிருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்வது கடமையாகும்.🕋🕋🕋

فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

*✍✍✍அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.✍✍✍*

*(அல்குர்ஆன் 3:97)*

📕📕📕பொதுவாகவே வணக்கங்கள் அனைத்தையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டும். அதில் முகஸ்துதி, விளம்பர நோக்கு கலந்து விடக் கூடாது.📕📕📕

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ  ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ‌ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ‏

*✍✍✍வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.✍✍✍*

*(அல்குர்ஆன் 98:5)*

قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۙ‏
وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِيْنَ‏
قُلْ اِنِّىْۤ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّىْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِيْنِىۙ‏

📘📘📘வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் எனக் கூறுவீராக! என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்றும் கூறுவீராக! உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக!📘📘📘

*(அல்குர்ஆன் 39:11-14)*

*✍✍✍இந்த வசனங்கள் அனைத்தும் வணக்கத்தைக் கலப்பற்றதாக்கி வணங்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அதில் கொஞ்சம் கூட கலப்பு இருக்கக் கூடாது.*
*ஆனால் இன்று வியாபாரத்தை விளம்பரப் படுத்துவது போல் ஹஜ்ஜையும் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக பொருட்செலவு செய்து, பெரும் சிரமத்துடன் செய்கின்ற பெரும்பாலானவர்களின் ஹஜ் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லாமல் போவதைப் பார்க்க முடிகின்றது.✍✍✍*

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ

📙📙📙ஹஜ்ஜைப் பற்றி இறைவன் கூறும் போது, அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! *(அல்குர்ஆன் 2:196)* என்று கூறுகின்றான்.📙📙📙

*✍✍✍அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்க பெரும்பாலும் ஹஜ் உம்ராவை நிறைவேற்றுபவர்கள் விளம்பர நோக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதைப் பார்க்க முடிகின்றது.✍✍✍*

*🌐🌐விருந்து வைபவங்கள்🌐🌐*

📗📗📗இன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் வீடு வீடாகச் சென்று நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன், நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன் என்று பயணம் சொல்லும் வழக்கம் இருக்கின்றது. இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான தொழுகைக்கு ஒருவர் போகும் போது யாரிடமும் சென்று, நான் தொழுகைக்குப் போகின்றேன் என்று கூறுவதில்லை. அதுபோல் நான் நோன்பு வைக்கப் போகின்றேன் என்று யாரிடமும் போய் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அதுபோன்ற கடமைகளில் ஒன்றான, அதே சமயம் வசதி படைத்தவர்கள் மட்டும் செய்யும் கடமையான ஹஜ்ஜுக்கு மட்டும் இவ்வாறு சொல்கின்றார்கள் என்றால் தங்களது செல்வத்தைத் தம்பட்டம் அடிப்பதாகவே இது அமையும் என்பதில் சந்தேகமில்லை📗📗📗
.

*✍✍✍ஹஜ்ஜுக்குப் போகும் போது உயிருடன் திரும்புவோமோ இல்லையோ என்ற சந்தேகம் இருப்பதால் எல்லோரிடமும் சொல்லி விட்டுச் செல்கிறோம் என்று இதற்குக் காரணம் கூறுகின்றார்கள். ஆனால் இதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் வேறு எந்தப் பயணம் மேற்கொண்டாலும் இதுபோன்று ஊர் முழுக்க பயணம் சொல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் செய்வதில்லை.✍✍✍*

📒📒📒மேலும் ஹஜ் என்பது முந்தைய காலத்தைப் போன்று நீண்ட காலப் பயணமாகவும் இல்லை. *30 நாட்களுக்குள்* முடிந்து விடும் இலகுவான பயணமாக இன்று ஆகி விட்டது. இப்படியிருக்கையில் இவர்களின் இந்த வாதம் ஏற்புடையதாகாது.📒📒📒

*✍✍✍இவ்வாறு பயணம் சொல்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. ஊரை அழைத்து விருந்து போடும் கொடுமையும் பல ஊர்களில் நடைபெறுகின்றது. ஹஜ் விருந்து என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து பெரிய விருந்துகள் நடத்தப்பட்டு வருகின்றன.✍✍✍*

📓📓📓விருந்து வைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தானே என்று இவர்கள் கேட்கலாம். ஆனால் ஒரு வணக்கத்தை மையப்படுத்தி விருந்து வைக்க வேண்டுமானால் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது பித்அத் எனும் வழிகேடாகவே அமையும். நபி (ஸல்) அவர்களும், அவர்களது காலத்தில் எத்தனையோ நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளனர். ஆனால் அதற்காக விருந்தளித்ததாக எந்த ஹதீசும் இல்லை.📓📓📓

*✍✍✍இந்த ஹஜ் விருந்துகள் ஒரு சமூக நிர்ப்பந்தமாகவே ஆக்கப்பட்டு வருகின்றன. ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் விருந்து வைக்கவில்லையென்றால் அது ஏதோ மட்டமான ஒரு செயல் போல கருதப்படும் நிலையும் உள்ளது. பொதுவாக ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவையென்றால் விருந்து, வழியனுப்பு என்ற விளம்பர வகைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது✍✍✍.*

📔📔📔ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் ஹஜ் கடமையாகி விடும் என்றால், இந்த விருந்துகளுக்காக மேலும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வரை அவர் ஹஜ் செய்யாமல் தாமதிக்கின்றார். விருந்து வைக்காமல் ஹஜ்ஜுக்குச் சென்றால் நம்மை மக்கள் மதிக்க மாட்டார்களே என்று இவர் நினைப்பது தான் இதற்குக் காரணம். இதுபோன்று ஒரு நிர்ப்பந்தத்தை இந்த ஹஜ் விருந்துகள் ஏற்படுத்தியுள்ளன.📔📔📔

*✍✍✍சில ஊர்களில் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும், சில ஊர்களில் திரும்பி வரும் போதும், சில ஊர்களில் இரண்டு வேளைகளிலும் இத்தகைய விருந்துகள் வைக்கப்படுகின்றன. வணக்கத்தை விளம்பரமாக்கி, மற்றவர்கள் ஹஜ் செய்வதைத் தடுக்கும் இத்தகைய விருந்துகளை சமுதாயம் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.✍✍✍*

*🛑🛑வழியனுப்பு விழாவும் வரவேற்பு விழாவும்🔵🔵*

🛑🛑🛑ஹஜ்ஜுக்குச் செல்பவர்களை வழியனுப்புவதற்காக சொந்தக்காரர்கள் குடும்பத்துடன் படை திரண்டு இரயில் நிலையங்களுக்குச் செல்கின்றார்கள். அந்தந்த ஊரிலுள்ள இரயில் நிலையத்திற்குச் சென்று வழியனுப்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சென்னை அல்லது மும்பை வரை சென்று வழியனுப்பும் வழக்கமும் உள்ளது.🛑🛑🛑

*✍✍✍வழியனுப்புவதற்கு உறவினர்கள், சம்பந்தக்காரர்கள், நண்பர்கள் வரவில்லையென்றால் அவர்களுடன் உறவைத் துண்டித்துக் கொள்ளும் அளவுக்கு இந்த வழியனுப்பு விழாக்களில் மோகம் உள்ளது. உறவினர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து வழியனுப்பச் செல்வதும் உண்டு. ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் தங்களது செலவில் வாகனம் ஏற்பாடு செய்து வழியனுப்ப அழைத்துச் செல்வதும் உண்டு. இவையெல்லாம் ஹஜ் என்ற வணக்கத்தை அல்லாஹ்விற்காகச் செய்யாமல் விளம்பரத்திற்காகச் செய்வதையே காட்டுகின்றது.✍✍✍*

🔵🔵🔵அதே போல் ஹஜ்ஜை முடித்து வரும் போதும் வரவேற்புக்காக இரயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றார்கள். ஜமாஅத்தாகச் சென்று மாலை மரியாதையுடன் மாப்பிள்ளை ஊர்வலம் போல் ஹாஜிகளை வரவேற்கும் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து போஸ்டர் அடித்து, கொடி, தோரணங்கள் கட்டி வரவேற்பு விழா நடத்தி வருகின்றனர்.🔵🔵🔵

*✍✍✍சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களைப் போன்று, ஹாஜிகளை அழைத்து வருவதும், மேடைகள் அமைத்து சொற்பொழிவுகள் நடத்துவதும், ஹாஜிகளை மேடையில் வைத்து புகழ்ந்து தள்ளுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன.✍✍✍*

⛱⛱⛱இதை விட அவலம் என்னவென்றால், ஹாஜிகள் வரும் இரயில் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தான். உலக மக்கள் அனைவரையும் ஏற்றத்தாழ்வின்றி வெள்ளை ஆடையில் சங்கமிக்கச் செய்யும் இந்த அற்புத வணக்கத்தை முடித்து விட்டுத் திரும்பும் இந்த ஹாஜிகள், மாற்று மதத்தவர்களைப் போன்று மாலை மரியாதை செய்வதும், இரயில் பெட்டிகளையும், வாகனங்களையும் அலங்கரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தான் வேதனைக்குரிய விஷயம்.⛱⛱⛱

*✍✍✍இந்தக் காரியங்களையெல்லாம் ஹாஜிகள் செய்வதில்லையே மற்றவர்கள் தானே செய்கின்றார்கள் என்று நாம் கூறி விட முடியாது. ஏனென்றால் ஹஜ்ஜுக்குச் சென்றவர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து சேர்ந்தால் இந்த அனாச்சாரங்கள் நடப்பதைத் தடுத்து விடலாம்.✍✍✍*

🌈🌈🌈ஆனால் இந்த ஹாஜிகள், நான் இன்ன தேதிக்கு வருகின்றேன் என்று ஊர் முழுக்க தண்டோரா அடித்து விட்டுத் தான் வருகின்றார்கள். நாங்கள் வருகின்றோம், எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடுங்கள் என்று கூறுவதைப் போன்று இந்த அறிவிப்பு அமைந்து விடுகின்றது. அதைத் தொடர்ந்து தான் மற்றவர்கள் இந்த வரவேற்பு வைபவங்களை ஏற்பாடு செய்கின்றார்கள். எனவே இந்த அனாச்சாரங்களில் ஹாஜிகளின் பங்கு எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை. மற்றவர்கள் செய்வதை மறுக்கவோ அல்லது தடுக்கவோ செய்யாமல் புன்முறுவலுடன் இந்த விழாக்களை ஏற்றுக் கொள்வதும் இவர்கள் இதை விரும்புகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது.🌈🌈🌈

*☪☪முஸாபஹா☪☪*

*✍✍✍ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பியவுடன் வரவேற்புக்குச் செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக ஹாஜிகளிடம் முஸாபஹா செய்வார்கள். ஹாஜிகளிடம் முஸாபஹா செய்தால் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.✍✍✍*

🏛🏛🏛நீ ஹாஜியை சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்பு தேடுவதற்குக் கேட்டுக் கொள். (இவ்வாறு ஒருவர் செய்தால்) அவர் மன்னிக்கப்பட்டவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🏛🏛🏛

*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மத் 5838*

*✍✍✍இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் ஹஜ்ஜுக்குச் சென்றவர் தமது வீட்டுக்குள் செல்வதற்கு முன்னர் அவரிடம் முஸாபஹா செய்வதற்குக் கடும் போட்டி நிலவுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் ஹாரிசுல் ஹாரிஸிய்யி என்பவர் பலவீனமானவராவார். இவர் எதற்கும் தகுதியற்றவர் என்று யஹ்யா பின் முயீன் கூறுகின்றார். இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பைளமானி என்பரும் பலவீனமானவராவார். இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார். ஆகவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியாது.✍✍✍*

🧕🧕🧕பெண்களும் ஹஜ் செய்து விட்டு வரும் அந்நிய ஆண்களிடத்தில் முஸாபஹா செய்கின்றனர். பெண்கள், அந்நிய ஆண்களைத் தொடுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. இதை மார்க்த்தின் பெயரால், முஸாபஹா என்று கூறி ஹஜ்ஜுக்குச் சென்று வந்த ஹாஜிகள் செய்வது தான் கொடுமை!🧕🧕🧕

*4891* - حَدَّثَنَا إِسْحَاقُ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ عَنْ عَمِّهِ ، أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُ مَنهَاجَرَ إِلَيْهِ مِنَ الْمُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ بِقَوْلِ اللهِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ} قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ الْمُؤْمِنَاتِ قَالَ لَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَدْ بَايَعْتُكِ كَلاَمًا ، وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ مَا يُبَايِعُهُنَّ إِلاَّ بِقَوْلِهِ قَدْ بَايَعْتُكِ عَلَى ذَلِكَ
تَابَعَهُ يُونُسُ وَمَعْمَرٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ ، عَنِ الزُّهْرِيِّ وَقَالَ إِسْحَاقُ بْنُ رَاشِدٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ

*✍✍✍நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*(திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.✍✍✍*

📚📚📚இந்த (வசனத்திலுள்ள) நிபந்தனையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம், “உன் விசுவாசப் பிரமாணத்தை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.📚📚📚

*✍✍✍அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.✍✍✍*

*நூல்: புகாரி 4891, 2713*

🏮🏮🏮நபித்தோழியரிடம் விசுவாசப் பிரமாணம் எடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி தான் விசுவாசப் பிரமாணம்! இதை *அல்குர்ஆன் 48:10* வசனத்தில் காணலாம். அத்தகைய விசுவாசப் பிரமாணத்தைக் கூட நபி (ஸல்) அவர்கள் பெண்களின் கையைப் பிடித்து எடுத்ததில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.🏮🏮🏮

*✍✍✍ஆனால் முஸ்லிம் சமுதாயத்தில், இஸ்லாத்தின் பெயரால் முரீது வியாபாரம் செய்யும் ஷைகுகள் பைஅத் என்ற பெயரிலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் ஹாஜிகள் முஸாபஹா என்ற பெயரிலும் பெண்களின் கையைப் பிடித்து வருகின்றனர். இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும்.✍✍✍*

🏵🏵🏵திருமணம் செய்து கொள்வதற்குத் தடுக்கப்பட்ட உறவுமுறைகளான தந்தை, சகோதரன், மகன், தாய் தந்தையின் சகோதரர்கள், சகோதர சகோதரியின் மகன்கள் போன்றவர்களையும், கணவனையும் தவிர வேறு எவரிடமும் பெண்கள் முஸாபஹா செய்யக் கூடாது🏵🏵🏵
.

*🕋🕋🕋ஹாஜி பட்டம்🕋🕋🕋*

*✍✍✍ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் மற்றொரு நடைமுறை ஹாஜி பட்டம். அதுவரை சாதாரண கருத்த ராவுத்தராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி கருத்த ராவுத்தராகி விடுவார். அதன் பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப் படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள். சிலர் கையெழுத்தில் கூட ஹாஜியைச் சேர்த்துப் போடுகின்றார்கள். ஒரு ஹஜ் செய்தால் ஹாஜி என்றும், இரண்டு ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வது தான் வேடிக்கையான விஷயம்.✍✍✍*

📕📕📕ஹஜ் செய்தால் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜை முடித்த பிறகு தமது பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் காலத்தில் ஹஜ் செய்த இலட்சக்கணக்கான நபித்தோழர்களில் எவரும் இவ்வாறு அழைக்கப்படவில்லை. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் இமாம்கள் கூட தங்களது பெயருக்கு முன்னால் ஹாஜி பட்டத்தைச் சூட்டிக் கொள்ளவில்லை.📕📕📕

*✍✍✍ஆனால் இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு அழகு பார்க்கின்றனர் என்றால் இதிலும் தங்களது வணக்கத்தை விளம்பரமாக்கும் நோக்கமே மிகைத்து நிற்கின்றது.✍✍✍*

*🔵🔵🔵விளம்பரத்தால் வீணாகும் வணக்கங்கள்🛑🛑🛑*

📘📘📘இதுபோன்று வணக்கத்தை விளம்பரமாக்குபவர்களையும், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக அமல் செய்பவர்களையும் மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.📘📘📘

وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنًا‏

*✍✍✍அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.✍✍✍*

*(அல்குர்ஆன் 4:38)*

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏

📙📙📙நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்📙📙📙.

*அல்குர்ஆன்2:264*

مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَ‌ۚ يَصْلٰٮهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا‏

*✍✍✍அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் நாடியதை நாம் நாடியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவர்களுக்காக நரகத்தை ஏற்படுத்துவோம். இழிந்து, அருளுக்கு அப்பாற்பட்டு அதில் கருகுவார்கள்.✍✍✍*

*(அல்குர்ஆன் 17:18)*

*6499* - حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ سُفْيَانَ ، حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ وَحَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ سَلَمَةَ قَالَ : سَمِعْتُ جُنْدَبًا يَقُولُ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَيْرَهُ فَدَنَوْتُ مِنْهُ فَسَمِعْتُهُ يَقُولُ
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ

📗📗📗நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்📗📗📗.

*அறி : ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி),*

*நூல் : புகாரி 6499*

*5032* – حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِىُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ حَدَّثَنِى يُونُسُ بْنُ يُوسُفَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِى هُرَيْرَةَ فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ أَيُّهَا الشَّيْخُ حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ
إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ. قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ قَاتَلْتَ لأَنْ يُقَالَ جَرِىءٌ. فَقَدْ قِيلَ
ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِىَ فِى النَّارِ وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ. قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ. وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئٌ. فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِىَ فِى النَّارِ. وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلاَّ أَنْفَقْتُ فِيهَا لَكَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ. فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ أُلْقِىَ فِى النَّارِ

*✍✍✍அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்✍✍✍* .

📒📒📒அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்கு பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப் படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.📒📒📒

*✍✍✍அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்✍✍✍.*

*அறி : அபூஹுரைரா (ரலி),*

*நூல் : முஸ்லிம் 3537*

📓📓📓மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் முகஸ்துதிக்காக ஒரு அமலைச் செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அதற்குக் கூலி நரகம் தான் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.📓📓📓

*✍✍✍அல்லாஹ்வுக்காக செய்கின்ற வணக்கங்களில் மிக அதிகமாக முகஸ்துதிக்கு உள்ளாகும் வணக்கம் ஹஜ்தான். ஹஜ்ஜுக்குச் செல்லும் போது வீடுவீடாகச் சென்று, நான் ஹஜ் செய்யப் போகிறேன் துஆ செய்யுங்கள் என்று கூறுவது, விருந்து வைபவங்கள் நடத்தி ஹஜ்ஜை விளம்பரம் செய்வது, ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் கழுத்துகளில் மாலைகள், அது போல் வழியனுப்பு மற்றும் வரவேற்பு விழாக்கள், இதற்கென்று நியமிக்கப்படும் மேடைகளில் பொன்னாடைகள் போர்த்துதல். இவ்விழாக்களில் ஹாஜிகளின் புகழ்பாடுதல் போன்ற காரியங்கள் நிச்சயமாக ரியா (முகஸ்துதி) ஆகும்✍✍✍.*

*(23630) 24030* - حَدَّثَنَا يُونُسُ ، حَدَّثَنَا لَيْثٌ ، عَنْ يَزِيدَ ، يَعْنِي ابْنَ الْهَادِ ، عَنْ عَمْرٍو ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الأَصْغَرُ قَالُوا : وَمَا الشِّرْكُ الأَصْغَرُ يَا رَسُولَ اللهِ ؟ قَالَ : الرِّيَاءُ ، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ : إِذَا جُزِيَ النَّاسُ بِأَعْمَالِهِمْ : اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاؤُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً

📔📔📔“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📔📔📔

*அறி: மஹ்மூத் பின் ரபீத் (ரலி),* 

*நூல்: அஹ்மத் 22528*

*✍✍✍நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளைப் பாழ்ப்படுத்தி விடும். அல்லாஹ் நம்மைக் காப்பானாக.*
*ஆகவே மேலே கூறப்பட்ட  செய்திகள் மூலம் நமக்கு படிப்பினை பித அத் செய்யாமல் நரக நெருப்பில் இருந்து உங்களை காத்து கொள்ளுங்கள்✍✍✍*

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment