பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 22, 2019

ஜின்கள் சைத்தானை பற்றி இஸ்லாமிய பார்வை

*👺👺மீள் பதிவு👺👺*

*🔴🔴இது ஒரு நீண்ட கட்டுரை🔵🔵*

*👺👺👺ஜின்கள் சைத்தானை பற்றி இஸ்லாமிய பார்வை👺👺👺*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஸஹியான📚📚📚 ஹதீஸ்களில் இருந்து📚📚📚*

*✍✍✍மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.✍✍✍*

*(அல் குர்ஆன் 51:56)*

📕📕📕எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.📕📕📕

*✍✍✍இந்தவசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டுநடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும்ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்புஇருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும்இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில்சுட்டிக் காட்டப்பட்டுள்ளது✍✍✍.*

📘📘📘ஜின்என்ற அரபு பதத்திற்கு – மறைவானது – என்று பொருள். ஜின் என்ற படைப்புகண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிற்கு அந்தப் பெயர் வந்தது.சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப்பெற்றதாகும்📘📘📘.

*✍✍✍மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலக்குகள், மனிதர்கள் போன்றில்லாமல் தீய சுபாவம் மிகைத்தவர்களாக உள்ளனர். மனிதனின் பார்வையில் படாமல் மறைந்திருப்பதால் இவர்களை ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர்* .
*இக்கருத்தினை இப்னு அகீல் பின்வருமாறு கூறுகின்றார்.✍✍✍*

📙📙📙“ஜின்கள் மனிதனின் கண்ணில் படாமலும் மறைந்து வாழ்வதாலுமே இவர்களை ஜின் என்று கூறப்படுகின்றது. தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு “ஜனீன்“ என்று கூறப்படுவதற்கு அக்குழந்தை பிறர் கண்ணில் படாமல் இருப்பதே காரணமாகும்.📙📙📙

*ஆதாரம் : உகாமுல் மர்ஜான் பக்கம் – 07*

*👺👺ஜின்கள் படைக்கப்பட்ட விதம்👺👺*

*✍✍✍மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பேஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண்என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.✍✍✍*

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ. وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن قَبْلُ مِن نَّارِ السَّمُومِ

📗📗📗ஓசை தரக்கூடிய கருப்பான களிமண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.📗📗📗

*அல்குர்ஆன்(15 : 26,27)*

وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ

*✍✍✍நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான்.✍✍✍*

*(அல்குர்ஆன் 55:15)*

قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ

‘📒📒📒நான்உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்ததுஎது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால்படைத்தாய்.அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான்📒📒📒
.

*(அல் குர்ஆன் 7:12)*

*✍✍✍அல்லாஹ் ஆதமைப் படைத்து அவனுக்கு சுஜூது செய்ய மலக்குகளை சொன்ன போது இப்லீஸ் மறுத்தான். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் வர்க்கத்தை சார்ந்தவனல்லவா? அவன் ஏன் மலக்குமார்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற சிந்தனைக்கு நமது இமாம்கள் தப்ஸீரில் விரிவாக விளக்கியுள்ளார்கள்.✍✍✍*

📓📓📓இப்லீஸ் தன் வணக்கத்தின் பலத்தால் தரஜா உயர்த்தப்பட்டு மலக்குகளோடு சேர்ந்துவிட்டான். அதனால் அல்லாஹ் கட்டளையிட்டபோது அதை இப்லீஸும் கேட்டான். ஆனால் அவனது மூலம் நெருப்பாக இருந்தது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தான். காபிராகி விட்டான் என்று அருமையாக விளக்கமளித்துள்ளார்கள்.📓📓📓

*👺👺ஜின்களின் உருவம்👺👺*

*✍✍✍நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்த போது  அபூ லுபாபா ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் என்னைக் கூப்பிட்டு, “அதைக் கொல்லாதீர்கள்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு  வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்✍✍✍.*

*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)*

*நூல் : புகாரி (3298)*

📔📔📔இமாம் இப்னு அப்துல் பர்ரு என்பவர் பின்வருமாறு கூறுகி்ன்றார். ஜின்களில் பல தரத்தினர் இருப்பதாக மொழி் வல்லுனர்கள் கூறுகின்றனர். மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவைக்கு ஆமிர் என்றும், சிறு பிள்ளைகளுடன் சேட்டை செய்பவைகளை அர்வாஹ் ஆவிகள் என்றும் அவற்றில் கீழ்த்தரமான அசிங்கமானவைகளை “ஷைத்தான்“ என்றும், அதி ஆற்றல் கொண்டவைகளை “இப்ரீத்“ என்றும் கூறப்படும்.📔📔📔

*ஆதாரம் : உகாமுல் மர்ஜான் பக்கம் 08*

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ

*(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)*

*✍✍✍ஜின்கள் மூன்று பிரிவினராக இருப்தாக றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.*
*முதல் வகையினர் காற்றில் சஞ்சரிப்பவர்கள். இரண்டாவது வகையினர், பாம்பு, நாய் போன்றவற்றின் உருவில் இருப்பவர்கள். மூன்றாவது வகையினர் ஷரீஅத்தைப் பேணி நடப்பவர்கள்✍✍✍.*

ஆதாரம் : தப்றானி, ஹாகீம்

*மற்றொரு அறிவிப்பில்…*

📚📚📚ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறியுள்ளார்கள்.📚📚📚

*1) பாம்பு வடிவில் உள்ளவைகள்.*

*2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை*

*3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா ரலியல்லாஹு அன்ஹு, ஹாக்கிம்)*

*✍✍✍அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்*
*நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலியல்லாஹு அன்ஹு) என்னைக் கூப்பிட்டு ‘அதைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.*
*வஹ்ஹாபிகளின் மூலத் தந்தையானஇப்னு தைமிய்யா கூறுகின்றார்,*
*ஜின்கள் மனித உருவிலும் மிருகங்களின் உருவிலும் தோன்றும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இதனால் அவை பாம்பு, தேள், ஒட்டகம், மாடு, ஆடு, கழுதை, குதிரை, குருவிகள் (பூனை, நாய்) உள்ளிட்ட உருவில் தோன்றுகின்றனர்.✍✍✍*

*ஆதாரம் :மஜ்முஉல் பதாவா பாகம் -19, பக்கம் – 44*

⛱⛱⛱ஜின்களும் ஷைத்தான்களும் விரும்பிய கோலம் எடுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். பத்று யுத்த களத்தி்ல் ஒரு ஷைத்தான் சுறாக்கா பின் மாலிக் அவர்களின் உருவில் முஷ்ரிகீன்களிடம் சென்று உதவி செய்வதாக வாக்களித்தது. ஹஜரத் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸதகாப் பொருளை காவல்செய்து கொண்டிருக்கும்போது ஷைத்தான் மனித உருவில் வந்து திருடியதும் அவனை அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு கைது செய்தபோது ஆயத்துல் குர்ஷியை ஓதினால் மட்டும் தன்னால் அந்த இடத்தை நெருங்க முடியாது என்று கூறிவிட்டுத் தப்பிச் சென்ற வரலாறு மிகப் பிரபலமானதாகும்.⛱⛱⛱

*👺👺ஜின்களுக்கும் இறைத்தூதர்கள்👺👺*

وَلَوْ تَرَىٰ إِذْ وُقِفُوا عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِالْحَقِّ ۚ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

*✍✍✍(மறுமைநாளில் இறைவன் ஜின் – மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் – மனித கூட்டத்தாரே!  உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள்வரவில்லையா…என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம்இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான்.✍✍✍*

*(அல்குர்ஆன் 6:30)*

🌈🌈🌈இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள்வந்தார்கள் என்பது முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வருகைக்கு முன்பு தான்.முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின்இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன்மனித – ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும்.🌈🌈🌈

وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا ۖ فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ

*✍✍✍(நபியே)இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம்திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள்என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம்சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.✍✍✍*

*(அல் குர்ஆன் 46:29)*

قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَىٰ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَىٰ طَرِيقٍ مُّسْتَقِيمٍ

🏵🏵🏵(ஜின்கள்)கூறினார்கள் ‘எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைசெவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்குமுன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் – நேரானமார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது.🏵🏵🏵

*(அல்குர்ஆன் 46:30)*

وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا

*✍✍✍அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர் (என்று அந்த ஜின்கூறிற்று)✍✍✍*

*(அல்குர்ஆன்72-15)*

يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُجِرْكُم مِّنْ عَذَابٍ أَلِيم

🔴🔴🔴எங்களுடையகூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரைஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான்.நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும்கூறினார்கள்🔵🔵🔵

*(அல் குர்ஆன் 46:31)*

وَمَن لَّا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِن دُونِهِ أَوْلِيَاءُ ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ

*✍✍✍ஆனால்எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை✍✍✍.*

*(அல் குர்ஆன் 46:32)*

📕📕📕ஜின்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை சந்தித்த இரவில்அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்டசம்பவத்தையும் – ஜின்களின் காலடி சுவடுகள் – அவர்கள் சமைத்த பாத்திரங்கள் -அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள்.📕📕📕

*(திர்மிதி 3311)*

*👺👺ஜின்களின் உணவுகள்👺👺*

*✍✍✍ஜின்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், “அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில்  இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்” என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் (தம் தோழர்களிடம்), “எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்” என்று கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)*

*நூல் : முஸ்லிம் (767)*

📘📘📘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். என்னிடம் “நஸீபீன்’ என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், “அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.”என்று பதிலளித்தார்கள்.📘📘📘

*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)*

*நூல் : புகாரி (3860)*

*✍✍✍“உங்களில் ஒருவர் சாப்பிடும்போது சிந்துகின்ற உணவில் பட்டுள்ள மண் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்தபின் அதனை சாப்பிடுங்கள். அவற்றை ஷைத்தான்களுக்கு விட்டுவிடாதீர்கள்✍✍✍“*

அறிவிப்பவர்:அனஸ்ரலியல்லாஹு அன்ஹு

நூல் :முஸ்லிம்,அபூதாவூத்,அஹ்மது.

📙📙📙உண்ணும்போதும், பருகும்போதும்வலது கையால் உண்ண வேண்டும், பருக வேண்டும். இடது கையால் உண்ணும் பருகும் நபருடன் ஷைத்தானும் சேர்ந்து உண்கின்றான், பருகுகின்றான். வீட்டுக்குள் நுழையும்போதும் உணவு அல்லது பாணம் உட்கொள்ளும்போதும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும். அவ்வாறு செய்தால் இன்று நமக்கு இருப்பிடமில்லை. ஆகாரமுமில்லை என்று ஜின், ஷைத்தான்கள் கூறும்.📙📙📙

*✍✍✍இவ்வாறு அல்லாஹ்வி்ன் பெயர் கூறாது வீட்டில் நுழைந்தால் அல்லது உண்டு, பருகினால் ஆனந்தத்துடன் இன்று இருப்பிடமும், ஆகாரமும் கிடைத்து விட்டன என்று பேருவகை கொள்ளும். ஸுப்ஹு தொழாமல் தூங்கும் நபரைப் பற்றிறஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களிடம் கூறப்பட்டது. அப்போது நபியவர்கள் கூறினார்கள்,✍✍✍*

📒📒📒“அந்த மனிதனின் இரு காதிலும் ஷைத்தான் சிறுநீர் கழித்திருக்கக் கூடும்“📒📒📒

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு

நூல் :புகாரி, திர்மிதி

*👺👺ஜின்களின் இருப்பிடங்கள்:👺👺*

*✍✍✍மனிதர்களைப் போன்றே ஜின்களும் சாப்பிடுகின்றனர், குடிக்கி்ன்றனர், திருமணம் முடிக்கின்றனர், சந்ததிகளை உற்பத்தி செய்கின்றனர். மனிதர்களிடமிருக்கும் சமூக கட்டமைப்பைப் போன்ற ஒன்று அவர்களிடமும் உள்ளது. சமய, சமூக பிரிவினைகள் கூட மனிதர்களைப் போன்று அவர்களிடமும் உள்ளது. ஆனால் அவர்களின் உணவு இருப்பிடம் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.✍✍✍*

📗📗📗தீய செயல்களைக் கண்டு அவை ஆரவாரம் செய்கின்றன. அதான் சப்தங்கள் திர்குர்ஆன் ஓதும் சப்தங்கள் திக்று முழக்கம் போன்றவற்றால் சகிக்காமல் வெருண்டோடுகின்றனர். அதான் சப்தத்தைக் கேட்டால் காற்றுப் பறக்கப் பறக்க விரண்டோடுகின்றன என்று பல ஹதீதுகளில் வந்துள்ளன.📗📗📗

*✍✍✍மனிதர்களைப் போன்றே ஜின்களும் பூமியில்தான் வாழுகின்றனர். ஆனாலும் இவர்களி்ன் வாழ்க்கை முறை மாற்றமானதாகும். அனேகமாக ஜி்ன்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.✍✍✍*

📓📓📓இருட்டான இடங்கள், பாழடைந்த இடங்கள், கட்டிடங்கள், பராமரிப்பில்லாத மைதானங்கள், பாலை வனங்கள், அடர்ந்த காடுகள், மலைகள், ஓடைகள், மையவாடிகள், பாழடைந்த பள்ளிவாசல்கள், கிணறுகள், சமுத்திரங்கள், வயல் வெளிகள், சுரங்கங்கள், பொந்துகள், வீட்டின் முகடுகள், மரங்கள், குகைகள், ஒட்டகை போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள், அசுத்தமான (நஜீஸ்) இடங்கள், குறிப்பாக குளியலறை, மலசல கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் இவை தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இவ்வாறு வஹ்ஹாபிகளின் குருவானஇப்னு தைமிய்யா கூறுகின்றார்.📓📓📓

*ஆதாரம் :மஜ்முஉல் பதாவா பாகம் 19, பக்கம் 40 – 41*

*✍✍✍சூரியன் மறைந்த பின் இருள் பரவம் வேளை அதிகளவில் ஷைத்தான்கள் வெளியேறுகின்றன. அதனால் இப்படியான நேரங்களில் உங்கள் சிறு பிள்ளைகளை வெளியில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றுரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.*
*வெயிலும், நிழலும் சங்கமிக்கும் இடங்களில் இருப்பதை ஷைத்தான்கள் அதிகமாக விரும்புகின்றன. ஆதலால் அப்படியான இடத்தில் நீங்கள் உட்கார வேண்டாம் என்றுரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் எச்சரித்தார்கள்✍✍✍.*

ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்

📔📔📔
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.📔📔📔

*அறிவிப்பவர் : அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)*

*நூல் : புகாரி (142)*

*✍✍✍அதிகமாக சண்டை வாய்த் தர்க்கம் ஏற்படும் சந்தை, கடைத் தெருக்கள் போன்ற இடங்களை ஜின்களும் ஷைத்தான்களும் அதிகமாக விரும்புகின்றன. அதனால் ஹஜரத் ஸல்மானுல் பாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு தங்களின் நண்பர்களுக்கு✍✍✍*

📚📚📚“சந்தைக்கு முதல் ஆளாகச் செல்ல வேண்டாம். இறுதி நபராக வெளியேறவும் வேண்டாம்.அந்த நேரம், அந்த இடங்கள் ஷைத்தானி்ன் களமாகும் என்று வஸிய்யத் செய்தார்கள்“📚📚📚

*✍✍✍ஜின்களில் ஆண், பெண் இருபாலாரும் உள்ளனர். இவர்கள் திருமணம் முடித்து, சந்ததிகளை உருவாக்குகின்றனர். ஜின்கள் மனிதர்களை திருமணம் முடித்த வரலாறுகள் இருக்கின்றன. ஜின்கள் அழகான பெண்களைக் கடத்திச் சென்று வாழ்க்கை நடத்திய வரலாறுகள் ஆதி காலம் தொட்டு இருந்து வருவதாக ஹதீதுகளில் காணப்படுகின்றன. இது தொடர்பாக அதிகமான எடுத்துக் காட்டுகளை ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி லுக்துல்மர்ஜான் பக்கம் 53இல் குறிப்பிட்டுள்ளார்கள். ஜின்கள் மனிதர்களைத் திருமணம் செய்து இருவருக்கும் பிள்ளைகள் பிறந்த செய்திகள் பிரசித்தி பெற்றவை என்று இப்னு தைமிய்யா மஜ்முஉல் பதாவா பாகம் 19 பக்கம் 39இல் குறிப்பிடுகின்றார். ஹஜரத் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்பு மனைவி பல்கீஸ் அம்மையாரின் தந்தை ஒரு ஜின் என்று கௌதுல் அஃழம் முஹையத்தீன் ஆண்டகை ரழியல்லாஹு அன்ஹு தங்களது குன்யத்துத் தாலிபீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்✍✍✍.*

*👺👺ஜின்களை வசப்படுத்தலாமா❓👺👺*

*👺👺ஜின்களும், குறி சொல்பவர்களும்👺👺*

⛱⛱⛱நமது முன்னோர்களான நாதாக்கள் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றும் அதற்குரிய வழிவகைகள் இருப்பதாக கூறியுள்ளார்கள். இதேபோல் மற்ற மதங்களிலுள்ளவர்களும் ஜின்களை வசப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை தெரிந்து அதைக் கொண்டு பலன் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.⛱⛱⛱

*✍✍✍ஜின்களுக்கு இஸ்லாம் கொண்டு செல்லப்பட்டு அதில் முஸ்லிமான ஜின்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஜின்களும் இருக்கின்றன. செய்யிதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கரம் பற்றி எண்ணற்ற ஜின்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளன என்று அவர்களின் வரலாறு சான்று பகர்கிறது.✍✍✍*

🌈🌈🌈ஜின்கள் இறைநேசர்களுக்கு வழிய வந்து தொண்டு புரிந்து வந்தததை நாம் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகளில் படித்திருக்கிறோம்..🌈🌈🌈

*👺👺👺ஜின்களும் – சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும்.⚫⚫⚫*

مِنَ الشَّيَاطِينِ مَن يَغُوصُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ

*✍✍✍ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம்.✍✍✍*

*(அல் குர்ஆன் 21:82)*

وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ

🏵🏵🏵சுலைமானுக்குஜின்கள் – மனிதர்கள் – பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவைதனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.🏵🏵🏵

*(அல் குர்ஆன் 27:17)*

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ

*✍✍✍சுலைமானுக்குகாற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும்மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பைஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்குவசப்படுத்திக் கொடுத்தோம்.✍✍✍*

*(அல் குர்ஆன் 34:14)*

📕📕📕முஸ்லிமான ஜின்கள் ஷரீஅத்திற்கு கட்டுப்பட்டு அல்லாஹ்விற்கு பயந்து தமது வாழ்க்கைகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் காபிரான ஜின்களோ, மனிதர்களுக்கு கெடுதி செய்வதையே குறிக்கோளாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஜின்களுக்கு சில சக்திகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதை மையமாக வைத்து,📕📕📕

*✍✍✍குறி சொல்பவர்கள், சூனியம் செய்பவர்கள், சாமி சிலைகளை வணங்கி பூஜை செய்யும் பூசாரிகள் இந்தவகை ஜின்களை தம் வசப்படுத்தி தம் இஷ்டத்திற்கு தகுந்தவாறு அவற்றை ஆட்டிப் படைக்கின்றனர்✍✍✍.*

📘📘📘சிலைகளை வணங்குபவர்கள் புதிதாக சிலையை நிறுவியவுடன் அல்லது நாட்சென்ற சிலைகளை குடமுழுக்கு என்ற விசேசத்தின் பேரில், காபிரான ஜின்களை தம் வசப்படுத்தி அதை தகட்டுக்குள் கட்டுப்படுத்தி சிலையின் பீடத்தின் கீழ் வைத்து விடுகின்றனர். அதன்பிறகு அந்த சிலைக்கு சக்தி ஏற்பட்டு அதைக் கொண்டு பூசாரிகள், குறி சொல்பவர்கள் குறி சொல்ல ஆரம்பிக்கின்றனர். சில சமயம் இந்த காபிரான ஜின்கள் இரத்தத்தையோ, ஆட்களையோ பரிகாரமாக கேட்கும். இதை சாமி சிலை கேட்பதாக இந்த பூசாரிகள் மக்கள் மத்தியில் சொல்லி அந்த சாமியை சக்தி வாய்ந்தது என்று சொல்லவாரம்பித்து அதை மக்களும் நம்பி அதை வழிபட ஆரம்பித்துவிடுகின்றனர்.📘📘📘

*✍✍✍இந்த ஜின்களை வைத்துதான் சூனியம், வஞ்சனை, கெடுதிகளை இவர்கள் செய்கின்றனர். அதேபோல் இந்த ஜின்கள் மலக்குமார்கள் வானலோகத்தில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்கும் சக்தி படைத்தவை. அதை ஒட்டுக் கேட்டு இங்கு வந்து அதை தம்மை கட்டுப்படுத்தி வைத்திருப்பவரிடம் சொல்கிறது. அதை அவர் தம்மை நாடி வரும் பக்தர்களிடம் ஒப்படைக்கிறார். இதற்கு பெயர் குறி சொல்லுதல் என்று சொல்கிறார்கள்.✍✍✍*

لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ

📙📙📙(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்து அவர்கள் மீது எறியப்படும். அவனைப் பிரகாசமான தீப்பந்தம் விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு.📙📙📙

*அல்குர்ஆன் (37 : 8)*

وَحَفِظْنَاهَا مِن كُلِّ شَيْطَانٍ رَّجِيمٍ

*✍✍✍விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் ஒட்டுக் கேட்பவனைத் தவிர மற்றவர்கள் அதை நெருங்காதவாறு பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.✍✍✍*

*அல்குர்ஆன் (15 : 17)*

📗📗📗ஆக, முதலில் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்📗📗📗.

*✍✍✍சில நேரங்கல் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து)விடுவதுண்டு. இன்னும் சில நேரங்கல் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்துவிடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்கüடம்) பேசுகின்றான். அப்போது (இதைக் கேட்கும் மக்கüடையே) இன்னின்ன நாüல் இன்னின்னவாறு நடக்குமென அவர்(குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?” என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார்✍✍✍.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)*

*நூல் : புகாரி (4800)*

📒📒📒வானத்தில் உள்ள அனைத்தையும் இந்த ஜின்கள் அறியும் சக்தியை அல்லாஹ் கொடுக்கவில்லை. சில விசயங்களை அறியும் சக்தியை மட்டும் கொடுத்திருக்கிறான். எனவே பற்பல சமயங்களில் இந்த குறி சொல்லுபவர்களின் சொல்கள் தவறாக அமைந்து விடுகிறது இதன் காரணமாகும்.📒📒📒

*✍✍✍அல்லாஹ் நம் அனைவரையும் காபிரான, கெடுதியான ஜின், ஷைத்தான்களை விட்டும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் பாதுகாத்து அருள்புரிவானாக!. ஆமீன்.*✍✍✍

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment