*ஸிஹ்ரு - சூனியம்* (part -3)
சூனிய ஆட்டம் ஆடும் பீஜே அவர்கள், தன்னுடைய சூனிய வாதத்தை மறுப்பவர்களை "மடையர்களாக" மாற்றி சூனியம் செய்வதில் வல்லவர். பீஜே அவர்கள் போன பாதையிலேயேச் சென்று சூனிய முடிச்சுக்களை அவிழ்க்க முயன்றால் நாமும் அந்த சூனியத்திலேயே சிக்கிக்கொள்ள நேரிடும். பீஜே அவர்கள் போட்ட சூனிய முடிச்சுக்களில் சிக்கிக்கொள்ளாமல் சூனியத்தை அகற்றுவோம்.
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைக் கொண்டு சூனியத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆதாரங்கள் குவிந்து கிடப்பதால் அவற்றை அலசுவதால் சூனிய முடிச்சுக்கள் இன்னும் இறுகத்தான் செய்யும். எனவே, பீஜேவின் சூனிய முடிச்சுக்களை நாம் எளிமையாக அவிழ்க்கும் முறையை கையாள்வோம். இன்ஷா அல்லாஹ்.
"ஸிஹ்ரு" என்ற வார்த்தை மூன்று அர்த்தங்களில் கையாளப்படுவதை ஏற்கனவே (Part -2) பார்த்தோம்.
அவற்றுள் "மேஜிக்" என்ற அர்த்தம் மட்டுமே சரியானது என்கிறார் பீஜே.
ரைட்... பீஜேவின் வழியில் ஸிஹ்ரு என்றால் "தந்திரம்" அல்லது "மேஜிக்" என்றே நாமும் பொருள்கொள்வோம். சில உதாரணங்கள் மூலம் இதில் உள்ள முடிச்சை அவிழ்ப்போம்.
** கொலை செய்தவன்
** கொலை செய்யப்பட்டவன்
இரண்டாவதாக உள்ளதை "செயப்பாட்டு வினை" என்று தமிழிலும், Passive voice என்று ஆங்கிலத்திலும், மஜ்ஹுல் என்று அரபு மொழியிலும் கூறுவர்.
(1) ஸிஹ்ரு - سِحْرٌ
(2) ஸாஹிருன் - سَاحِرٌ
(3) மஸ்ஹூருன் - مَسْحُورٌ
(1) ஸிஹ்ரு(سِحْرٌ) என்பது பெயர்ச்சொல். இதற்குத்தான் "தந்திரம்" அல்லது "மேஜிக்" என்று பீஜே சொல்கிறார். இந்த அர்த்தத்தைக் கொண்டு மற்ற இரண்டையும் பார்ப்போம்.
(2) ஸாஹிருன்(سَاحِرٌ) என்பது ஒரு செயலை செய்பவனைக் குறிக்கும். அதாவது, ஸாஹிருன் என்றால்
"ஸிஹ்ரு செய்தவன்" என்று அர்த்தம்.
அப்படியென்றால், பீஜே அவர்களின் வாதத்தின்படி "தந்திரம் செய்தவன்" அல்லது "மேஜிக் செய்தவன்" என்று அர்த்தம் கிடைக்கிறது. இப்படி அர்த்தம் கொடுப்பதில் பிரச்சினையில்லை. ஏனெனில், தந்திரம் செய்பவர்களும், மேஜிக் செய்பவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.
(3) மஸ்ஹூருன்!(مَسْحُورٌ) என்பது ஒருவன் மீது செய்யப்பட் செயலைக் குறிக்கும். அதாவது, மஸ்ஹூருன் என்றால்
"ஸிஹ்ரு செய்யப்பட்டவன்" என்று அர்த்தம்.
பீஜே அவர்களின் வாதத்தின்படி "தந்திரம் செய்யப்பட்டவன்" அல்லது "மேஜிக் செய்யப்பட்டவன்" என்ற அர்த்தம் கிடைக்கிறது.
"தந்திரம் செய்யப்பட்டவன்" என்று உலகில் எவராவது உள்ளனரா?
அல்லது
"மேஜிக் செய்யப்பட்டவன்" என்று உலகில் எவராவது உள்ளனரா?
இறைத்தூதர்கள் பலரையும் "மஸ்ஹூரா" என்று மறுப்பாளர்கள் அழைத்திருக்கிறார்களே! அதாவது, "ஸிஹ்ரு செய்யப்பட்டவர்கள்" என்று அழைத்திருக்கிறார்களே!! அம்மறுப்பாளர்கள் அப்படி அழைத்ததை குர்ஆனும் [17:47, 17:101, 25:8] கூறுகிறதே!!!
அப்படியென்றால் இறைத்தூதர்களை தந்திரம் செய்யப்பட்டவர்கள் என்றோ, அல்லது மேஜிக் செய்யப்பட்டவர்கள் என்றோதான் அம்மறுப்பாளர்கள் அழைத்தார்களா?
பீஜே அவர்களின் வாதத்தின்படி கிடைக்கும் இதுபோன்ற காமெடியான அர்த்தத்தில் இறைத்தூதர்கள் அழைக்கப்படவில்லை. இறைத்தூதர்கள் கொண்டு வந்த உண்மைகளை மறுப்பதற்கு அம்மறுப்பாளர்களால்
கடுமையான வார்த்தையாக வைக்கப்பட்டதுதான் "மஸ்ஹூர்".
மஸ்ஹூர் எனும் வார்த்தையில் பீஜே அவர்கள் போட்ட சூனிய முடிச்சை அவிழ்ப்போம்.
இன்ஷா அல்லாஹ்... தொடரும்...
பிறை மீரான்
No comments:
Post a Comment