பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

ஸிஹ்ரு - சூனியம்* (Part - 11)

*ஸிஹ்ரு - சூனியம்* (Part - 11)

விதிப்படி நடக்கும் நிகழ்வுகளில் சூனியத்தை முடிச்சிடுவதை பார்ப்போம்.

பக்கம் பக்கமாக எழுதினாலும் தெளிவுபடுத்துவதற்கு சிரமமான இந்த விஷயத்தை சில உதாரண நிகழ்வுகள் மூலம் எளிதாகப் பார்ப்போம்.

உதாரணம் 1 :

ஒரு பெண் திடீரென இறந்து போன ஒருவரின் பெயரைச் சொல்லி இன்னார் வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். உடனேயே அந்த பெண்ணின் நடவடிக்கைகள் அசாதாரணமாக மாறிவிடுகின்றன. அதுதான் "பேய் பிடித்தல்" என்று சொல்லப்படுகிறது.

அறிஞர் பீஜே அவர்களிடம் அந்த பெண்ணை அழைத்து சென்றார்கள். பேய் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதிய பீஜே அவர்கள் பேய் பிடித்தல் என்பது பொய் என்றார். இது வெறும் நடிப்பு என்றார். இந்தப் பெண்ணிற்கு திருமணம் ஆகியிருந்தால் மாமியாரை மிரட்டுவதற்காக இப்படி நடிக்கிறார்.  திருமணமாகாதவர் என்றால் விரும்பிய ஆணுடன் விரும்பிய நேரத்தில் இணைவதற்கு வசதியாக பேயாக நடிக்கிறார் என்று ஆரூடம் சொன்னார்.

நன்றாக இருந்த ஒழுக்கமான அந்த பெண் இப்படி ஆனதை தாங்க முடியாமல் இருந்த குடும்பத்தினருக்கு பீஜேவின் பேச்சு வெறுப்பை மட்டுமே தந்தது.

பின்னர், மனோதத்துவ மருத்துவரிடம் அந்த பெண்ணை அழைத்துச் சென்றார்கள். பேய் பிடித்தல் என்பது பொய் என்றும், 300 வகையான மனோதத்துவ நோய்களில் இதுவும் ஒன்று என்றார் மருத்துவர். மருந்து மாத்திரைகள் எழுதித் தந்தார். இருப்பினும், அவ்வப்போது அந்த பெண் அசாதாரணமாக மாறுவது தொடர்ந்தது. அதாவது, பேய் வருவதும் தொடர்ந்தது.

மருத்துவரை குடும்பத்தினர் அனுகினர். மருத்துவத்தால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து விட்டதாகவும் இனி செய்ய ஒன்றுமில்லையென்றும் கூறி கைவிரித்தார் மருத்துவர். ஆண்மீக ரீதியாக முயற்சி செய்து பார்க்குமாறும் கூறினார்.

அனைத்து சமுதாய ஆண்மீகத்தவர்களிடமும் பேய் பிடித்தல் பற்றி கேட்கப்பட்டது. இது "தீய சக்தியின் தீண்டுதல்" என அனைவரும் ஒரே கருத்தை கூறினர். இந்த தீய சக்தியை அகற்றினால் அந்த பெண் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார் என்றும் கூறப்பட்டது. இதற்கு இரண்டு வாய்ப்புகளும் கூறப்பட்டது.

(1) நல்ல சக்தியிடம் உதவி கோரி அந்த பெண்ணை பீடித்த தீய சக்தியை அகற்றுவது

(2) தீய சக்திகளிடம் உதவி கோரி அவைகளின் மூலம் அந்த பெண்ணை பீடித்த தீய சக்தியை அகற்றுவது

நல்ல சக்தியிடம் உதவி கோருவது என்பது,  கடவுளிடம் செய்யும் பிரார்த்தனையை குறிக்கும்.

தீய சக்திகளிடம் உதவி கோருவது என்பது, தீயசக்திகளை வசப்படுத்தி வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் சூனியக்காரனிடம் செல்வதைக் குறிக்கும்.

விதிப்படி நடக்கும் நிகழ்வுகளில் இப்படித்தான் சூனியம் முடிச்சிடப்படுகிறது.

** இறந்த ஒருவரின் பெயரைச் சொல்லி அசாதாரணமாக அந்த பெண் நடந்து கொண்டது விதிப்படியே என்பது உண்மை.

** விதிப்படி நடக்கும் எந்த ஒன்றைப்பற்றியும் உள்ளத்தில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் என்பதும் உண்மை.

** ஷைத்தானுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளின் அடிப்படையில் பேய் என்ற ஒன்றை மனிதனின் உள்ளத்தில் போடுவது அவனால் முடியும் என்பதும் உண்மை.

** பேய் பிடித்தல் என்ற இந்த ஷைத்தானிய நிகழ்வைக் கொண்டு மனித உள்ளங்கள் சோதிக்கப்படுகிறது என்பதும் உண்மை.

** உள்ளம் சோதிக்கப்பட்ட நிலையிலும், அல்லாஹ்வைச் சார்ந்திருப்பவர்கள் இந்த விஷயத்திலும் அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

** உள்ளம் சோதிக்கப்பட்ட நிலையில் சிலர் தடம்புரண்டு சூனிய முடிச்சில் வீழ்ந்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை.

முடிவாக, "பேய் பிடித்தல்" என்ற ஷைத்தானிய நிகழ்வு உண்மையே.

இந்த நிகழ்வின் மூலம் நம்பிக்கையாளர்களின் உள்ளம் சோதிக்கப்படுகிறது.

பொறுமையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறார்கள். அல்லாஹ் விதித்ததன் பிரகாரம் அந்த ஷைத்தானிய செயல் அகலும்போது அல்லாஹ்வைப் புகழ்கிறார்கள். மரணிக்கும் வரையிலும் அந்த ஷைத்தானிய செயல் தொடர்வதை அல்லாஹ் விதியாக்கியிருந்தாலும் அவர்கள் பொறுமையாகவே இருக்கிறார்கள்.

பொறுமையிழந்தவர்கள் ஷைத்தானிடம் சூனியத்தின் மூலம் உதவி கோருகிறார்கள். அல்லாஹ் விதித்ததன் பிரகாரம் அந்த ஷைத்தானிய செயல் அகலும்போது சூனியத்தால் அகன்றதாக அகமகிழ்கிறார்கள். அல்லது, அந்த ஷைத்தானிய செயல் தொடர்வதை மரணிக்கும் வரையிலும் விதியாக இருந்தால் புதிது புதிதாக சூனியக்காரனை தேடி மரணிக்கும் வரைக்கும் அலைகிறார்கள்.

உதாரணம் 2 :

செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ஒருவன் திடீரென நஷ்டத்தை சந்திக்கிறான்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த ஒருவன் திடீரென சுகவீனப்படுகிறான்.

ஒருவன் விபத்தில் தனது உடல் உறுப்பு  பாதிக்கப்படுகிறான்.

இவை அனைத்தும் விதிப்படி நடக்கும் நிகழ்வுகளே. விதிப்படி நடக்கும் இந்த நிகழ்வுகளில் ஷைத்தான் குழப்பம் ஏற்படுத்துகிறான்.

தனக்கு வேண்டாத எவரோ தனக்கு கெடுதி இழைத்துவிட்டதாக அவனை எண்ண வைக்கிறான். தனக்கு வைக்கப்பட்டதாக ஒருவன் கருதும் அந்த கெடுதியை அகற்றுவதற்கு அவனை சூனியக்காரனை நோக்கி கொண்டு செல்கிறான் ஷைத்தான்.

அவனை பரிசோதிக்கும் சூனியக்காரன் அவனுக்கு சூனியம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். அவன் மீது பொறாமைப்பட்ட ஒருவன்தான் அந்த சூனியத்தை அவனுக்கெதிராக செய்ததாகவும் கூறுகிறான்.

செய்யப்பட்ட அந்த சூனியத்தை விட்டு அகல இரண்டு வாய்ப்புகளை சூனியக்காரன் கூறுகிறான்.

(1) வைக்கப்பட்ட சூனியத்தை கண்டுபிடித்து அகற்றுவது.

(2) வைக்கப்பட்ட சூனியத்திற்கெதிராக எதிர் சூனியம் செய்வது.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்தால்தான் வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று சூனியக்காரன் கூறுகிறான்.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை அவன் செய்து முடிக்கும்போது, விதிப்படி கெடுதியில் இருந்து மீண்டுவிட்டால் சூனியம் பலித்ததாக எண்ணி அகமகிழ்கிறான். மரணிக்கும் வரையிலும் அவனுக்கு அதுதான் நிலை என்று விதியிருந்தால், அவன் மரணிக்கும் வயிலும் சிறந்த சூனியக்காரனைத் தேடி அலைகிறான்.

முடிவாக,

** தீயசக்திகளை வசப்படுத்தி சூனியம் செய்கிறேன் என்று சொல்லும் சூனியக்காரன் இருக்கிறான் என்பது உண்மை.

** அந்த சூனியக்காரன் சூனியம் செய்கிறான் என்பதும் உண்மை.

** விதிப்படி நடக்கும் நிகழ்வுகள் அவன் செய்த சூனியத்திற்கேற்றவாறு இருந்தால் அது தனது சூனியத்தால் நிகழ்ந்ததாக சூனியக்காரன் கூறுகிறான்.

**  விதிப்படி நடக்கும் நிகழ்வுகள் அவன் செய்த சூனியத்திற்கேற்றவாறு இல்லாமலிருந்தால் தன்னைவிட பெரிய சூனியக்காரன் அதைத் தடுப்பதாக கூறி சூனியத்தை காப்பாற்றிவிடுகிறான்.

விதிப்படி நடக்கும் நிகழ்வுகளுக்குள் சூனியம் முடிச்சிடப்படுகிறது என்பதைத் தவிர்த்து சூனியத்தில் வேறு ஒன்றுமில்லை.

விதிப்படியான ஒரு நிகழ்வில் நபிகளாருக்கு சூனியத்துடன் முடிச்சிடப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வைப்  பார்ப்போம்.

பிறை மீரான்

No comments:

Post a Comment