இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை
இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை என்னும் நற்பண்பு. பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது.
பொறுத்தார் பூமியாள்வார்,
பொறுமை கடலினும் பெரிது,
பொறுமை பூமியைக் காட்டிலும் பெரியது,
வலிமை உடையவரை விட பொறுமை உடையவரே மேலானவர்,
“ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”
திருக்குறளின் பொருள் : பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளாது தண்டித்தவர்க்கு ஒரு நாள் மட்டுமே இன்பம் கிட்டும். அதனை பொறுத்தக்கொண்டவரின் புகழ், உலகம் உள்ளவரைக்கும் நிலைத்து நிற்கும்.
போன்ற அறிவுரைகள் பொறுமையின் பெருமைகளை எடுத்துக் காட்டுவதாக பல உதாரணங்கள் அமைந்துள்ளன.
பொறுமைக்கு இவ்வாறு பல உதாரணங்கள் கூறப்பட்டாலும், துன்பம், கவலை, துக்கம் போன்ற நிகழ்வுகள் வரும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இதை விட மிக அழகிய வழிமுறைகளை இஸ்லாம் கூறுகிறது.
பொறுமை ஒரு வெளிச்சம்
மனிதன் எதை இழந்தாலும் பெற்றுவிடலாம், ஆனால் பொறுமையை இழந்தவன் வாழ்க்கையையே இழந்தவனாகிறான் என்ற பழமொழிக்கு ஏற்ப பொறுமையை இழந்து கோபப்படும் போது வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியாகிவிடுகிறது. இருள்களிலி ருந்து வெளிச்சம் எவ்வாறு வழிகாட்டுகிறதோ அதே போல் இன்னல்களிலிருந்து காப்பாற்ற ஓர் வெளிச்சமாக பொறுமை இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். “அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி’ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி),
நூல் : முஸ்லிம் 381
பொறுமை ஓர் அருட்கொடை
ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் பல விதமான சோதனைகளை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவ்வாறு அல்லாஹ் சோதிக்கும் போது அதை பொறுத்துக் கொண்டால், அதுவே விசாலமான அருட்கொடை என்றும், அதை விட வேற எதுவும் விசாலமான ஓர் அருட்கொடை இல்லை என்றும் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்ட போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்து விட்டபோது, “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி ),
நூல் : முஸ்லிம் 1902
இறைநம்பிக்கையாளரின் பண்பு
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்குர்ஆன் 2:177
மேற்கண்ட வசனத்தில் நன்மையான விஷயங்களை அல்லாஹ் பட்டியலிடுகிறான். அதில் ஒன்று தான் யார் தனக்கு வறுமை, நோய் வரும் போது பொறுமையை கடைபிடிக்கின்றாரோ அவர் நன்மை செய்பவர், உண்மையை கூறுபவர், இறைவனை அஞ்சுபவர் என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது இறைநம்பிக்கையாளரின் பண்புகளில் ஒன்றாகும்.
நல்லவர்களின் பண்பு
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.
அல்குர்ஆன் 41:35
பொறுமை என்பது ஓர் வெளிச்சம், அருட்கொடை, இறைநம்பிக்கையாளரின் பண்பு, நல்லவர்களின் பண்பு என பொறுமைக்கு பல உதாரணங்களை இஸ்லாம் கூறுகிறது.
பொறுமையின் மூலம் உதவி தேடுதல்சோதனைகள் வரும் போது பொறுமையாக இருந்து, தொழுகையின் மூலமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து பாதுகாப்பு தேட வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் உணர்த்துகின்றன.
பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
அல்குர்ஆன் 2:45
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
அல்குர்ஆன் 2:153
சோதனைகள் வருகின்ற வழிகளையும், அப்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் இஸ்லாம் கூறுகிறது.
சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது
செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.
அல்குர்ஆன் 2:155, 157
உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.
அல்குர்ஆன் 47:31
உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.
அல்குர்ஆன் 3:186
இழப்புகள் ஏற்படும் போது சகித்துக் கொள்வது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி 5653
இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு கண்கள் மிகவும் அவசியமாகும். உதாரணமாக நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் சம்பாதிக்கிறோம், அதிக செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு காரணம் இந்த கண் தான். எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு செர்க்கத்தை தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக் கூடாது. அல்லாஹ்வை திட்டாமல், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும்.
குழந்தைகள் மரணிப்பதை சகித்துக் கொள்வது
இஸ்லாமிய மார்க்கம் மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் இழந்து விட்ட இழப்புக்கு ஓர் ஈடாக, அவர் சந்தித்த சோதனைக்கு பரிகாரமாக சுவனத்தை பரிசாக அளிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி ),
நூல் : புகாரி 1248
ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனை பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் செர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும் அந்த அளவிற்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லி ரிமுடைய பிள்ளைகளில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்துபோனால், அந்த மனிதரை நரகம் தீண்டாது; (“உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது’ என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி ),
நூல் : முஸ்லிலி ம் 5128
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றிவிடும் போது நன்மையை நாடிப் பொறுமை காப்பாரானால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6424
மனிதர்களை சோதிப்பதற்காக
வறுமை மற்றும் நோயைச் சகித்துக் கொள்வது வறுமை என்பது மனிதர்களை சோதிப்பதற்காக இறைவன் தருவது.
அதற்கு பகரமாக மறுமையில் அவர்களுக்கு அனைத்து சுகங்களும் தரப்படும். அதே போல் இன்று தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, சிக்குன் குன்யா, மற்றும் விஷக் காய்ச்சல் எல்லாம் அல்லாஹ்வின் சோதனையாகும். இந்த சோதனையின் போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளை சொல்லாமல் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்ய வேண்டும்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், “அது, தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள். மேலும், “கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள(விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 3474, 5734
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்கüடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்கüல் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன் னார்கள்.
நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, “ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 5660
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், “(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலி ப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன்.
அப்போது (என் உடலிலிலி ருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்” என்று சொன்னார்கள். இப்பெண்மணி “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 5032
இன்று போன்ற வறுமை மற்றும் நோய்களின் மூலம் சோதனைகள் வரும் போது நமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு பகரமான உடல் நலத்தை, அல்லது வேறு விதமான நன்மைகளை வழங்குவான் என்ற நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்க வேண்டும்.
நம்மை யாராவது அடித்தால் அல்லது திட்டினால் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு கஷ்டத்தைக் கொடுத்து சோதிக்கும் போது, இதை நாம் பொறுத்துக் கொள்ளாமல் தன்னை தானே மாய்த்துக்கொள்கிறோம். இவ்வாறு செய்வதை நபி (ஸல்)
அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
ஹசன் அல்பஸ்ரீ அவர்கள் கூறியதாவது: உங்களுக்கு முன்னிருந்த (பனூ இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரைத் தொல்லைபடுத்திய போது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிரிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்து போனார். உங்கள் இறைவன் “(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக்கொண்டதால்) அவன் மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டேன்” என்று கூறினான்.
(இதை ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
பிறகு ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் (பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் எனக்கு அறிவித்தார்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல் : முஸ்லிலி ம் 180
மன வேதனையின் போது சகித்துக் கொள்வது மனிதன் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். பொறுமை மேற்கொள்வது இறைநம்பிக்கையாளனின் கடமையாகும். ஆனால் பல துன்ப நேரங்களில் கன்னத்தில் அறைந்து கொள்வதும், சட்டையைக் கிழித்துக் கொள்வதும், ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். துன்பங்கள் நேரும் போது படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என்றெண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து, இறைவா இந்த சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு. இதை விட சிறந்ததை வழங்கு என்று கூற வேண்டும்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.
(அல்குர்ஆன் 2:155-157)
பிறர் தரும் தொல்லைகளைப் சகித்துக் கொள்வது ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்தால் பல துன்பங்களையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும், அவ்வாறு அடையும் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை வெளிப்படையாக கூறும் போது கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அதே போல் நாமும் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருந்தால் பிறர் தரும் துன்பத்தையும், சங்கடத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் உணர்த்துகிறான்.
உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.
அல்குர்ஆன் 3:186
(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.
அல்குர்ஆன் 6:34
(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! பலம் பொருந்திய நமது அடியார் தாவூதை நினைவூட்டுவீராக! அவர் (நம்மிடம்) திரும்புபவராக இருந்தார்.
அல்குர்ஆன் 38:17
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.
அல்குர்ஆன் 42:43
போரில் துன்பங்களை சகித்துக் கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 3026, 2833
உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கüன் அடிமையாகவும் அவர்களுடைய எழுத்தராகவும் இருந்த சாலிம் அபுந் நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்துக் காட்டினேன். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாட்கüல் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
பிறகு மக்கüடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பüத்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்கüன் நிழல்கüல் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, “இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
நூல் : புகாரி 2956, 2966
போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து பொறுமையுடனும், (இறைவனுக்காக) தூய எண்ணத்துடனும், புறமுதுகிட்டு ஓடாமலும் போர் செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி),
நூல் : முஸ்லிம் 3830
இறை உதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தல்
(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.
அல்குர்ஆன் 10:109
உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார்.
அல்குர்ஆன் 68:48
வணக்கங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது
வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்குவீராக! அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) சகித்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?
அல்குர்ஆன் 19:65
(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
அல்குர்ஆன் 20:132
நபி (ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத் தர விரும்பினார்கள். அதற்கு அன்சாரிகள், (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் எங்களுக்கு வருவாய் மானியம் வழங்குவதைப் போன்றே எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் வருவாய் மானியம் வழங்காத வரை (நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டோம்) என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 2376
கோபத்தின் போது பொறுமையைக் கடைபிடித்தல்
ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய முதல் வேலை மனிதனுக்கு கோபத்தைச் சீண்டி விடுவதுதான். தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் நிற்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு கடும் சொற்களால் காயப்படுத்துவார். சிலவேளை அதையும் கடந்து சட்டைக் கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். அதே போல் கோபத்தினால் பல விபரீதமான காரியங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்.
மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான், இவருக்கு சமுதாயம் வீரன் என்று பட்டம் சூட்டி விடும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இவன் வீரனல்ல. வீரன் என்பவன் யாரென்றால் தனக்கு கோபம் வரும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கக் கூடியவன் தான் வீரன் என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்” என்று கூறினார்கள். மக்கள், “அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி),
நூல் : முஸ்-லிம் 5086
கோபம் மனிதனுக்குத் தேவைதான். தேவை இல்லை என்று கூறிட முடியாது ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும்.
பழி தீர்ப்பதை விட பொறுமையே சிறந்தது
ஒருவரை பலிழிக்குப் பழிலி வாங்குவதை விட பொறுமையை கடைப்பிடிப்பதே சிறந்து என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்!
அல்குர்ஆன் 16:126-127
லுக்மான் தனது மகனுக்கு பொறுமையை போதித்தார்
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நல்லடியாரான லுக்மான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அவர் தன் மகனிடம் இறைவனுக்கு இணைகற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும், பெற்றோருக்கு உதவ வேண்டும், பிறரிடத்தில் அழகிய முறையில் நடக்க வேண்டும், நல்லவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும், தர்மம் வழங்க வேண்டும், நன்மையை ஏவி, தீமையைத் தடு, சோதனை வரும் போது பொறுமையாக இருக்க வேண்டும், பிறரிடத்தில் கண்ணியமாக நடக்க வேண்டும், கர்வமாக நடக்கக் கூடாது என்று மிக அழகான முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். சகித்துக் கொள்ளுதல் என்ற செயலை மிக சிறப்புக்குரிய காரியமாக அவர்கள் தன் மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
அல்குர்ஆன் 31:17
யூசுப் (அலை) அவர்களின் பொறுமை
“எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லை” என்றனர். அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். “உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:17-18
அய்யூப் (அலை) அவர்களின் பொறுமை
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இவர் அமைந்துள்ளார்.
(அவரது உட-லில் புழுக்கள் உற்பத்தியாகின என்றெல்லாம் கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)
“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
அல்குர்ஆன் 21:83-84
நபி (ஸல்) அவர்களின் பொறுமை
பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.
அல்குர்ஆன் 11:115
தன் மகனாரின் மரணத்தை சந்தித்த நபியவர்கள் வரம்பு மீறியதில்லை. மடத்தனமான வார்த்தைகளை பேசியதில்லை. மாறாக பொறுமையாக இருந்துள்ளார்கள்.
மகன் இறந்த போது
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ர-லிலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்ஃபின் புதல்வரே!” என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்” என்றார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 1303
கொலை செய்வதாக மிரட்டியவரிடம்
நபிகளாரை வாளால் மிரட்டி பின்னர் வாள் தன்னிடம் வந்த போதும் அந்த நபரை நபிகளார் எதுவும் சொல்லாமலும் கண்டிக்காமலும் பொறுமையை கடைபிடித்தார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (“தாத்துர் ரிகாஉ’ எனும்) போருக்காக “நஜ்த்’ நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க் கொண்டிருந்தனர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிலிருந்து) உருவப்பட்டவாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், “என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று என்னிடம் கேட்டார்.
நான், “அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், “என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று கேட்டார். நான் “அல்லாஹ்’ என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை (கண்டிக்கவில்லை).
அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி),
நூல்: முஸ்லிம் 4585
கடுமையாக நடந்து தர்மம் கேட்டவரிடம்தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள்மரத்தில் தள்ளிவிட்டு அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாக பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறியபோது கோபப்பட்ட நபிகளார் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப்பார்த்து பொறுமையாக இருந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “ஹுனைன்’ போரிலி-ருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; “சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ü விட்டார்கள். நபியவர்கüன் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, “என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்கüன் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்கüடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி-),
நூல் : புகாரி 2821
நபிகளாரின் நீதத்தை சந்தேகித்த போது
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார்.
நான், “நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்கüடம் சொல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கüடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அüத்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்கüடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் “(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி-),
நூல் : புகாரி 6100
வரம்புமீறிய பெண்ணிடம் பொறுமை போதித்த நபிகளார் அனஸ் பின் மாலி-க் (ர-லி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், “இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அப்பெண்மணி, “ஆம் (தெரியும்)” என்று கூறினார். அனஸ் (ர-லி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, “அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், “என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்)” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார். அப்பெண், “எனக்கு அவர் யாரென்று தெரியாது” எனக் கூறினாள். அம்மனிதர், “அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)” என்று சொல்ல அவள், நபி (ஸல்) அவர்கüன் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள், “பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும்” என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 7154
மகளுக்கு பொறுமை போதித்த நபிகளார்
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ர-லி) “தமது குழந்தை’ அல்லது “தம் மகன்’ இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், “என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!” என்று கூறியனுப்பினார்கள்.
அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து “தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி-) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.
(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ர-லிலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள்.
அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ர-லி),
நூல் : முஸ்லிம் 1682, புகாரி7448
நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் நபி (ஸல்) அவர்(களின் இறப்பு நெருங்கியபோது அவர்)களுக்கு அருகில் இருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலிலி-) அவர்கள் நடந்துவந்தார்கள். அவரது நடை சிறிதும் பிசகாமல் அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வரவேற்றார்கள். பிறகு அவரை “தமது வலப் பக்கத்தில்’ அல்லது “இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டார்கள். பிறகு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய பதற்றத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.
அப்போது அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே?” என்று கேட்டேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தபோது ஃபாத்திமாவிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சென்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஃபாத்திமா,
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா (ர-லி) அவர்களிடம் நான், “உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்து நம்பிக்கையுடன் கேட்கிறேன். அந்த இரகசியம் என்னவென்று நீங்கள் சொல்லி-யே ஆகவேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி! இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்:
முதலாவது முறை என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். ஆனால், அவர் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.
ஆகவேதான், உங்கள் முன்னிலையில் நான் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! “இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது “இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?” என்று இரகசியமாகக் கேட்டார்கள். ஆகவேதான், உங்கள் முன்னிலையில் அவ்வாறு சிரித்தேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-லி),
நூல்: முஸ்லிம் 4844
மகன் இகழ்ந்த போது பொறுமை மேற்கொண்ட நபித்தோழி ஹாரிஸா பின் சுராகா (ரலி-) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ர-லி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த்தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர-லி),
நூல் : புகாரி 2809
பொறுமை கடைபிடித்து சொர்க்கவாதியான பெண்மணி
(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ர-லி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், “(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்” என்று சொன்னார்கள். இப்பெண்மணி “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆயினும், (வ-லிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலி-ருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 5032