*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 இஸ்லாமிய 🔥*
⤵
*🔥 ஒழுங்குகள் 🔥*
*✍🏻....தொடர் 1⃣1⃣2⃣*
*☄ திருமணத்தின்*
*ஒழுங்குகள் [ 03 ] ☄*
*🏮🍂திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது.* அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄மணப் பெண் தேர்வு செய்தல்*
*🏮🍂மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக் கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும்.* பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
*🏮🍂மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண் களின் நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள வேண்டும்.*
حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ*
_*🍃பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙 அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி).*
*📚 நூல்: புகாரி 5090 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment