பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 17, 2019

சிறப்பிற்குரியோர் யார்….?

சிறப்பிற்குரியோர் யார்….?

இந்த உலகத்திலே மனித சமுதாயம் படைக்கப்பட்ட உன்னதமான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

‘ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்க்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’

(அல் குர்ஆன் 51:56)

மேற்க்கண்ட வசனம் இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே உரித்தாக்கி ஒழுங்குற நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறது.

மற்றொரு வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

ஆதமுடைய மக்களை மேன்மை படுத்தியிருக்கிறோம்.

(அல்குர்ஆன் 17:70)

ஆதமுடைய சமுதாயத்தை மேன்மை படுத்தப்பட்ட சமுதாயம் எனவும் சிறப்பிற்குரிய சமுதாயம் எனவும் இறைவன் கூறுகின்றான்.

இவ்வாறு மேன்மை படுத்தப்பட்ட சமுதாயம் ஆறாவது அறிவான பகுத் தறிவு பெற்றிருக்கும் சமுதாயம் ஐந்தறிவு ஜீவராசிகளைப் போன்று தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அவர்கள் செய்யும் செயல்களுக்கு சுயமாக விளக்கம் கொடுத்துக்கொண்டு தங்களை சமுதாயத்தில் சிறப்பிற்குரிய நபர் என்று சொல்லிக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.

உதாரணமாக உங்களது ஊரிலே ஒரு மனிதனிடத்தில் சிறப்பிற்குரிய நபர் யார் என்று நீங்கள் கேட்டால் சமுதாயத்தில் பெரிய செல்வந்தர்கள்இ பிரமுகர்கள் அல்லது விஞ்ஞானிகள் ஜமாஅத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என்று அவர் குறிப்பிட்டு சொல்லுவார். ஏனென்றால் அவர்களுடைய பதவிஇ அந்தஸ்த்து ஆட்சி அதிகாரம் படைபலம் அறிவுத்திறன் இவைகளை  வைத்துக்கொண்டு சிறப்பிற்குரிய நபர் என்று சொல்லுவார்கள்.

இன்னும் சிலர்கள் ஒருபடி மேலே சென்று அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளை சிறப்பிற்குரிய நாடுகள் என்று சொல்லுவார்கள்.

ஏனென்றால் இந்நாடுகளில் பொருளாதார வளங்கள் ஆயுதபலம் படை பலம் இன்னும் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு செல்வங்கள் இருப்பதினால் இவ்வாறு சொல்கிறார்கள். ஆனால் திருமறைக் குர்ஆன் இவ்வாறு சாதனை படைத்தவர்களையோ அல்லது கண்டுபிடிப்பவர்களையோ பெரிய தலைவர்களையோ கூறவில்லை. மாறாக திருமறைக் குர்ஆன் புதிய விதத்தில் அதை தெளிவுபடுத்துகிறது.

உலக முஃமீன்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரியாக இரு பெண்களைப் குர்ஆன் பேசுகிறது.

பிர்அவ்னின் மனைவியை நம்பிக்கைக் கொண்டோருக்கு முன்னு தாரணமாக அல்லாஹ் கூறுகிறான்.

(அல் குர்ஆன் 66:11)

இம்ரானின் மகள் மர்யமையும்(இறைவன்) முன்னுதாரணமாக கூறுகிறான்.

(அல்குர்ஆன் 66:12)

நாம் ஆச்சர்யத்தோடு பார்ப்போம் இவர்கள் (இரண்டு பெண்கள்)அப்படி என்ன சாதனை செய்து விட்டார்கள்.

மல்லேஸ்வரி போன்று பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வாங்கிக்குவித்தார்களா? என நாம் பலவித மாக நினைக்கலாம். ஆனால் இவர்கள் செய்த சாதனையை வரலாற்றின் மூலம் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.

சாதனை படைத்த ஆசியா அம்மையார்

‘நானே உங்களின் மிகப்பெரிய இறைவன்’ (அல்குர்ஆன்(79:24) என பிர்அவ்ன் கூறினான். அந்நேரத்தில் மூஸா நபி அவர்கள் அந்த சமுதாய மக்களிடத்தில் ஓரிறைக் கொள்கையை பிரகடனப்படுத்தினார்கள். ஏகத்துவப் பிராச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.

அப்போது பிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்கள் தன் கணவன் சூப்பர் பவரா? அல்லது மூஸா நபி கொண்டு வந்த கடவுள் (கொள்கை) சூப்பர் பவரா? என அந்தப் பெண்மணி இக்காலத்து பெண்களைப் போன்று அவசரப்படாமல் பயமில்லாமல் சிந்தித்து உறுதியாக செயல்பட்டார்கள். மூஸாவின் கொள்கைதான் உண்மையான கொள்கையென விளங்கி இஸ்லாத்தை (தவ்ஹீதை) ஏற்றுக் கொண் டார்கள். அந்த காலகட்டத்தில் பிர்அவ்ன் மூஸா நபியின் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை கடுமையாக எச்சரித்தான்.

‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்கு சூனியத்தை கற்றுத் தந்த உங்களது குருவாவார். உங்களை மாறு கால் மாறுகை வெட்டி உங்களை பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாக தண்டிப்பவரும் நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்துகொள்வீர்கள்’ என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 20:71)

மூஸாவின் கடவுள் கொள்கையை யாராவது ஏற்றுக் கொண்டால் மக்களை கொலை செய்து விடுவேன் என எச்சரித்த இந்த தருணத்தில் அவனுடைய அறைகூவலுக்கு சிறிதும் இசைந்து கொடுக்காமல் உறுதியான மன தைரியத் துடன் மிகப்பெரிய செல்வந்தனான தன் கணவனாகிய பிர்அவ்னின் சொத்துகளுக்கும் ஆடம்பர வாழ்கைக்கும் அடிமையாகாமல் அதை அற்பமாக கருதி விட்டு இறைவனிடத்தில் ஆசியா அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கு ஒரு வீட்டை எழுப்புவாயாக! பிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிருந்தும் என்னை காப்பாற்றுவாயாக!’ என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை  நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக கூறுகிறான்.

(அல்குர்ஆன் 66:11)

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட உயிரை துச்சமாக மதித்து தன் கணவனால் இன்னல்கள் ஏற்படும் என்று வெளிப்படையாக தெரிந்தும் உலக சுக போகங்களுக்கு அடிமையாகாமல் தவ்ஹிதை ஏற்றக் காரணத்தினால்தான் இறைவன் அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியாக இப்பெண்மணியை கூறுகிறான்.

பொறுமையை காத்த மர்யம் (அலை)

இரண்டாவதாக சிறப்பிற்குரிய பெண்ணாக உலக மூஃமீன்களுக்கு அழகிய முன்மாதிரியாக ஈஸா நபியின் தாய் மர்யம்(அலை) அவர்களை பற்றி அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகிறான்.

இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாக கூறுகிறான்) அவர் தமது கற்பை காத்துக்கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைக ளையும் அவனது வேதங்களையும் உண்மைபடுத்தினார். அவர் கட் டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.

(அல்குர்ஆன் 62:12)

பொதுவாக மனித இனம் உருவாக பெண்ணின் சினைமுட்டையும் ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் நம்புகிறோம். ஆனால் இப்போது வாழும் இந்த சமுதாயத்தில் ஒரு ஆண் துணையின்றி ஒரு பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தால் உலகம் அப்பெண்ணை தவறாகவும் மோசமான நடத்தை உடையவள் என்றும் சித்தரிப்பார்கள். இதே நிலைக்கு மர்யம்(அலை) அவர்களும் தள்ளப்பட்டார்கள். அவர்களுடைய சமுதாய மக்கள் மர்யம் (அலை) அவர்களை பார்த்து  உன் தாய் தந்தை நடத்தை கெட்டவர்களாக இல்லை என பேசினார்கள்.

(பிள்ளை பெற்று) அப்பிள்ளையை தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். ‘மர்யமே! பயங்கரமான காரியத்தை செய்துவிட்டாயே?’ என்று அவர்கள் கேட்டனர்.

(அல்குர்ஆன் 19:27)

‘ஹாரூனின் சகோதரியே உனது தந்தை கெட்டவராக இருந்த தில்லை. உனது தாயும் நடத்தைகெட்டவராக இருக்கவில்லை’ என்றனர்.

(அல்குர்ஆன் 19:28)

அந்த நேரத்தில் மர்யம் (அலை) அவர்கள் நம் சமுதாயத்திலுள்ள குடும்ப பெண்களைப் போன்று கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வில்லை. உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீயில் கருகி சாக முயற்சிக்க வுமில்லை. மாறாக இறைவன் கொடுத்த இந்த குழந்தையை (ஈஸா(அலை)) பாதுகாத்தார்கள். இறைவனது வார்த்தைகளையும் அவனது வேதத்தையும் உண்மைப்படுத்தினார்கள்.

மேலும் பொறுமையை மேற்கொண்டார்கள். இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் இருந்தார்கள். இந்த அழகிய செயலால் உலக முஃமின்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இப்பெண்மணியை (மர்யம்(அலை)) அவர்களை அல்லாஹ் குர்ஆனில் சிலாகித்து சொல்கிறான்.

மனிதர்களில் ஏழ்மையானவர்தான் சிறப்பிற்குரியவர்

(‘செல்வமும் செல்வாக்கும் பெற்ற’) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் நடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் ‘இவரைப்பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக இவர் பெண் கேட்டால் இவருக்கு மண முடித்து வைக்கவும். இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர் ஆவார்’ என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பின்பு மற்றொரு மனிதர் (அவ்வழியாகச்) சென்றார் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முதல் கேட்ட அதே நண்பரிடம்) ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?’ என்று கேட் டார்கள் அதற்கு அவர்

‘அல்லாஹ்வின் தூதரே! இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவராவார் இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக்கொள்ளப்படாமலும் இவர் பேசினால் செவியேற் கப்படாமலும் இருக்கத் தகுதியானவர்’ என்று பதிலளித்தார் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவரைப்போன்ற செல்வந்தர்கள் இந்த பூமி நிரம்ப இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட இந்த ஏழை மேலானவர்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)இ

நூல் புகாரி (5091)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘நான் (மிஹ்ராஜ்) பயணத்தின் போது சொர்கத்தை எட்டிப் பார்த்தேன் அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன்’

அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி)இ

நூல்: புகாரி (6449)

சிறப்பிற்குரிய நபர்களாக பெரிய செல்வந்தர்களையோ அல்லது சமுதாயத் தலைவர்களையோ கின்னஸ் சாதனை படைத்தவர்களையோ கண்டுபிடிப்பாளர்களையோ சொர்கத்தில் இருந்ததாக நபியவர்கள் கூறவில்லை மாறாக ஏழை யானவர்களையே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

நாமும் சிறப்பிற்குரிய மனிதனாக மாறவேண்டும் என்றால் திருமறைகுர் ஆன் சொல்கின்ற பாதையில் நம் வாழ்க்கை பயணத்தை தொடரவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்: ‘இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள் எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’.

(அல்குர்ஆன் 59:7)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர் நன்மையை ஏவுகின்றனர் தீமையை தடுக்கின்றனர் நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர் அவர்களே நல்லோர்.

(அல்குர்ஆன் 3:116)

நமக்கு முன்மாதிரியாக திருகுர்ஆன் நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள இறைவனை சரியாக புரிந்து நடந்த நல்லவர்களின் செயல்களை பின்பற்றி இம்மைஇ மறுமை நற்பயன்களை பெற அல்லாஹ் அருள்புரிவானாக!

No comments:

Post a Comment