பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 3, 2019

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும

*அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்...*

*அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!* நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதர் மீது கடமை. (64:12)

*"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!* நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (3:32)

*அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்!* இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (3:132)

*அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்!) இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்!* எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (5:92)

நம்பிக்கை கொண்டோரே! *அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!* நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்! (8:20)

*அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!* முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (8:46)

*"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!''* எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. (24:54)

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! *இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!* இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (24:56)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! *இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!* உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (47:33)

உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். *அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்!* நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (58:13)

No comments:

Post a Comment