பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, October 30, 2019

பெண்களுக்கான - 10

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


     *இறுதி பாகம் 10* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன்  ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 *பெண்கள் தனியாக பயணம் செய்யலாமா?* 

ஒரு நாளைக் கடந்துவிடாத தூரத்திற்குள் தனியாக பெண்கள் பயணம் செய்வதற்கு அனுமதியுள்ளது. ஆனால் தான் செல்ல விரும்பு இடத்திற்குச் சென்று வந்தால் ஒரு நாளோ அதற்கு அதிகமான நாட்களோ ஆகுமென்றால் தனியாக பயணம் செய்வது கூடாது. இதுபோன்ற நேரங்களில் திருமணம் முடிக்கத்தடுக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்துத் தான் பயணம் செய்ய வேண்டும். 

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம்மேற்கொள்ள வேண்டாம்.

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)* 
 *நூல் : புகாரி (1088)* 

நபி (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து,  "அல்லாஹ்வின்  தூதரே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள்வதாக (ராணுவ வீரர்கள் பட்டிய-ல்)  எனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,என் மனைவி ஹஜ் செய்ய
விருக்கிறாள்''’என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "நீ  திரும்பிச்  சென்று உன்  மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)* 
 *நூல் : புகாரி (3061)* 

தனக்கும் தன் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் போது எந்த ஒரு பெண்ணும் மஹ்ரமானவர்களின் துணை இல்லாமல் பயணம் போகக் கூடாது. இதை மேலுள்ள ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ளலாம்.  ஆனால் தனியாக பயணித்தால் எந்த பாதிப்பும் பெண்ணிற்கு ஏற்படாது என்று கருதும் அளவிற்கு அச்சமற்ற நிலைஅவர்கள்  இருந்தால் அப்போது ஒரு பெண் தனியாக பயணிப்பதில் தவறில்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
 
நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ "ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று  பதிலüத்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள்.

 *அறிவிப்பவர் : அதீ பின் ஹாதம் (ரலி)* 
 *நூல் : புகாரி (3595)* 

    யாருடைய துணையும் இல்லாமல் தன்னந்தனியாக வந்து கஃபதுல்லாஹ்வை தவாஃப் செய்வாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தபகாத்து இப்னு சஃத் என்ற நூலில் 285 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    நபி (ஸல்) அவர்கள் தவறான உதாரணங்களை கூறமாட்டார்கள். பாதுகாப்புள்ள நிலையிலும் பெண் தனியாக பயணம் செய்வது கூடாதென்றால் தன்னந்தனியாக பயணம் செய்யும் பெண்னை உதாரணமாகக் காட்டி சிலாஹித்துக் கூறியிருக்கமாட்டார்கள். 
எனவே பாதுகாப்புள்ள நிலையில் மஹ்ரமான துணை இல்லாமலேயே பயணம் செய்யலாம் என்று மேலுள்ள ஹதீஸிலிருந்து விளங்குகிறது. பெண்கள் கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்யும் போது பாதுகாப்பு கிடைக்கும் என்று உறுதி இருந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்யலாம். 

 *பெண்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாமா?* 

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல் என்பது பொருள்.  இறையில்லத்தில் இறைவனை வணங்குவதற்காக மாத்திரம் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படுகிறது.  இவ்வணக்கத்தை செய்பவர்கள் அவசியமானத் தேவைகளுக்குத் தவிர மற்ற விஷயங்களுக்கு பள்ளியை விட்டும் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

இஃதிகாஃப் இருக்கக்கூடியவர் நோயாளியை நலம் விசாரிப்பதற்கு (வெளியில்) செல்லாமல் இருப்பதும் ஜனாஸாவில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் பெண்னை தொடமல் இருப்பதும் அவளை கட்டியணைக்காமல் இருப்பதும் மிக அவசியமானவைகளுக்குத் தவிர மற்ற தேவைகளுக்கு வெளியில் செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும்.

 நோன்புடனேத் தவிர (தனியாக) இஃதிகாஃப் கிடையாது. மக்கள் ஒன்றுசேருகின்ற பள்ளியிலேத் தவிர (வேறு இடத்தில்) இஃதிகாஃப் கிடையாது. 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : அபூதாவுத் (2115)* 

இஃதிகாஃப் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் பெண்கள் அனுமதி கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். எனவே பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாம். 
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவார்கள்.

 அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள்.

 அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலிலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் 
கேள்விப்பட்ட ஸைனப் (ரலிலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் காலை தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபோது நான்கு கூடாரங்களைக் கண்டு, "இவை என்ன?'' என்று கேட்டார்கள்.

 அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!'' என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (2041)* 

பள்ளியில் நெருக்கடிந்த ஏற்படும் அளவில் அதிகமான கூடாரங்களை அமைத்துக்கொண்டதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்னாரின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். அப்போது அவர் குசும்பப்பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும்போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (310)* 

அன்னிய ஆணுடன் எந்த ஒரு பெண்ணும் தனியாக இருக்கக்கூடாது என்பதால் இதைத் தவிர்க்க இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ அல்லது மஹ்ரமான ஆணோ இஃதிகாஃப் இருப்பது நல்லது.

 *பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லலாமா?* 

மரண பயத்தையும் மறுமை சிந்தனைûயும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். 

நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "  *"அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்* '' என்று சொல்'' என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (1774)* 

அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1777)* 

அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : புரைதா (ரலி)* 
 *நூல் : திர்மிதி (974)* 

மண்ணறைகளை ஜியாரத் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணைவைப்பு அறங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். 

 *கோ எஜ‚கேஷன் கூடுமோ?* 

    கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே வகுப்பறையில் பயிலும் கல்வி முறைக்கு கோ எஜ‚கேஷன் என்று சொல்லப்படுகிறது. ஆணும் பெண்ணும் கல்வியை வளர்த்துக்கொள்வதற்கு இஸ்லாத்தில் பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால் கல்வி என்றப் பெயரில் ஒழுக்கங்கெட்டு நடப்பதைத் தான் இஸ்லாம் தடுக்கிறது. 

    *கோ எஜ‚கேஷன்* நடைமுறையில் உள்ள கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதும் கேளி கிண்டல் செய்வதும் காதலிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இது ஒரு குற்றமாகக் கருதப்படுவது கிடையாது. இப்படிப்பட்ட இடங்களுக்கு நமது பெண்களை அனுப்பினால் அவர்களும் தவறான வழிக்கு சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

    நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சபைகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்களின் பார்வை பெண்களின் மீது படாதவாறு ஆண்கள் முன்னாலும் பெண்கள் பின்னாலும் அமர்வார்கள். சபை களையும் போது பெண்கள் முதலில் களைந்து செல்வார்கள். பெண்கள் சென்றதற்குப் பிறகு ஆண்கள் செல்வார்கள். இப்படியொரு அருமையான வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்துள்ளார்கள். 
         
    இந்த வழிமுறையையும் இஸ்லாம் சொல்லும் ஒழுங்கு முறைகளையும் கல்லூரிகளில் கடைபிடித்தால் அங்கு சென்று தாரளமாக கற்கலாம். ஆனால் அப்படியொரு கல்லூரி கிடைக்காத பட்சத்தில் அல்லாஹ்விற்கு பயந்து இஸ்லாமிய ஒழுங்கு முறைகளை முழுமையாக கடைபிடித்து கல்லூரிக்குச் செல்வது தவறில்லை. 

    பெண்களுக்கென்று தனியாக கல்லூரிகள் இருந்தால் அங்கு சென்று படிப்பது சிறந்தது.  

 *பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?* 

பெண்கள் வேலைக்காக வெளியே செல்லும் போது அன்னிய ஆண்களுடன் தனித்திருக்க வேண்டிய நிலையும் அவர்களுடன் பழக வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதை இஸ்லாம் தடுத்திருக்கிறது. 
ஆண்களால் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக ஒரிடத்திற்குச் செல்லும்போது அவளது கற்புக்கு பாதுகாப்பற்றுப் போய்விடுகிறது. இதையெல்லாம் கவனித்தில் வைத்துப் பார்க்கும் போது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லாமல் இருப்பதே சிறந்தது என்று தெரிகிறது. 

    தான் வேலைக்குச் செல்லக்கூடிய இடம் மார்க்கத்தின் வரம்புகளை மீறுவதற்கான சூழ்நிலைகள் அற்ற இடமாகவும் தன் கற்புக்கு பாதுகாப்பான இடமாகவும் இருந்தால் மேலும் அவ்வாறு வேலைக்குச் செல்வது மிக அவசியமானதாகவும் இருந்தால் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. 
    
பெண்கள் வெளியில் செல்லாமல் வீடுகளிலே இருந்து வேலை செய்து சம்பாரிப்பதில் தவறில்லை. இது தான் அவர்களுக்கு சிறந்ததாகவும் உள்ளது. 
    மேலதிகமான விபரங்களை அறிய பெண்கள் வெளியில் செல்லலாமா என்ற தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட செய்திகளை படித்துத் தெரிந்து கொள்க. 

 *பெண்கள் வேலைக்கு செல்லாமா❓கூடுதல் விளக்கம்* 

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்      

        *(அல்குர்-ஆன் 4:32)* 

 மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதி நேரடியாக வழங்கப்படுகின்றது.
            பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயப் பணியை செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.

 *2727* و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ح و حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ طُلِّقَتْ خَالَتِي فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ فَأَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفًا رواه مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.

 *முஸ்லிம் (2972)* 

 *938* حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.

 *புகாரி (938)* 

எனவே உங்களுடைய தாய்,  வீட்டில் மிளகாய் விற்று உங்களை படிக்க வைத்தது தவறல்ல.
                           பெண்கள் வேலைக்குச் செல்வது மார்க்கத்தில் ஹராம் என்று நாம் கூறவில்லை.

 தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது அவ்வளவு சிறந்ததல்ல என்றே கூறுகிறோம். ஏனென்றால் தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏராளமான மார்க்க நெறிமுறைகளை மீறக்கூடிய நிலை ஏற்படுகிறது.  இஸ்லாமிய நெறிமுறைகளை பேணி பெண்கள் தற்காலத்தில் வேலைக்கு செல்வதென்பது கடினமான விஷயமாக உள்ளது.

குடும்பத்துக்காக பொருளீட்டும் பொறுப்பு ஆண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ (34)4

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

 *அல்குர்ஆன் (4 : 34)* 

 *2554* حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلَا فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். 

 பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

 *புகாரி (2554)* 

பெண் தன் கணவனையும் கணவனின் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். இது பெண்ணுடைய பொறுப்பாகும். இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதில்லை.
ஆண்கள் மீது சுமத்தப்பட்ட பொருளீட்டும் பொறுப்பை இவர்கள் தங்கள் கையில் எடுத்ததன் விளைவு தாங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை இவர்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. *மேலும் வேலைக்குச் செல்லும் இடத்தில் அந்நிய ஆண்களுடன் தனித்திருத்தல் அந்நிய ஆண்களுடன் குலைந்து பேசுதல் ஹிஜாபைப் பேணாமல் இருத்தல் மஹ்ரமானவரின் துணையின்றி தூரமான இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுதல் போன்ற ஒழுக்கக் கேடுகளும் ஏற்படுகின்றன* . மார்க்கக் கடமைகளை மீறுவதற்கு ஒரு செயல் காரணமாக இருந்தால் அந்த செயலும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.
எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல. 

உங்களுடைய வருங்கால மனைவியால் மார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பணிபுரிய முடியுமா? என்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள சக ஆண்களால் என்ன என்ன இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் என்பது தான் உண்மை 

 *ஒப்பாரி வைக்கக்கூடாது* 

துக்கம் மேலிடும் போது சப்தமிட்டு ஒப்பாரி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஒப்பாரி வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)* 
 *நூல் : புகாரி (1306)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களிடத்தில் இரண்டு (கெட்ட பண்புகள்) உள்ளது. அவர்களிடத்தில் உள்ள அந்த இரண்டும் இறைநிராகரிப்பாகும். (ஒன்று) வம்சாவழியில் குறையை ஏற்படுத்துவதாகும். (மற்றொன்று) இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பதாகும். 

 *அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (100)* 

(துன்பத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி)* 
 *நூல் : புகாரி (1294)* 

ஆனால் ஒப்பாரி வைக்காமல் கவலைப்பட்டாலோ சப்தமிடாமல் கண்ணீர் வடித்தாலோ குற்றமில்லை. 
சஅத் பின் உபாதா (ரலிலி) நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலிலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், " என்ன? இறந்துவிட்டாரா?'' எனக் கேட்டார்கள். "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்றனர்.  நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர்.  பின் நபி (ஸல்) அவர்கள், "(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்ôலை- பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து- எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான்.  
    உமர் (ரலிலி) அவர்கள்  ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் கம்பினால் அடிப்பார்கள்; கல்லெறிவார்கன்.  இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்கள்.

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)* 
 *நூல் : புகாரி (1304)* 

    *கணவன் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கமாக இருக்கலாம்.*

 மற்றவர்கள் யார் இறந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழிந்து விட்டால் சகஜ நிலைக்குத் திரும்பிவிட வேண்டும். 
நான், தமது சகோதரரை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலிலி) அவர்களிடம் சென்றேன். அவர் நறுமணம் பூசிக்கொண்டு, “"இது எனக்குத் தேவையில்லைதான்;  ஆயினும் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தனது கணவனைத் தவிர வேறு யாருடைய *இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது;*  தனது கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது  நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன்''  என்றார்.

    *அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி)* 
 *நூல் : புகாரி (1282)* 

 *பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா?* 

பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

 *அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி),* 
 *நூல் : புகாரி(5504)* 

 *இறுதியாக*

பெண்களுக்கு மாத்திரம் பிரத்யேகமான பல சட்டங்களை அறிந்துகொண்டோம். தொழும் முறை உளூ செய்யும் முறை தயம்மம் இன்னும் பல விஷயங்களில் ஆண்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு பொருந்தும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள் தான் என்று கூறியுள்ளார்கள்.
 பெண்கள் ஆண்களைப் போன்றவர்களாவார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி)* 
 *நூல் : அஹ்மத் (25869)* 

இவற்றைத் தெரிந்துகொள்ள நபிவழியில் தொழுகைச் சட்டங்கள் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள்.
 
  *முற்றும்* 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment