பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 17, 2019

வரதட்சனை

*👺👺மீள் பதிவு 👺 👺*

*🌐🌐🌐வரதட்சனை ஓர் இஸ்லாமிய பார்வை🌐🌐🌐*

*🧕🧕🧕வரதட்சனை ஓர் வன் கொடுமை❓ வரதட்சணை ஓர் பெரும் பாவம்❓ வரதட்சணை வாங்குவதால் அது உங்களை நரகத்தில் சேர்த்துவிடும❓ 🧕🧕🧕*

*🌎இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்🌎*

*🌹🌹🌹அல்லாஹூம் அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு🌹🌹🌹*

*📚📚📚அல்குர்ஆனும் மற்றும் ஆதாரப்பூர்வமான📚📚📚 ஹதீஸ்களில் இருந்து உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

*✍✍✍பெண்களுக்கு சொத்துரிமையில்லாத இந்து மதத்தில் வெறுங்கையுடன் மணமகன் வரக்கூடாது என்று ஏர்படுத்தப்பட்டதுதான் சீதனம் (வரதட்சணை) என்பது! இந்த வரதட்சணை.✍✍✍*

📕📕📕(மஹர்) மணக்கொடை என்ற சொல் இஸ்லாத்தில் வழக்கொழிந்துவிடுமோ என்று அஞ்சுமளவுக்கு இந்த இந்துமத தாக்கம் முஸ்லிம்களிடையே புரையோடிவிட்டது.📕📕📕

*✍✍✍பெண் என்ற ஒருத்தி கல்யாணம் என்ற நிகழ்வுக்கு பிறகு செய்யும் தியாகங்கள் ஏனோ இந்த வறட்டு இதயங்களுக்கு தென்படுவதில்லை.*
*நினைத்த நேரம் அவனுக்கு சுகத்தை அள்ளி வழங்கி கர்ப்பம் தரிக்கின்றாள். இதுதான் இவளது தியாகத்தின் உச்சக்கட்டம். மசக்கை என்ற பெயரில் மயக்கம் ஆனாலும் வேலை செய்யத்தவறுவதில்லை. கருவை சுமக்கும் ஒரே காரணத்துக்காக உண்ணும் உணவெல்லாம் வாந்தியாக வெளியாகிறது. நடந்தால் மூச்சிறைப்பு. நினைத்தமாதிரி தூங்க முடியாத நிலை. இன்னும் பிரசவநாள் நெருங்கும் வரை இவள் படும் வேதனைகள் எழுத பக்கங்கள் போதாது.✍✍✍*

📘📘📘பிரசவ வலி வந்து ஒரு பெண் துடிக்கும் நிலைகண்டு கல் நெஞ்சம் கசிந்துருகிவிடும் கோலம். பிரசவ நேரத்தில் வாழ்வா, சாவா என்ற மரணப்போரட்டத்தின் உச்சக்கட்டத்தில் ஈன்றெடுக்கிறாள் குழந்தையை. இத்தோடு இவள் தியாகம் முழுமை பெற்றுவிட்டதா? இல்லை!
தான் உண்ட உணவு தனக்கே போதாத நிலையில் தன் குழந்தைக்கும் தன் இரத்தத்தை பாலாக ஊட்டும் தியாகத்தின் உச்சகட்டம். இவ்வாறு கட்டில் முதல் தொட்டில் வரை, பாலூட்டுதல் முதல் குழந்தையின் மலஜலம் அகற்றுதல் வரை செய்து நான்கு மதில்களுக்குள் ஒரு தியாகப்போராட்டமே நடத்தும் இந்த பெண் இனத்திடம் எனக்கு எவ்வளவு தருவாய் எனக்கேட்கும் ஒருவனை எவ்வாறு மனிதனாக கருதமுடியும்❓📘📘📘

*👉 👉 👉 இஸ்லாமியத் திருமணத்திற்குத் தேவை இவைகளா👇👇👇👇👇*

*👉1. சீதனமா❓ சீர் வரிசைகளா ❓👈*

*👉2. சடங்குகளா ❓ சம்பிரதாயங்களா❓👈*

*👉 3. ஊர்வலமா❓ ஊர்திகளா❓👈*

*👉4. மேளதாளங்களா❓ வாத்தியங்களா❓👈*

*👉 5. பூமாலையா ❓ பூச்செண்டுகளா❓👈*

*👉 6. ஆரத்தியா❓ ஐதீகங்களா❓👈*

*👉 7. தாலியா❓ கரிசைமணியா❓👈*

*👉 8. குத்பாவா❓ வேதமந்திரங்களா❓👈*

*👉 9.அல்லிஃப்பைனஹுமாவா❓அல்ஃபாத்திஹாவா❓👈*

*👉 10. கட்டித்தழுவுவதா❓ காலில் விழுவதா❓👈*

*👉👉👉ஒரு திருமணம் முழமை பெற தேவையானவை:-👇👇👇*

*👉 1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)👇*

*✍✍✍அவர்களின் குடும்பத்தார் அனுமதியுடன் அவர்களை மணந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 4:25) இந்த வசனமும் ஒரு பெண் தானாக மணமுடித்துக் கொள்வதைத் தடை செய்கிறது.✍✍✍*

📙📙📙பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📙📙📙

  *அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி). நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785*

*👉 2. மணமக்களின் முழமையான சம்மதம் (ஈஜாபு , கபூல்)👇*

*✍✍✍பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவர்களின் சம்மதம் பெறுவது மிகவும் அவசியமாகும். கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.✍✍✍*
*அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: புகாரி 6971, 6964, 5137*

📗📗📗என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.📗📗📗

*அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி). நூல்: புகாரி 5139, 6945, 6969*

*👉 3. இரு நீதமுள்ள சாட்சிகள் (ஷாஹித்கள்)👇*

*✍✍✍இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல் – வாங்கல், இன்ன பிற உடன்படிக்கைகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். இதைத் _திருக்குர்ஆன் 2:282, 5:106_  ஆகிய வசனங்களில் காணலாம். திருமணம் என்பதும் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளே அதற்குப் போதுமானது தான்.✍✍✍*

*👉 4. மணமகளுக்கு உரிமையுள்ள (மஹர்)👇*

📔📔📔இவ்வசனங்களில் *(2:236, 2:237, 4:4, 4:24,25, 4:127, 5:5, 33:50, 60:10)* திருமணம் செய்யும்போது ஆண்கள் தமது மனைவியருக்கு மஹர் எனும் மணக்கொடை வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.📔📔📔

*✍✍✍மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்*
*_(அல்குர்ஆன் 4:4)_*
*மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள்.* *_(அல்குர்ஆன் 4:24,25)_*
*மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.* *_(அல்குர்ஆன் 4:20)_✍✍✍*

*🌐🌐வரதட்சணைக் கொடுமையும், நிரந்தர நரகமும்…🌎🌎*

📓📓📓இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.  விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.📓📓📓

*✍✍✍நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்!* *ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்* . *_(அல்குர்ஆன் 2:208)_*  *பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏதோ ஒப்பு சப்புக்காக இஸ்லாமிய கடமைகளில் ஒன்றிரண்டைப்* *பின்பற்றி விட்டு மற்றவற்றில் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடந்து கொள்கின்றனர்.*
*இவ்வாறு சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று தான்* *வரதட்சணை!  இந்த வரதட்சணை மற்றும் அதனால் ஏற்படும்* *சமூகக் கொடுமைகள்  எத்தனையோ இளைஞர்கள் இந்த ஏகத்துவ பிரச்சாரத்தால் கவரப்பட்டு, மஹர்* *கொடுத்து திருமணம் முடிக்க முன் வந்தது, இன்னும் முடித்துக் கொண்டிருப்பது,* *ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் தாங்கள் பெண் வீட்டில் வாங்கிய பொருட்களைத் திருப்பிக் கொடுப்பது போன்ற காரியங்களெல்லாம் நடப்பது ஒரு சரித்திர மாற்றமாகும்.*  *இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மறுமை பயம் தான்!  அந்த மறுமை பயத்தைப் பிரச்சாரத்தின் போது* *ஊட்டியதால் தான் இந்த மாற்ற மும்மறுமலர்ச்சியும்! இதனுடைய முன்னேற்றம் தான் வரதட்சணை* *திருமணத்தை மக்கள் புறக்கணிக்க முன்வந்த காரியம்!  எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சொந்த சகோதரர்களின் திருமணத்தைக் கூட* *புறக்கணித்து விட்டு, சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் இந்தப் போரட்ட உணர்வு, புரட்சித் தீ தொடர்ந்து பற்றி எரியுமானால் இன்ஷா அல்லாஹ்* *பெருமளவில் இந்த வரதட்சணை எனும் கொடுமையை சுட்டுப் பொசுக்கலாம்.  ஆனால் இதை* *ஏகத்துவவாதிகள் என்று சொல்க் கொள்பவர்களே சரியாகப் பேணுவது கிடையாது.✍✍✍*

📒📒📒இந்த வரதட்சணை ஏற்படுத்திய மோசமான விளைவுகளைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அந்த அளவுக்குத் தீமை என்று வெளிப்படையாகத் தெரியும் விஷயம் தான் வரதட்சணை!
இன்று பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, பெண்ணினம் கருவில் உருவாகும் போதே நவீன கருவிகள் மூலம் கண்டறியப் பட்டு அதைக் கொலை செய்வது, நீண்ட காலம் ஆகியும் திருமணமாகாமல் பெண்கள் விபச்சாரத்தை நோக்கி ஓடுவது போன்ற குடும்ப மற்றும் சமூக ரீதியான தீமைகள் அனைத்திற்கும் காரணமே வரதட்சணை தான்!  வரதட்சணை வாங்கியவர்களிடம் இந்தப் பாவங்களுக்கெல்லாம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப் போவது கிடையாது.
அல்லாஹ் கணக்கு தீர்க்கும் பாவங்களின் பட்டியல் இன்னும் சில பாவங்களும் சேர்கின்றன.  அந்தப் பாவங்கள் எவை என்பதை விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம்!
பிள்ளைகளிடம் பாரபட்சம்
எல்லாவற்றிற்கும் வழி காட்டும் மார்க்கம், தாய் தந்தையர் தமது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் வழி காட்டுகின்றது.📒📒📒

*✍✍✍பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு எப்படி அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதும் அந்த வழி காட்டல்களில் உள்ள ஒன்றாகும்.*
*நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:*
*என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ர) அவர்கள் என் தந்தையிடம், ”நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக* *ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள்.  என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று,* *”அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின்* *வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி)* *தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,* *”உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள்.  அதற்கு என் தந்தை, ”இல்லை” என்று பதிலளித்தார்.*  *அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு* *அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள்.*  *இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்✍✍✍.*

*அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல்,  நூல்: புகாரி 2587*

📚📚📚மற்றொரு அறிவிப்பில், ”நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர்.  குறிப்பாக, பெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை.  பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.
இந்த வேறுபாட்டை பெற்றோர்கள் தாங்களாகவும் செய்கின்றார்கள்; வரக் கூடிய மாப்பிள்ளைகள் வைக்கும் கோரிக்கைக்குத் தக்கவும் இந்த வேறுபாட்டைச் செய்கின்றார்கள்.  இங்கு தான் வரதட்சணையின் முதல் விபரீதத்தை, மோசமான விளைவுகளை நாம் பார்க்கிறோம்.
பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்!  தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள்.  மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.📚📚📚

*✍✍✍”அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீதமாக நடங்கள்! என்னைப் பாவத்திற்கு சாட்சியாக்காதீர்கள்!”* *என்ற நபி (ஸல்) அவர்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கருத்தில் கொண்டு பாருங்கள்.  இந்த* *வரதட்சணைக் கொடுமை எந்த அளவுக்குப்* *பெற்றோர்களை தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் நீதம் தவற வைக்கின்றது? எனவே* *வரதட்சணை வாங்கக் கூடியவர்கள் இந்தப்* *பாவத்திற்காகவும் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றாக வேண்டும்.  அல்லாஹ் காப்பானாக!*
*பாகப் பிரிவினையா❓ பாவப் பிரிவினையா❓✍✍✍*

⏳⏳⏳வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும்.  நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம்.  அதற்கான விளக்கம் இதோ!
பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்!  ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது.  மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர்.  தகப்பனார் தனது மகளுக்காக தான் உயிருடன் இருக்கும் காலத்தில் மேற்கண்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றார்.  தகப்பனார் இறந்ததும், அவரது சொத்துக்கள் பாகப்பிரிவினை சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் சொத்துக்களின் உரிய பங்கு போய் சேர வேண்டும்.  ஆனால் நடைமுறையில் அவ்வாறு சேர்கின்றதா என்றால் இல்லை!
பெண்ணின் சகோதரர்கள் அவளை அழைத்து, ”உன்னைக் கட்டிக் கொடுக்கும் போது இவ்வளவு தொகை பணமாகவும், பொருளாகவும் தந்திருக்கின்றார்.  அதன் மதிப்பு இவ்வளவு ரூபாய் ஆகின்றது.  எனவே இப்போது சொத்தில் உனக்குரிய பங்கை எங்களுக்காக விட்டுக் கொடு” என்று அன்பாகவோ, அதட்டலாகவோ பேசி அப்பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை அநியாயமாக அபகரித்து விடுகின்றார்கள்⏳⏳⏳.

*✍✍✍ஒரு சில ஊர்களில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதே பாவம் என்று பெண்களே நினைக்கின்றார்கள்.*  *இந்தக் கொடுமை தமிழக மற்றும் இலங்கை முஸ்ம்களிடத்தில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.*  *தகப்பன் இறந்த பிறகு பங்கு வைக்கப்பட வேண்டிய சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் போது* *வழங்கிய அன்பளிப்பை எப்படிக் கழிக்க முடியும்?  இதைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின்* *சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? பாகப்பிரிவினையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சொல் விட்டுக் கூறுவதைக் கவனியுங்கள்!*
*இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும்,* *அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின்* *கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே* *மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும்,* *அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான்.* *அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.✍✍✍*

*_(அல்குர்ஆன் 4:13,14)_*

🌈🌈🌈அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான்.
வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடம் சொல்லும் போது, மற்ற மற்ற மக்களை விட்டு விடுவோம்.  ஏகத்துவவாதிகளே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  ஏகத்துவவாதிகள் எல்லோரையும் இப்படிச் சொல்லவில்லை.  நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சொந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் புறக்கணித்து பட்டினி கிடப்பவர்களும் இருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இந்தத் தீமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு வரதட்சணை மட்டுமல்ல, பெண் வீட்டில் தாங்களே விரும்பித் தரும் அன்பளிப்பைக் கூட வாங்க மாட்டேன்; பொட்டு நகை கூட போடாமல் வந்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்த ஏகத்துவவாதிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
ஆனால் அதே சமயம், இதையெல்லாம் பெரிய தீமையாக நினைக்காமல் வரதட்சணை வாங்கப் படும் திருமணங்களில் போய் கலந்து கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் ஏகத்துவவாதிகள் என்ற பெயரில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.🌈🌈🌈

*✍✍✍வரதட்சணை வாங்குவது பெண்களின் சொத்துக்களைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது.  சொத்துக்களைப் பறிப்பது* *அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும்.*  *அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது.*  *இப்படி நிரந்தர நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த வரதட்சணையை வாங்கலாமா❓*  *அவ்வாறு வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் போய் கலந்து கொள்ளலாமா❓* *முடிவெடுங்கள்!இது போன்ற திருமணங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து,* *வரதட்சணை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணியுங்கள்!✍✍✍*

*🌐பெண் வீட்டாரிடம் கடன் வாங்கித் திருமணம் செய்வது சரியா❓🌐*

⛱⛱⛱சில ஆண்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை என்று கேட்டு வாங்காமல் "ஒரு லட்சம்,இரண்டு லட்சம் கடனாகத் தாருங்கள், திருமணத்தின் பின்பு திருப்பித் தருகின்றேன்''என்று கேட்டு வாங்கிக் கொள்கின்றார்கள். அதைத் திரும்பச் செலுத்துகின்றார்களா,இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் பெண் வீட்டாரிடம் இது போன்று கடன் வாங்கித் திருமணம் செய்வது மார்க்க அடிப்படையில் சரியா❓⛱⛱⛱

*பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால்* *மனநிறைவுடனும்,மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!✍✍✍*

*_அல்குர்ஆன் 4:4_*

🕋 🕋 🕋 பெண்களுக்கு மஹர் கொடுத்துத் தான் மணம் முடிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால் இன்று இறைக் கட்டளைக்கு நேர் மாற்றமாக மஹர் கொடுக்காதது மட்டுமின்றி பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்கித் திருமணம் செய்யும் அவல நிலை உள்ளது🕋🕋🕋.

*✍✍✍நீங்கள் கூறுவது போன்று சிலர், மஹர் கொடுத்துத் திருமணம் செய்கின்றேன் என்று கூறிக் கொண்டு, பெண் வீட்டில் கடன் வாங்கித் திருமணம் செய்கின்றனர். கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது தானே என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்கின்றனர். ஆனால் இதுவும் ஒரு வகையில் மறைமுகமான வரதட்சணை தான் என்பதில் சந்தேகமில்லை.✍✍✍*

📕📕📕மஹர் தொகையிலிருந்து அவர்களாக எதையேனும் மனமுவந்து விட்டுத் தந்தால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அதாவது மாப்பிள்ளை கொடுத்த மஹர் தொகையிலிருந்து பெண் தருவதாக இருந்தாலும் மனமுவந்து தர வேண்டும். நிர்ப்பந்தத்திற்குப் பயந்து கொடுக்கக் கூடாது. ஆனால் இங்கு என்ன நடக்கின்றது? பெயரளவிற்கு ஆயிரம் ரூபாய் பெருந்தன்மையாக (?) மஹர் கொடுத்து விட்டு, லட்சக் கணக்கில் பெண் வீட்டிலிருந்து கடன் வாங்குகின்றார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று சர்வ சாதாரணமாகக் கடன் கொடுத்து விட மாட்டார்கள். ஆனால் பெண் வீட்டுக்காரர்கள்,மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கின் றார்கள் என்றால் அவர்கள் ஒரு வித நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் கொடுக்கின்றார்கள்.📕📕📕

*✍✍✍மார்க்கம் விதிக்கின்ற நிபந்தனைகளான அடைமானம், எழுதிக் கொள்ளுதல்,சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற எதுவுமே இல்லாமல் மாப்பிள்ளை என்ற ஒரே அந்தஸ்தைப் பயன்படுத்தி இந்தக் கடன் நாடகம் அரங்கேறுகின்றது.*
*அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.*
*நபி (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தனது பிடரியில் சுமந்து* *கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ,ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள்.*
*பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான்* *எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மூன்று முறை கேட்டார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி(ரலி), நூல்: புகாரி 2597*

📘📘📘அன்பளிப்பு என்பது அனுமதிக்கப்பட்டது தான் என்றாலும் இந்த இடத்தில் அதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இவர் வீட்டில் இருந்தால் இந்த அன்பளிப்பு கிடைத்திருக்குமா? என்று கேட்கின்றார்கள்.
இது போன்று தான், கடன் என்பது அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் ஒருவித நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கப்படுவதை நாம் கடனாக எடுத்துக் கொள்ள முடியாது.
அதே மாப்பிள்ளை அங்கு பெண் எடுக்கவில்லை என்றால் இந்தத் தொகையை கடனாகக் கொடுப் பார்களா? என்றால் நிச்சயமாகக் கொடுக்க மாட்டார்கள். இந்த ஒரு லாஜிக்கே இது மறைமுகமான வரதட்சணை என்பதற்குப் போதுமான சான்றாகும்.
அதே போல் பெண் வீட்டுக்காரர்கள் இவ்வாறு கடன் கேட்டிருந்தால் அதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிப்பார்களா? என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். தனக்கு வர வேண்டிய மஹரைக் கூட ஒரு பெண், தானாக நிர்ணயம் செய்து, அதை அழுத்தமாகக் கேட்க முடியாத சூழ்நிலை நமது நாட்டில் நிலவும் போது, கடன் கேட்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பெண் வீடு என்றால் மாப்பிள்ளை வீட்டாருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை நிலவுவது தான். இந்த நிலைமை மாறாத வரை இது போன்ற கட்டாயக் கடன்களை (?) தடுக்க முடியாது.📘📘📘

*🌐🌐வரதட்சணை ஓர் வன் கொடுமை🌎🌎*

*✍✍✍ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது.*
*இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும்.*
*இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.*
*ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.✍✍✍*

📙📙📙# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.📙📙📙

*✍✍✍# திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.✍✍✍*

📗📗📗# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.📗📗📗

*✍✍✍# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.*
*பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.✍✍✍*

*👺👺வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்👺👺*

*👺வரதட்சணை ஓர் வன் கொடுமை👺*

📓📓📓வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.
இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி வாழும் ஒரு முஸ்லிம், தன்னுடையத் திருமண வேளையில் மட்டும் படைத்தவனை மறந்து, தான் மணம் புரியப்போகும் பெண்ணிடம் அதற்காகக் கைக்கூலியை கௌரவப் பிச்சையாகப் பெறுவது அவமானமானது மட்டுமல்ல, படைத்தவனின் சட்டத்திற்கு எதிராக அவனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பானதாகும் என்பதை அத்தகைய கைக்கூலி மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.📓📓📓

*✍✍✍வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த  மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்!*
*திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூற வேண்டாம். மாறாக, அது இறைவனின் இறை அச்சத்தால் நிச்சயிக்கப்படுகிறது  என்று மார்தட்டி சொல்வோம்.✍✍✍*

📔📔📔இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது கஷ்டம்தான். எல்லா தரப்பினரும் இறை அச்சம் கொண்டவர்களாக, அருள்மறை வழி  நடந்தால்தான் ஒரு நல்ல முடிவு கிடைக்கும், இன்ஷாஅல்லாஹ்.
வரதச்சனை  என்பதை இன்றைய கால கட்டத்தில் ஒரு தனி நபர் மாத்திரம் நினைத்தால் நடக்கக்கூடிய விசயம் இல்லை? மாறாக குடும்பத்தில் உள்ள நபர்கள், சொந்தம், நண்பர்கள், மேலும் அந்த நபர் சார்ந்திருக்கும் ஜமாஅத். இவர்கள் அத்துனை நபர்களும் சார்ந்த விசயம். இதில் ஜமாஅத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் மேல் குறிப்பிட்டவர்களில் செயல்களை தடுத்து நிறுத்துவதும்📔📔📔
.

*✍✍✍சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பதும் அவர்களின் கைலதான் இருக்கிறது? மேலும் ஜமாஅத்தும் மேல் கூறிய மட்ற்ற நபர்களும் வரதச்சனை வாங்க நினைக்கும் அந்த நபரோ, சொந்தமோ, குடும்பத்தினரோ இவர்களில் யார் காரணமோ அவர்களை  தவிர்த்து மத்தவர்கள்  இந்த தவறான காரியத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அவர்களிடம் இருந்து விலகி நிற்க வேண்டும்.*
  *“தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை”✍✍✍*

_*(அல்குர்ஆன் 013:011).*_

📒📒📒“மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை” – *_(அல்குர்ஆன் 010:044)._*
பன்றி இறைச்சி உண்பது தீய, பாவச் செயல்” என்ற உணர்வு சமூகத்தில் ஊறிப் போயுள்ள அளவிற்கு, வரதட்சணை வாங்குதலும் பாவச் செயல்” என்ற எண்ணம் உள்ளத்தில் ஊன்றப் படும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட ஆரம்பித்தால் இச்சமுதாயம் இறை உவப்புக்குரிய உன்னத சமுதாயமாக நிலைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை📒📒📒.

*🌐🌐🌐இந்த வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்கு சில ஆலோசனைகள்:🌐🌐🌐*

*✍✍✍1. வரதட்சணை கொடுத்து என் பெண்ணை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று பெண் வீட்டாரும், வரதட்சணை வாங்கி  என் மகனுக்கு திருமணம் செய்யமாட்டேன் என்று ஆண் வீட்டாரும் இறை அச்சத்துடன் ஒரே உறுதியாய் இருக்கணும்,✍✍✍*

*📚📚📚2.* வரதட்சணை வாங்கினால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் ஆணும், வரதட்சணை கொடுத்தால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் பெண்ணும் உறுதியாய் இருக்கணும்📚📚📚

*✍✍✍3. வரதட்சணை வாங்கப்பட்ட கல்யாணத்தை,* *அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!*
*அல்லாஹ் நம் சமுதாயத்தை நல் வழியில்* *செலுத்துவானாக !!மற்றவரிடம் (வரதச்சனை கேட்டு)*  *கை ஏந்தும் என்னத்தை அல்லாஹ் அறவே மற்றுவானாக !!✍✍✍*

*🧕🧕மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!👲👲*

*👫👫👫 வரதச்சனை வாங்கமாட்டோம் !! கொடுக்க மாட்டோம் !! இன்ஷா அல்லாஹ் !!!👫👫👫*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment