பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, October 8, 2019

மூட நம்பிக்கைகள்

*மூட நம்பிக்கைகள்*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

*யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.*

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9171

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

*யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.*

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா
நூல்: முஸ்லிம் 4137

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

*தொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது.*

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 5757

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

*சகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.*

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)
நூல்: அபூதாவூத் 3411

*எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.*

அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)
நூல்: அஹ்மத் (6748)

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

*யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.*

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)
நூல்: அஹ்மத் (16781)

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

*யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.*

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)
நூல்: அஹ்மத் (16763)

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

*நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "இதைக் கழற்றி விடு! இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்'' என்று கூறினார்கள்.*

நூல்: அஹ்மத் (19149)

No comments:

Post a Comment