*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*✍🏼...நன்மைகளை வாரி*
⤵
*வழங்கும் தொழுகை*
*✍🏼...தொடர் [ 09 ]*
*☄உளுவின் சிறப்புகள் { 07 }*
*☄உளூச் செய்த பிறகு ஓதும்*
*துஆவின் சிறப்புகள்☄*
*عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الإِبِلِ فَجَاءَتْ نَوْبَتِى فَرَوَّحْتُهَا بِعَشِىٍّ فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَائِمًا يُحَدِّثُ النَّاسَ فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ. « مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّى رَكْعَتَيْنِ مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ». قَالَ فَقُلْتُ مَا أَجْوَدَ هَذِهِ. فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَىَّ يَقُولُ الَّتِى قَبْلَهَا أَجْوَدُ. فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ قَالَ إِنِّى قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا قَالَ « مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ – أَوْ فَيُسْبِغُ – الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ».*
_*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
_*உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.*_
*🎙அறிவிப்பவர் :*
*உக்பா பின் ஆமிர் (ரலி),*
*📚 நூல்: முஸ்லிம் 397 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*🏮🍂இதுவரை நாம் உளூச் செய்வதினால் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றி பார்த்தோம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்.*
*☄1. தூய்மைப் பேணுவதினால் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது.*
*☄2. தூய்மை ஈமானில் பாதி. அந்த பாக்கியத்தை அடைகின்றோம்.*
*☄3. பல்துலக்குவது இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருகிறது.*
*☄4. உளூச் செய்யும் போது உறுப்புக்களின் வழியாகத் தண்ணீருடன் பாவங்கள் வெளியேறுகின்றன.*
*☄5. முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.*
*☄6. இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.*
*☄7. மறுமையில் உளூவினால் உறுப்புகள் ஒளிமயமாகக் காட்சி தருகின்றன.*
*☄8. மறுமையில் கவ்சர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம் கிடைக்கிறது.*
*☄9. நபிகள் நாயகத்தின் தோழர்களாகும் பாக்கியம் கிடைக்கிறது.*
*☄10. சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல்.*
*☄11. சுவர்க்கம் கட்டாயமாகிறது.*
*☄12. சுவக்கத்தின் எட்டு வாயில்களில் விரும்பிய வாசல் வழியாக நுழையும் பாக்கியம்.*
*🏮🍂தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் தொடர்களில் விரிவாகக் காண்போம்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
⤵⤵⤵
✍🏼.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment