பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 17, 2019

இஸ்லாத்தை அறிந்து - 42

*🍓🍓🍓மீள் பதிவு🍓🍓🍓*

*🌹🌹🌹🌹*

*🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋*
                                                                        

*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர்  பாகம் 42 👈👈👈*

     *👉தலைப்பு👇*

*👨‍👨‍👧👨‍👨‍👧மனிதனைப் பற்றி மாமறை.!👨‍👨‍👧👨‍👨‍👧*

*👉👉👉மனிதனைப் பற்றி மாமறை👈👈👈*

*✍✍✍இறைவனால் படைக்கப்பட்டவன் தான் மனிதன். இறைவனின் அடிமைகளான மனித இனம் தன்னைப்படைத்த இறைவனை முற்றிலும் புறக்கணித்து விடுகிறது. தரமிழந்த வாழ்கை நடத்தும் தரங்கெட்டவனாக மனிதன் திகழ்கிறான். மனிதன் யார்❓ அவ்னைப்படைதது யார்❓ அவன் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன❓✍✍✍*

📕📕📕இவ்வுலகத்துடன் மட்டும் மனித வாழ்கை முடிந்து விடுகிறதா❓ மனிதன் எப்படி வாழ வேண்டும். என்ற பல தகவல்களை திருக்குர்ஆன் வழங்குகிறது. மனிதனைப் பற்றிய செய்திகளை அறிந்தால் போதும்; மனிதன் மாசுபடிந்த வாழ்வை உதறி வல்ல அல்லாஹ்வின் கட்டளைகளை செயல்படுதுபவனாக மாறி விடுவான்.📕📕📕  

*👨‍👨‍👧👨‍👨‍👧மனிதன் தன் படைப்பை சிந்திக்கட்டும்👨‍👨‍👧👨‍👨‍👧*

اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏

*✍✍✍இதற்கு முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாகப் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா❓✍✍✍* 

*(திருக்குர்ஆன்:19:67.)*

*🌎🌎மண்ணால் படைக்கப் பட்டமுதல் மனிதர்👨‍👨‍👧👨‍👨‍👧*

الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ‌ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ‌ۚ‏

📘📘📘அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.📘📘📘

*(திருக்குர்ஆன்:32:7. )*

*🕋🕋பின்பு விந்தினால் படைக்கப்பட்டான்🕋🕋*

خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّـطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏

*✍✍✍அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.✍✍✍*

*(திருக்குர்ஆன்:16:4.)*

*🧕🧕கர்ப்பப்பையில் சுமக்கப்ப் பட்டான்🧕🧕*

وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ‏

📙📙📙 நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”📙📙📙

*(திருக்குர்ஆன்:31:14.)*

*👨‍👨‍👧👨‍👨‍👧ஆண்-பெண் என படைத்தவன் இறைவனே!🕋🕋*

*✍✍✍அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.✍✍✍*

*(திருக்குர்ஆன்:42;49,50.)*

*🌐🌐🌐கண்-நாவை தந்தவன் இறைவனே!🌎🌎🌎*

📗📗📗அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)❓📗📗📗

*(திருக்குர்ஆன்:90:8,9.)*

*🔴⚫🔵அழகிய அமைப்பில் படைக்கப்பட்டான்🔴⚫🔵*

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

*✍✍✍திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.✍✍✍*

*(திருக்குர்ஆன்:95:4.)*

*🕋🕋🕋இறைவனை வணங்கத்தான் மனிதன்,🕋🕋🕋*

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

📒📒📒இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.📒📒📒

*(திருக்குர்ஆன்:51:56.)*

*👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧மனிதனின் பிடரி நரம்மைவிட நெருக்கமானவன் இறைவன்,🕋🕋🕋*

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏

*✍✍✍மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.✍✍✍*

*(திருக்குர்ஆன்:50:16.)*

*👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧மனிதன் செல்வதை விரும்புவான்👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧*

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏

📓📓📓இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.📓📓📓

*(திருக்குர்ஆன்:100:8. )*

*👺கஞ்சன்👺*

قُلْ لَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَ خَزَآٮِٕنَ رَحْمَةِ رَبِّىْۤ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا

*✍✍✍“என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் – மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.✍✍✍* 

*(திருக்குர்ஆன்:17:100.)*

*👺👺பலவீனமானவன்👺👺*

يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ‌ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏

📔📔📔அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.📔📔📔

*(திருக்குர்ஆன்:4:28.)*

*🏓🏓அவசரக்காரன்🏓🏓*

وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏

*✍✍✍மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.✍✍✍*

*(திருக்குர்ஆன்:17:11.)*

*👺👺தர்க்கம் செய்பவன்👺👺*

وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَىْءٍ جَدَلًا‏

📚📚📚இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்📚📚📚.

*(திருக்குர்ஆன்:8:54.)*

*🌐🏓🌎கஷ்டம் ஏற்பட்டால்..🌎🏓🌐*

*✍✍✍மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.✍✍✍*

*(திருக்குர்ஆன்:39:49.)*

*👺👺👺நன்றி கெட்டவன்👺👺👺*

وَاٰتٰٮكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَـظَلُوْمٌ كَفَّارٌ

⛱⛱⛱(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.⛱⛱⛱

*(திருக்குர்ஆன்:14:34.)*

*👨‍👨‍👧👨‍👨‍👧மனிதன் இறப்பவனே!👨‍👨‍👧👨‍👨‍👧*

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ

*✍✍✍ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;✍✍✍*

*(திருக்குர்ஆன்:3:185.)*

*🕋🕋மறுமையை மறுக்கிறான்👺👺*

🌈🌈🌈எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.🌈🌈🌈

*(திருக்குர்ஆன்:75:5,6.)*

*👺👺மறுமையில் தவிப்பான்👺👺*

يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ‌ ۚ‏

*✍✍✍அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.✍✍✍*

*(திருக்குர்ஆன்:75:10.)*

🌎🌎🌎மனித சமுதாயமே! உன் நிலையைப்பற்றி இவ்வளவு தெளிவாக மாமறை கூறுகிறதே!உன் வாழ்கையை எப்படி அமைதுக்கொள்ள போகிறாய்?இன்று உன் வாழ்வின் முறை நாளை (மறுமையில்) வெற்றிக் கனியை (சொர்கத்தை) பெற்றுத் தரும்.சிந்தித்து செயல்படு! நிச்சயம் மறுமையில் வெற்றி பெறுவாய்.!🌎🌎🌎

*🔰🏓🔰மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்🔰🏓🔰*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 43*

No comments:

Post a Comment