பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, October 29, 2019

இஸ்லாத்தை அறிந்து -52

*🍓🍓🍓மீள் பதிவு🍓🍓🍓* 


 *🌹🌹🌹🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 52 👈👈👈* 


     *👉தலைப்பு👇* *🔰⚫🔴சிறப்பிற்குரியோர் யார்….❓🔰🔵⚫*  *👉👉👉சிறப்பிற்குரியோர் யார்….❓👈👈👈* 


 *✍✍✍இந்த உலகத்திலே மனித சமுதாயம் படைக்கப்பட்ட உன்னதமான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்* .
 *‘ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்க்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’✍✍✍* 

 *(அல் குர்ஆன் 51:56)* 

📕📕📕மேற்க்கண்ட வசனம் இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே உரித்தாக்கி ஒழுங்குற நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறது.
மற்றொரு வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.
ஆதமுடைய மக்களை மேன்மை படுத்தியிருக்கிறோம்.📕📕📕

 *(அல்குர்ஆன் 17:70)* 

 *✍✍✍ஆதமுடைய சமுதாயத்தை மேன்மை படுத்தப்பட்ட சமுதாயம் எனவும் சிறப்பிற்குரிய சமுதாயம் எனவும் இறைவன் கூறுகின்றான்.* 
 *இவ்வாறு மேன்மை படுத்தப்பட்ட சமுதாயம் ஆறாவது அறிவான பகுத் தறிவு பெற்றிருக்கும் சமுதாயம் ஐந்தறிவு ஜீவராசிகளைப் போன்று தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.✍✍✍* 

📘📘📘அவர்கள் செய்யும் செயல்களுக்கு சுயமாக விளக்கம் கொடுத்துக்கொண்டு தங்களை சமுதாயத்தில் சிறப்பிற்குரிய நபர் என்று சொல்லிக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.📘📘📘

 *✍✍✍உதாரணமாக உங்களது ஊரிலே ஒரு மனிதனிடத்தில் சிறப்பிற்குரிய நபர் யார் என்று நீங்கள் கேட்டால் சமுதாயத்தில் பெரிய செல்வந்தர்கள்இ பிரமுகர்கள் அல்லது விஞ்ஞானிகள் ஜமாஅத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என்று அவர் குறிப்பிட்டு சொல்லுவார். ஏனென்றால் அவர்களுடைய பதவிஇ அந்தஸ்த்து ஆட்சி அதிகாரம் படைபலம் அறிவுத்திறன் இவைகளை  வைத்துக்கொண்டு சிறப்பிற்குரிய நபர் என்று சொல்லுவார்கள்.✍✍✍* 

📙📙📙இன்னும் சிலர்கள் ஒருபடி மேலே சென்று அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளை சிறப்பிற்குரிய நாடுகள் என்று சொல்லுவார்கள்.📙📙📙

 *✍✍✍ஏனென்றால் இந்நாடுகளில் பொருளாதார வளங்கள் ஆயுதபலம் படை பலம் இன்னும் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு செல்வங்கள் இருப்பதினால் இவ்வாறு சொல்கிறார்கள். ஆனால் திருமறைக் குர்ஆன் இவ்வாறு சாதனை படைத்தவர்களையோ அல்லது கண்டுபிடிப்பவர்களையோ பெரிய தலைவர்களையோ கூறவில்லை. மாறாக திருமறைக் குர்ஆன் புதிய விதத்தில் அதை தெளிவுபடுத்துகிறது✍✍✍* .


📒📒📒உலக முஃமீன்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரியாக இரு பெண்களைப் குர்ஆன் பேசுகிறது.📒📒📒

 *✍✍✍பிர்அவ்னின் மனைவியை நம்பிக்கைக் கொண்டோருக்கு முன்னு தாரணமாக அல்லாஹ் கூறுகிறான்.✍✍✍* 


 *(அல் குர்ஆன் 66:11)* 


📗📗📗இம்ரானின் மகள் மர்யமையும்(இறைவன்) முன்னுதாரணமாக கூறுகிறான்.📗📗📗

 *(அல்குர்ஆன் 66:12)* 

 *✍✍✍நாம் ஆச்சர்யத்தோடு பார்ப்போம் இவர்கள் (இரண்டு பெண்கள்)அப்படி என்ன சாதனை செய்து விட்டார்கள்.* 
 *மல்லேஸ்வரி போன்று பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வாங்கிக்குவித்தார்களா? என நாம் பலவித மாக நினைக்கலாம். ஆனால் இவர்கள் செய்த சாதனையை வரலாற்றின் மூலம் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.✍✍✍* 


 *🧕🧕🧕சாதனை படைத்த ஆசியா அம்மையார்🧕🧕🧕* 


📓📓📓நானே உங்களின் மிகப்பெரிய இறைவன்’ (அல்குர்ஆன்(திருகுர்ஆன் 79:24) என பிர்அவ்ன் கூறினான். அந்நேரத்தில் மூஸா நபி அவர்கள் அந்த சமுதாய மக்களிடத்தில் ஓரிறைக் கொள்கையை பிரகடனப்படுத்தினார்கள். ஏகத்துவப் பிராச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.📓📓📓

 *✍✍✍அப்போது பிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்கள் தன் கணவன் சூப்பர் பவரா? அல்லது மூஸா நபி கொண்டு வந்த கடவுள் (கொள்கை) சூப்பர் பவரா? என அந்தப் பெண்மணி இக்காலத்து பெண்களைப் போன்று அவசரப்படாமல் பயமில்லாமல் சிந்தித்து உறுதியாக செயல்பட்டார்கள். மூஸாவின் கொள்கைதான் உண்மையான கொள்கையென விளங்கி இஸ்லாத்தை (தவ்ஹீதை) ஏற்றுக் கொண் டார்கள். அந்த காலகட்டத்தில் பிர்அவ்ன் மூஸா நபியின் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை கடுமையாக எச்சரித்தான்.✍✍✍* 

📔📔📔‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்கு சூனியத்தை கற்றுத் தந்த உங்களது குருவாவார். உங்களை மாறு கால் மாறுகை வெட்டி உங்களை பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாக தண்டிப்பவரும் நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்துகொள்வீர்கள்’ என்று அவன் கூறினான்.📔📔📔

 *(அல்குர்ஆன் 20:71)* 

 *✍✍✍மூஸாவின் கடவுள் கொள்கையை யாராவது ஏற்றுக் கொண்டால் மக்களை கொலை செய்து விடுவேன் என எச்சரித்த இந்த தருணத்தில் அவனுடைய அறைகூவலுக்கு சிறிதும் இசைந்து கொடுக்காமல் உறுதியான மன தைரியத் துடன் மிகப்பெரிய செல்வந்தனான தன் கணவனாகிய பிர்அவ்னின் சொத்துகளுக்கும் ஆடம்பர வாழ்கைக்கும் அடிமையாகாமல் அதை அற்பமாக கருதி விட்டு இறைவனிடத்தில் ஆசியா அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்✍✍✍* .

📚📚📚‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கு ஒரு வீட்டை எழுப்புவாயாக! பிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிருந்தும் என்னை காப்பாற்றுவாயாக!’ என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை  நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக கூறுகிறான்.📚📚📚

 *(அல்குர்ஆன் 66:11)* 

 *✍✍✍இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட உயிரை துச்சமாக மதித்து தன் கணவனால் இன்னல்கள் ஏற்படும் என்று வெளிப்படையாக தெரிந்தும் உலக சுக போகங்களுக்கு அடிமையாகாமல் தவ்ஹிதை ஏற்றக் காரணத்தினால்தான் இறைவன் அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியாக இப்பெண்மணியை கூறுகிறான்.✍✍✍* 


 *🧕🧕🧕பொறுமையை காத்த மர்யம் (அலை)🧕🧕🧕* 


⛱⛱⛱இரண்டாவதாக சிறப்பிற்குரிய பெண்ணாக உலக மூஃமீன்களுக்கு அழகிய முன்மாதிரியாக ஈஸா நபியின் தாய் மர்யம்(அலை) அவர்களை பற்றி அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகிறான்.⛱⛱⛱

 *✍✍✍இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாக கூறுகிறான்) அவர் தமது கற்பை காத்துக்கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைக ளையும் அவனது வேதங்களையும் உண்மைபடுத்தினார். அவர் கட் டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.✍✍✍* 

 *(அல்குர்ஆன் 62:12)* 

🌈🌈🌈பொதுவாக மனித இனம் உருவாக பெண்ணின் சினைமுட்டையும் ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் நம்புகிறோம். ஆனால் இப்போது வாழும் இந்த சமுதாயத்தில் ஒரு ஆண் துணையின்றி ஒரு பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தால் உலகம் அப்பெண்ணை தவறாகவும் மோசமான நடத்தை உடையவள் என்றும் சித்தரிப்பார்கள். இதே நிலைக்கு மர்யம்(அலை) அவர்களும் தள்ளப்பட்டார்கள். அவர்களுடைய சமுதாய மக்கள் மர்யம் (அலை) அவர்களை பார்த்து  உன் தாய் தந்தை நடத்தை கெட்டவர்களாக இல்லை என பேசினார்கள்.🌈🌈🌈

 *✍✍✍(பிள்ளை பெற்று) அப்பிள்ளையை தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். ‘மர்யமே! பயங்கரமான காரியத்தை செய்துவிட்டாயே?’ என்று அவர்கள் கேட்டனர்.✍✍✍* 

 *(அல்குர்ஆன் 19:27)* 

🔰🔰🔰‘ஹாரூனின் சகோதரியே உனது தந்தை கெட்டவராக இருந்த தில்லை. உனது தாயும் நடத்தைகெட்டவராக இருக்கவில்லை’ என்றனர்.🔰🔰🔰

 *(அல்குர்ஆன் 19:28)* 

 *✍✍✍அந்த நேரத்தில் மர்யம் (அலை) அவர்கள் நம் சமுதாயத்திலுள்ள குடும்ப பெண்களைப் போன்று கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வில்லை. உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீயில் கருகி சாக முயற்சிக்க வுமில்லை. மாறாக இறைவன் கொடுத்த இந்த குழந்தையை (ஈஸா(அலை)) பாதுகாத்தார்கள். இறைவனது வார்த்தைகளையும் அவனது வேதத்தையும் உண்மைப்படுத்தினார்கள்✍✍✍* .

🔴🔴🔴மேலும் பொறுமையை மேற்கொண்டார்கள். இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் இருந்தார்கள். இந்த அழகிய செயலால் உலக முஃமின்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இப்பெண்மணியை (மர்யம்(அலை)) அவர்களை அல்லாஹ் குர்ஆனில் சிலாகித்து சொல்கிறான்.🔴🔴🔴


 *🧕🧕🧕ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.🧕🧕🧕* 


 *✍✍✍1579. ”நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்✍✍✍* .

 *புஹாரி : 3895 ஆயிஷா (ரலி).* 

🔵🔵🔵1580. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள். நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதன்று)” என்று கூறினேன்.🔵🔵🔵

 *புஹாரி : 5228 ஆயிஷா (ரலி).* 


 *✍✍✍1581. நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.✍✍✍* 

 *புஹாரி : 6130 ஆயிஷா (ரலி).* 

⚫⚫⚫1582. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்க மக்கள் நபிகளார் என்னிடம் தங்கும் நாள் எது என எதிர்பார்த்து வழங்கினர்.⚫⚫⚫

 *புஹாரி :2574 ஆயிஷா (ரலி).* 

 *✍✍✍1583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?’ என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.✍✍✍* 

 *புஹாரி : 4450 ஆயிஷா (ரலி).* 

🏵🏵🏵1584. நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாதிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)”(திருகுர்ஆன்4:69) என்று சொல்லத் தொடங்கினார்கள்.🏵🏵🏵

 *புஹாரி : 4436 ஆயிஷா (ரலி).* 

 *✍✍✍1585. ”உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), ‘அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, ‘இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது’ என்று நான் எண்ணிக்கொண்டேன்✍✍✍* .

 *புஹாரி : 4435 ஆயிஷா (ரலி).* 

📘📘📘1586. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, ‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்’ அல்லது ‘(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்’ எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று சொல்லி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், ‘இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், ‘இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.📘📘📘

 *புஹாரி : 4437 ஆயிஷா (ரலி).* 

 *✍✍✍1587. நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.✍✍✍* 


 *புஹாரி : 5211 ஆயிஷா (ரலி).* 


📙📙📙1588. (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் ‘ஸரீத்’ என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📙📙📙

 *புஹாரி : 3770 அனஸ் இப்னு மாலிக் (ரலி).* 


 *✍✍✍1589. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்✍✍✍* .

 *புஹாரி :3217 அபூ ஸலாமா (ரலி).* 


📗📗📗1590. (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக் கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார். என் கணவர் (மக்கா உள்ளிட்ட) ‘திஹாமா’ பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை. கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.📗📗📗

 *✍✍✍ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை✍✍✍.* 


📒📒📒ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் ‘விவரமில்லாதவர்’ அல்லது ‘ஆண்மையில்லாதவர்’, சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் என்னை ஏசுவார். கேலி செய்தால்) என் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) என் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்:என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.📒📒📒


 *✍✍✍ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிரைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) ‘ஞக்’ எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.(என் கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும்.(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்து விடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுபவர்.)(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)✍✍✍* 


📓📓📓(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுளங்கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) ‘கத்’ எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, ‘உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு” என்றார்.(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.) ஆயிஷா (ரலி) கூறினார்:📓📓📓

 *✍✍✍(என்னருமைக் கணவரான) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்’ என்றார்கள்✍✍✍.* 


 *புஹாரி :5189 ஆயிஷா (ரலி).*  *🧕🧕🧕அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.🧕🧕🧕* 


📔📔📔1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) – அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! – கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது” என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். – அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை – (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) – அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.📔📔📔


 *புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).* 


📚📚📚1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.📚📚📚


 *புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).* 


 *✍✍✍1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் ‘வலப்பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், ‘எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், ‘உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, ‘சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, ‘ஃபாத்திமா! ‘இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்)✍✍✍* 


 *🌐🌐🌎மனிதர்களில் ஏழ்மையானவர்தான் சிறப்பிற்குரியவர்🌎🌎🌐* 


⛱⛱⛱செல்வமும் செல்வாக்கும் பெற்ற’) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் நடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் ‘இவரைப்பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக இவர் பெண் கேட்டால் இவருக்கு மண முடித்து வைக்கவும். இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர் ஆவார்’ என்று பதிலளித்தார்.⛱⛱⛱


 *✍✍✍அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பின்பு மற்றொரு மனிதர் (அவ்வழியாகச்) சென்றார் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முதல் கேட்ட அதே நண்பரிடம்) ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?’ என்று கேட் டார்கள் அதற்கு அவர்* 
‘ *அல்லாஹ்வின் தூதரே! இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவராவார் இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக்கொள்ளப்படாமலும் இவர் பேசினால் செவியேற் கப்படாமலும் இருக்கத் தகுதியானவர்’ என்று பதிலளித்தார் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவரைப்போன்ற செல்வந்தர்கள் இந்த பூமி நிரம்ப இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட இந்த ஏழை மேலானவர்’ என்று கூறினார்கள்✍✍✍.* 


 *அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)இ* 

 *நூல் புகாரி (5091)* 


🌈🌈🌈நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘நான் (மிஹ்ராஜ்) பயணத்தின் போது சொர்கத்தை எட்டிப் பார்த்தேன் அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன்’🌈🌈🌈


 *அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி)இ* 

 *நூல்: புகாரி (6449*)


 *✍✍✍சிறப்பிற்குரிய நபர்களாக பெரிய செல்வந்தர்களையோ அல்லது சமுதாயத் தலைவர்களையோ கின்னஸ் சாதனை படைத்தவர்களையோ கண்டுபிடிப்பாளர்களையோ சொர்கத்தில் இருந்ததாக நபியவர்கள் கூறவில்லை மாறாக ஏழை யானவர்களையே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.✍✍✍* 


🔰🔰🔰நாமும் சிறப்பிற்குரிய மனிதனாக மாறவேண்டும் என்றால் திருமறைகுர் ஆன் சொல்கின்ற பாதையில் நம் வாழ்க்கை பயணத்தை தொடரவேண்டும்.🔰🔰🔰


 *✍✍✍அல்லாஹ் கூறுகின்றான்: ‘இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள் எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’.✍✍✍* 


 *(அல்குர்ஆன் 59:7)* 


🔴🔴🔴அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர் நன்மையை ஏவுகின்றனர் தீமையை தடுக்கின்றனர் நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர் அவர்களே நல்லோர்.🔴🔴🔴


 *(அல்குர்ஆன் 3:116)* 


 *✍✍✍நமக்கு முன்மாதிரியாக திருகுர்ஆன் நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள இறைவனை சரியாக புரிந்து நடந்த நல்லவர்களின் செயல்களை பின்பற்றி இம்மைஇ மறுமை நற்பயன்களை பெற அல்லாஹ் அருள்புரிவானாக!*✍✍✍ 


 *👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧நல்லவர்கள் கஷ்டப்படுவதும்👺👺👺 தீயவர்கள் சுகமாக வாழ்வதும்👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧* 


*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 53*


No comments:

Post a Comment