பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, October 26, 2019

இஸ்லாத்தை அறிந்து - 49

*🍓🍓🍓மீள் பதிவு🍓🍓🍓* 


 *🌹🌹🌹🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 49 👈👈👈* 


     *👉தலைப்பு👇*


*🔴⚫நல்ல செயல்களும் 👺👺தீய செயல்களும்🔵⚫* 


 *👉👉👉நல்ல செயல்களும் தீய செயல்களும்👈👈👈* 


 *✍✍✍அல்லாஹ் மனிதனை படைத்து அவனுக்கு தீங்கு தர கூடிய பொருள்களையும், தீங்கு ஏற்படுத்தாத பொருள் (காரியங்)களையும் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் மனிதன் தனக்கு தீங்கு தராத பொருள்களை விட்டு விட்டு தீங்கு தரக்கூடியப் பொருள்களை பயன்படுத்தவே விரும்புகிறான். மனிதர் மூலமாக தீங்கு தரக்கூடிய பொருள்கள் உள்ளன. மது, புகையிலை, சிசுவைக் கொள்ளுதல். அடிக்கடி கோபப்படுதல் இது போன்ற செயல்கள் மனிதனுக்கு தீங்கு தரக்கூடியதாக ஏற்படுத்தி யுள்ளான்.✍✍✍* 


📕📕📕இவை அனைத்தும் அல்லாஹ் எதற்காக ஏற்படுத்தியுள்ளான் என்றால் நம்மை சோதிப்பதற்காகத்தான். நாம் அனைவரும் இந்த செயல் விட்டும் நாம் விலகி இருக்கவேண்டும். இறைவன் தடுத்த காரியங்களில் ஈடுபட்டால் நமக்குத்தான் கேடே தவிர இறைவனுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.📕📕📕


 *✍✍✍ஒரு மனிதன் ரோட்டில் வண்டி ஓட்டுகிறான். அவன் ஓட்டும் போது பள்ளம், மேடு பார்த்து ஓட்டினால்தான் காயம் இல்லாமல் தப்பிக்கலாம். அதிலே மெதுவாக போகாமல் வேகமாக வண்டி ஓட்டினால் நமக்குதான் ஆபத்து. அதே போன்று தான் இவ்வுலகத்தில் அல்லாஹ் நம்மை படைத்து பள்ளம், மேடு என்ற தீய காரியங்களை ஏற்படுத்தியுள்ளான். ஆனால் தீய காரியங்களை விட்டு ஒதுங்கி விலகினால் நமக்கு எந்த ஆபத்தும்ஏற்படாது.*  *விலகவில்லையென்றால் நமக்குத்தான் ஆபத்து ஏற்படும். இஸ்லாம் தீமையை விட்டு விலக வேண்டும் என்று கூறுகிறது.✍✍✍* 


 *🍹🍹🍹மதுவை தவிர்ப்போம்🍹🍹🍹* 


📘📘📘நம் நாட்டில் பணக்காரன் முதல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வரை மது அருந்தாமல் இருக்கவில்லை. மதுவை அருந்தக் கூடியவர் களிடத்தில் நீங்கள் ஏன் மது அருந்துகிறீர்கள் என்று கேட்டால், மதுவை குடித்தால் அந்நேரத்தில் நமது மனத்திற்கு சந்தோஷம் கிடைக்கிறது என்று கூறுவார்கள்.📘📘📘


 *✍✍✍மதுவை அருந்துபவர்களின் சிலர் மதுவை குடிப்பதற்கு சில காரணங்களை கூறுவார்கள். பணக்காரனிடம் கேட்டால், ‘எனது கம்பெனியில் நஷ்டம் அடைந்து விட்டது அதனால் தான் நான் மது அருந்துகிறோன்’ என்று கூறுகிறான். அதேபோன்று ஏழையிடம், ‘நீ ஏன் மது அருந்துகிறாய்?’ என்று கேட்டால், ‘எனது வீட்டில் வறுமையாக இருக்கு எனக்கு வேலையில்லை. எனது மனைவி என்னை விட்டு சென்று விட்டால்…’ என்று கூறுவான். இது எல்லாம் சரியான காரணமா? என்றால் இல்லை.✍✍✍* 


📙📙📙கஷ்டம் ஏற்படுகிறது என்பதற்கு இன்னொரு கஷ்டத்தை ஏற்படும் செயலை செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. நமக்கு ஏற்படும் கஷ்டத்திற்கு காரணத்தை கண்டுபிடித்து அதை போக்குவதற்குரிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர. இன்னொரு தீய செயலுக்கு செல்லக்கூடாது.📙📙📙


 *✍✍✍நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!* 
 *மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ் வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக் கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ளமாட்டீர்களா❓✍✍✍* 


 *(அல்குர்ஆன் 5: 90-91)* 


 *🍹🍹🍹மதுவால் நமக்கு குறைவான நன்மைகள் இருந்தாலும் அதிகமான தீமைகள் ஏற்படும்.👺👺👺* 


📗📗📗மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக் குச் சில பயன்களும் உள்ளன. அவ் விரண்டின் பயனைவிட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது’ எனக் கூறுவீராக!📗📗📗


 *(அல்குர்ஆன் 2: 219)* 


 *🍹🍹🍹மதுவால் ஏற்படும் தீமைகள்👺👺👺* 


 *✍✍✍அறிவியல் ரீதியாக மதுவினால் ஏற்படும் பல தீமைகளை மருத்து வர்கள் பட்டியலிட்டு கூறியுள்ளார்கள்.* 

 *1. நரம்பு தளர்ந்து போகும்* 

 *2. ஆண்மை குறையும்* 

 *3. குடல் பாதிப்பு* 

 *4. பசியின்மை* 

 *5. கல்லீரல் மண்ணீரல் பாதிப்பு* 

 *6. மலச் சிக்கல்* 

 *7. சிறுநீரகப் பாதிப்பு* 

 *8. உடலில் கெட்ட நீர் தங்குதல்✍✍✍* 


 *👺👺👺புகையிலை👺👺👺* 


📒📒📒புகை பிடித்தல் பழக்கம் இல்லாத குடும்பம் இல்லை என்று கூறுமள விற்கு புகைப் பழக்கம் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. இந்த குடிப் பழக்கத்தின் தீமைகளை மனிதன் அறிந்து இருந்தால் கண்டிப்பாக இதன் பக்கம் செல்லமாட்டான். புகையிலை குடிக்க கூடியவர்கள் இதன் தீமையை அறிந்திருக்கிறார்களா? அந்த தீமைகளை கொஞ்சம் பாருங்கள்:📒📒📒


 *✍✍✍தமிழ் நாட்டின் பிரபலியமான அப்பலோ மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. புகையிலையால் நமக்கு புற்று நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது* 

 *1. பீடி குடித்தால் 98மூ வாய்ப்புள்ளது.* 

 *2. சிஸர் குடித்தால் 89மூ வாய்ப்புள்ளது.* 

 *3. வீல்ஸ் குடித்தால் 68.3மூ வாய்ப்புள்ளது* 

 *4. கோல்ட் ஃபில்ட்ரர் குடித்தால் 42மூ வாய்ப்புள்ளது.* 

 *5. கிங்ஸ் குடித்தால் 23மூ வாய்ப்புள்ளது. என்று கூறியுள்ளது.* 

 *அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.✍✍✍* 


 *(அல்குர்ஆன் 2: 195)* 


 *👺👺👺இருதய நோய் வர காரணங்கள்👺👺👺* 


 *📓📓📓மாரடைப்பு நோயால் 17.5 மில்லியன் மரணம் அடைகிறார்கள்.* 

1) இரத்ததில் அதிகம் கொலஸ்ட்ரால்

2) புகை பிடித்தல்

3) சர்க்கரை நோய்

4) அதிக இரத்த அழுத்தம்

5) வயிற்று பகுதியில் பருமன் (தொப்பை)

6) உடல் உழப்பின்மை

7) மனச் சேர்வு📓📓📓


 *👺👺👺புகையால் ஏற்படும் தீமைகள்👺👺👺* 


 *✍✍✍1) புற்று நோய் வருதை 1600 வருடத்திற்கு முன்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது.* 

 *2) ஒரு சிகெரட்லில் 2 அல்லது 3 நிக்கோட்டின் உள்ளன.* 

 *3) உடலில் 1 மில்லி கிராம் நிக்கோட்டின் செல்கிறது.* 

 *4) அது மூக்கில் மெல்லிய சவ்வில் படிந்து நுரையீரலில் நுழைந்து சிறு ரத்த குழாயில் செல்கிறது. பிறகு ரத்தம் மூளைக்கு செல்கிறது பிறகு உடல் முழுவதும் செல்கிறது.* 

 *5) பக்கத்தில் நின்று பாதிப்பவர் 1 வருடத்திற்கு 3 லட்சம் நபர்.* 

 *இத்தனை தீமைகளுக்கு காரணமான புகை பழக்கத்திற்கு அடிமையாகலாமா❓✍✍✍* 


 *🧘‍♀🧘‍♂சிசுவை கொல்லுவது பாவம்🧘‍♀🧘‍♂* 


📔📔📔வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்த தைக் கூறுகிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, ‘நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது’ என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரண மாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.📔📔📔


 *(அல்குர்ஆன் 6: 151)* 


 *👺👺👺வறுமைக்கு பயந்து🧘‍♂🧘‍♀ குழந்தையை கொல்லக் கூடாது👺👺👺* 


 *✍✍✍வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லா தீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கி றோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.✍✍✍* 


 *(அல்குர்ஆன் 17: 31)* 


 *🧘‍♂🧘‍♀சிசுவை கொன்றால் நஷ்டவாளி🧘‍♂🧘‍♀* 


⛱⛱⛱அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தை களைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்ட தாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்ளூ வழி கெட்டனர்ளூ நேர்வழி பெறவில்லை.⛱⛱⛱


 *(அல்குர்ஆன் 6: 140)* 


 *✍✍✍🧘‍♂🧘‍♀குழந்தைகளை கருவிலேயே கலைக்கும் செயலையும் சிலர் செய்கின்றனர்.* 

 *🧕🧕🧕பெண்கள் கரு கலைத்தால் ஏற்படும் தீமைகள்🧕🧕* 

 *1. முகமலர்ச்சி குறைவு* 

 *2. அதிக கோபம்* 

 *3. தூக்கமின்மை* 

 *4. இதய பலவீனம்* 

 *5. குறைவான இரத்தப் போக்கு* 

 *6. கை, கால் சோர்வு* 

 *7. மாதவிடாய் (ரத்த போக்கு) ஒழுங்கின்மை* 

 *இத்தகைய கருக்கலைப்பு செய்வது நமது கையால் நாமே நரகத்தை தேடிக் கொள்வதாகும்.✍✍✍* 


🌈🌈🌈1 வருடத்திற்கு 1 கோடி 10 லட்சம் குழந்தை கொல்லுகிறார்கள்.
 *நூல்: தமிழ் சுடர்* 
 *மதுரை: உசிலம்பட்டி 1 வருடம் 600 குழந்தை கொல்கிறார்கள்.* 
நூல்: மருத்துவர் 12. 2007, இந்தியாடுடே 2. 1. 2008
 *லிப்ஸ்டிக் (உதடு பாலிஸ்)* 
நமது பெண்களின் சிலர் தன்னை அழகுபடுத்த வேண்டும் என்பதற் காக லிப்ஸ்டிக் என்ற கொடிய தரமற்ற விஷமாக உள்ள உதடு பாலிஸை தடவிக் கொள்கிறார்கள். இதை தடவினால் நமக்கு அழகு கூடும். ஆனால் அழகு கூடுவதைவிட நமக்கு நோயும் கூடும்🌈🌈🌈.


 *✍✍✍லிப்ஸ்டிக் பூசக் கூடாது என்று கூறவில்லை. எந்த லிப்ஸ்டிகில் ஈயம், நிக்கல், தாமிரம், குரோமியம், கோபால்ட் இவை அனைத்தும் இல்லையோ அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நமது உதடுகளை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள் உள் ளன.✍✍✍* 


 *🌐🌐நாம் கையாலும் முறைகள்🌎🌎* 


📕📕📕உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வதற்கு நாவால் வருடக் கூடாது. நாக்கு உலர்ந்திருப்பதாக உணரும்போது தண்ணீர் குடிக்கும்போது அப்படியே உதட்டையும் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் வாசலின் போன்றவற்றைப் பூசிக்கொள்ளுங்கள். உதடுகள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டால் இரவில் வெண்ணை அல்லது நெய் அல்லது எண்ணெய் உதட்டில் பூசிக்கொள் ளுங்கள். உதட்டில் பிளவு ஏற்பட்டால் பன்னீருடன் கிளிசரின் கலந்தோ கற்றாழை சாறோ, ஆன்டிசெப்டிக் கிரீமோ பூசிக்கொள்ளுங்கள். என்று யோசனை கூறுகின்றனர் சரும நிபுணர்கள்.📕📕📕


 *✍✍✍இந்த முறைகளை நாம் செய்தால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுவல்லாமல் உதடு பாலிஸை தடவினால் நமது உடலுக்கு ஆபத்து ஏற்படும்.* 
 *அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைக ளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங் கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்✍✍✍.* 


 *(அல்குர்ஆன்2:195)* 


 *📘📘📘லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள்* 


 *1. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்* 

 *2. உங்கள் சந்ததியின் மூலை வளர்ச்சி பாதிக்கும்* 

 *3. மல சிக்கல், வயிற்று வலி,* 

 *4. கல்லீரலில் புற்று நோய்,* 

 *இதில் ஈயம், நிக்கல், தாமிரம் அளவுக்கு அதிகமாக உள்ளன, சிலவற் றில் நிக்கல், குரோமியம், கோபால்ட், இவைகள் கலந்துள்ளன. ஆனால் கொடியவிஷமான ஆர்சனிக்கும் கலந்துள்ளது📘📘📘.* 


 *✍✍✍(ஷாம்பூ, கண்மை, முகப்பவுடர், பற்பசை, தலைமுடி சாயம், அதிக அளவில் நிக்கல் உலோகம் கலந்து உள்ளன.)* 
 *ஈயம் காரணமாக உயர் ரத்தம் அழுத்தம் ஏற்படும்.* 

 *தூக்கம் (ஒய்வு எடுப்போம்)* 

 *நமது மனைவியையும், பெற்றோரையும், குழந்தையும் சந்தோஷமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இரவும் பகலுமாய் நாம் உழைக்கிறோம். பகலில் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். இன்னும் சிலர் இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்கிறார்கள். ஆனால் பகலில் தூங்குவதில்லை. நாம் தூங்காததின் காரணத்தினால் நமது உடல் மிகவும் பாதிக்கப்படுகிறது. நாம் வேலைக்கு எப்படி முக்கியத்துவம் தருகிறோமோ அதேபோன்று நமது உடலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.✍✍✍* 


📙📙📙முக்கியத்துவம் தந்தால்தான் மறுபடியும் நம்மால் உழைக்க முடியும். எப்படி முக்கியத்துவம் தருவது என்றால் நாம் காலையில் வேலை செய் தால் இரவில் தூங்க வேண்டும். நாம் தூங்கவில்லை என்றால் நமது உட லுக்கு கடுமையானக பாதிப்பு இருக்கிறது. நமது உடலை ஆரோக்கியமாக வும் சீராகவும் வைத்திருக்க வேண்டும் என்றால் அனைவரும் தூங்க வேண்டும். பெண்களே தனது கணவருக்கு நீங்கள் கஷ்டத்தை தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.📙📙📙


 *✍✍✍அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்✍✍✍.* 


 *(அல்குர்ஆன் 25: 47)* 


📒📒📒உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.,இரவை ஆடை யாக்கினோம்📒📒📒.


 *(அல்குர்ஆன் 78: 10)* 


 *✍✍✍தூங்கினால் ஏற்படும் நன்மைகள்* 

 *1. இரத்தம் ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.* 

 *2. இதய துடிப்பு சற்று குறைகிறது.* 

 *3. ஜீரண உறுப்புகள் சரியாக இயங்குகின்றன.* 

 *4. ஈரலும், சிறுநீரகமும் தொடர்ந்து செயல்படுகிறது.* 

 *5. உறக்கதில் உடல் வெப்பம் ஒரு சென்டி கிரேடு குறைகிறது,* 

 *6. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும்.* 

 *மூளை பகுதியில் உறக்க மையம் ஒன்று உள்ளது. இந்த உறக்க மையத்தை இரத்தத்தில் உள்ள கால்சியம் கட்டுப்படுத்துகிறது. உறக்க மையத்தில் வேண்டிய அளவு கால்சியம் சேர்ந்ததுடன் உறக்கம் வரும். இரத்தத்தில் கால்சியம் செல்லவில்லையென்றால் உறக்கம் வராது.✍✍✍* 


📗📗📗நாம் தூங்காமல் இருந்தால் இவை அனைத்தையும் இழந்துவிடுவோம். இவைகள் இல்லையென்றால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்காது. நாம் சீராக வாழ மாட்டோம்.📗📗📗


 *🕋🔴⚫நபிகளார் சந்தித்த உயிரிழப்புகள்🕋🔵⚫* 

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 50*


No comments:

Post a Comment