பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, October 5, 2019

தஜ்ஜால் பற்றிய இஸ்லாம் கூறும் விவரங்கள

*🔰🔰மீள் பதிவு🔰🔰*

*👺👺👺தஜ்ஜால் பற்றிய இஸ்லாம் கூறும் விவரங்கள்👺👺👺*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇*

1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்' என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, 'அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், 'தஜ்ஜால்' என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்'' என்று கூறினார்கள்.

*புஹாரி : 3439 இப்னு உமர் (ரலி).*

1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*புஹாரி : 7131 அனஸ் (ரலி).*

1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), 'தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை 'இது நெருப்பு' என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை 'இது குளிர்ந்த நீர்' என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

*புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).*

1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).*

*தஜ்ஜால் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் (2)*

தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்துக்கு முன்பி ருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். இஸ்லாத்தை எதிர்ப்பான் முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளி யேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான்.

அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான். இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,*

*நூல்: முஸ்லிம் 5237)*

''தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே 'காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு,*

*நூல்: முஸ்லிம் 5223)*

அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது. அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான்.

'தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

*(நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408)*

  *தஜ்ஜாலின் அற்புதங்கள்*

இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழிகெடுக்க இயலும்? என்ற ஐயம் தோன்றலாம். தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான்.

ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்வோரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கும் நாம் காண்கிறோம்.

அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை)முளைப்பிக்கும் " என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு,*

*நூல்: முஸ்லிம் 5228)*

பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள் " என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு,* *நூல்: முஸ்லிம் 5228)*

பாழடைந்த இடத்துக்குச் சென்று 'உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து" என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களைப் போன்று அவனைப் பின்தொடரும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு,* *நூல்: முஸ்லிம் 5228)*

'திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு,* *முஸ்லிம் 5228)*

ஒரு நாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர்நிலத்திற்கு வருவான். ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார்.

'அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் கூறுவார். 'இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?" என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான்.

உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் 'முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்" என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

*(நூல்: புகாரி 7132, 1882)*

இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை. இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும்; தொடர்ந்து செய்ய இயலாது. ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.

*(நூல்: அஹ்மத் 22573)*

தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். மக்களிடம்' நானே உங்கள் இறைவன் " என்பான். ' யாரேனும் நீ தான் என் இறைவன் " என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். ' அல்லாஹ் தான் என் இறைவன் " என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார் " என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு,* *நூல்: அஹ்மத் 19292)*

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். ' இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு,* *நூல்: அஹ்மத் 14426)*

தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும்.

உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7130)*

  *தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை?*

இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.

'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான் " என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.

*(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5228)*

  *தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள் :*

இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடையமுடியாது எனவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

மதீனா நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7125)*

'தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம் ' பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2450)*

'இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத் ' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இப்பூமியில் நேர்மையான தலைவராக , சிறந்த நீதிமானாக வாழ்வார்கள் " என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அஹ்மத் 233270*

மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது. ' அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனா வின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது " என்பது நபிமொழி.

*(நூல்: அஹ்மத் 22571)*

தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழி தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை செய்தார்கள்.

அதில் ஒன்று ''தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்" என்பதாகும்.

*(நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377)*

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால், ஜங்காலமும் தொழுது இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாயஜாலத்தில் மயங்க மாட்டார்கள்; ஈமானை இழக்க மாட்டார்கள். தஜ்ஜாலின்வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது.

தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானை இழக்காமலிருக்க ''கஹ்ஃப்'' அத்தியாத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.

'உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்ஃபு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

*(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5228)*

தஜ்ஜால் வெளிப்படும் இடம் தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும், இடப்புறமும் விரைந்து செல்வான். 'அல்லாஹ்வின் அடியார்களே! உறுதியாக நில்லுங்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

*(நூல்: முஸ்லிம் 5228)*

மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

*(நூல்: திர்மிதீ 2163)*

தஜ்ஜால் எந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுவான் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

தஜ்ஜால் புறப்பட்டு வருவான். தஜ்ஜாலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள். தஜ்ஜால் குழப்பவாதி, இனி புதிதாக பிறப்பவன் அல்ல. இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கே என்ற கேள்விக்கு ஓரளவிற்கு ஹதீஸ்களில் பதில்கள் கிடைக்கவே செய்கின்றன.
    தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான்.

*அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்*

    வழிகெடுக்கக்கூடிய தஜ்ஜால் என்னும் ஒற்றைக்கண்ணன், மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் கீழ்த்திஸையில் தோன்றுவான்.

*அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அஹ்மத்*

    நிராகரிப்பின் சிகரம் கீழ்த்திசையில் இருக்கிறது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஅத்தா*

    நிச்சயமாக இப்லீஸுடைய அரியாசனம் கடலில் இருக்கிறது. எனவே அவன்தான் படையினரை (இப்புவியில் குழப்பன் உண்டு பண்ண) அனுப்புகிறான்.

*அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல்: முஸ்லிம்*

    அன்றைய அரபு மக்கள் தங்கள் வியாபாரத் தொடர்பாக தரை மார்க்கமாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, மாலத்தீவு, இலங்கை, இந்தியா வரையிலும் சென்று வந்தனர். முன்பு கிருஸ்தவராக இருந்த தமீமுத்தாரி(ரழி) அவர்கள் இவ்வாறு 30 நபர்களுடன் புயலில் சிக்கி ஒரு தீபகற்பத்தில் கப்பலோடு ஒதுங்கினார். அப்பொழுது ‘ஜஸ்ஸாஸா’ என்ற ஒரு பிராணி அவர்களிடம் ‘நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்’ என்று கூறியது. அங்கு அவர்கள் ஒரு பருமனான மனிதனைக் கண்டார்கள். அவனைப்போன்று ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும், முட்டுக் கால்களுக்கும் இரும்பினால் தலை சேர்த்து கட்டப்பட்டிருந்தான். பின்பு அவன் சில கேள்விகள் கேட்டான். இறுதியில் “நான்தான் தஜ்ஜாலாவேன் (இங்கிருந்து) வெளியேற விரைவில் அனுமதி வழங்கப்படலாம்” என்று கூறியதாக தமீமுத்தாரி(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினர். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள்
    இவ்விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.

*(ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: ஃபாத்திமா பிந்த் கைஸ்(ரழி) நூல்: முஸ்லிம்*

    தஜ்ஜால் கடலில் உள்ள தீவுக்குள் தனி மடாலத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
    ஏமன் கடல் பகுதி. ஷாம் (சிரியா) கடல் பகுதி எல்லாம் மக்களால் அறியப்பட்ட பிரதேசங்கள். மேலும் இங்கு தீவுக்கூட்டங்கள் அதிகம் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட கிழக்குத் திசையின் கடல் பகுதிகளில் ஏராளமான தீவுகளும், தீபகற்பங்களும் உள்ளன.

இந்தோனேஷியாவில் உள்ள மொத்த தீவுகள் *13667.* இதில் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த காடுகள் உள்ள தீவுகள் மட்டும் *6000* க்கும் மேல். அதைத் தொடர்ந்துள்ள நமது அந்தமான் தீவுக்கூட்டங்கள் மனிதர்கள் எவரும் வசிக்காத தீவுகள் *265.* மாலத்தீவில் மொத்தம் *2000* , மனித நடமாட்டம் உள்ள தீவுகள் *199* மட்டுமே. ஆக ஏராளமான தீவுகள் மனிதப் பார்வையில் படாமல் உள்ளன.

    தஜ்ஜால் வருகையின் முக்கிய நோக்கம், தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் கொள்ளச் செய்து நரகில் தள்ளுவது. தஜ்ஜாலின் மூலம் இறைவன் மூஃமின்களுக்கு ஏற்படுத்தும் சோதனை கடுமையாக இருக்கும். ஃபித்னாக்களுக்கும் சுனாமி பூகம்பம் போன்ற சோதனைகளும் இந்தோனேஷியா தீவுகளை சூழ்ந்துள்ளது. அல்லஹ்வின் சோதனைக்கு காரணம் பெயரளவுக்கு முஸ்லிம்களாகவும் செயல்களில் மாற்று மதத்தினராக மாறிவிட்டதுதான். நாம் நம்முடைய செயல்களை அல்லாஹ்விற்கு பொருத்தமான முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகெங்கும் தனது அத்தாட்சிகளை வெளிப்படுத்துகிறான்.

அறிவுள்ளவர் தெரிந்து கொள்ளவும் திருந்திக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.
    நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்.

*அல்குர்ஆன் 41:53*
   
அல்குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான ஹதீஸையும் ஒப்பிட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளார். இதன் மிகத்துல்லியமான உண்மை நிலையை

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment