பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 17, 2019

நல்லவர்கள் கஷ்டப்படுவதும்

நல்லவர்கள் கஷ்டப்படுவதும் தீயவர்கள் சுகமாக வாழ்வதும்

உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் . உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்று சொன்னால் இந்த உலகத்திலேயே நாம் பார்க்கலாம் நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள். தீயவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கிறோம்.

நேர்மையாக, சரியான அடிப்பயில் இருக்கக் கூடியவன் ஏழ்மையில் வாடுவான். லஞ்சம் வாங்கி மோசடி செய்து ஹராமான அடிப்படையில் வியாபாரம் செய்பவன் செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். நேர்மையாக நடப்பவர்களும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் குறைவாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இது எப்படி நியாயம் என்ற ஒரு கேள்வி நமக்குள் எழுவதைப் பார்க்கிறோம். இதற்கு இஸ்லாம் பலவிதமான பதிலைத் தருகிறது.

இந்த உலகத்தில் எப்படிப்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு 100 சதவீதம் நிறையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவருக்குச் செல்வம் வேண்டுமானால் நிறையாக இருக்கலாம். மற்ற குறை இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, கோடீஸ்வரனாக இருப்பான் ஆனால் கிட்னி ஃபெய்லியர் என்று கூறி விடுவார்கள். தனது சிறுநீரைக் கூட வெளியேற்ற முடியாமல் இருப்பார்.

இப்படி அல்லாஹ் குறை நிறையை இந்த உலகில் சரி சமமாகத் தான் போட்டிருக்கிறான். நாம் என்ன நினைக்கிறோம் என்றால் பணம் மட்டும் தான் செல்வம் என்று நினைக்கிறோம். ஆனால் பணம் இருந்து நோய் இருப்பவனை விட பணம் இல்லாமல் நோயின்றி இருப்பவன் சிறந்தவன் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மனிதனை குறை நிறையுடன் தான் படைத்திருக்கிறான். இப்படி ஒருவன் நினைப்பானேயானால் அவன் கவலைப்படமாட்டான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்களே!

அது போல அனைத்தும் சமமாகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு, பெரிய பணக்காரராக இருப்பார். ஆனால் சுகர் என்று சொல்லி விடுவார்கள். இனிப்பு உண்ணக் கூடாது என்று கூறியிருப்பார்கள். அதேபோல சில நோய்களுக்கு மாமிசம் தின்னக் கூடாது என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் அவனுடைய வீட்டில் வேலை செய்யக் கூடியவன் வாய் ருசியாக சாப்பிடுவான். அவனைப் பார்த்து இவன் ஏங்குவான். அவன் செல்வம் வைத்திருந்தாலும் அவனால் விரும்பியதை உண்ண முடியாமல் அல்லாஹ் குறையைக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு அல்லாஹ்வை குறை சொல்லக் கூடிய அறிவிலிகளைப் பார்க்கிறோம். ஆனால் இப்படி ஏற்றத்தாழ்வு இருந்தால் தான் நல்லது. அப்போது தான் மனிதன் அல்லாஹ்விற்குப் பணிந்து நடப்பான். 100 சதவீதம் நிறையைக் கொடுத்தால் மனிதன் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டான். பின்னர் துஆ என்ற ஒன்று அவசியமாகாது. குறைகள் இருந்தால் தான் மனிதன் தனது தேவையை அல்லாஹ்விடம் கேட்பான். அப்போது தான் அவன் இறையச்சத்துடன் நடப்பான்.

இந்த ஏற்றத் தாழ்வைக் காட்டி இறை மறுப்புக் கொள்கையான நாத்திகத்தைப் பேசுகிறர்கள். உண்மையிலேயே இப்படிப் பட்ட ஏற்றத்தாழ்வை அல்லாஹ் இந்த உலகத்தில் ஆக்கியதன் மூலம் தான் அல்லாஹ் தான் ஹகீம் (ஞானமுள்ளவன்) என்பதை நிரூபிக்கின்றான். உதாரணத்திற்கு, அனைவருக்குமே கண் பார்வை நன்றாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எவனாவது கண்ணைப் பற்றிச் சிந்திப்பானா? என்று பார்த்தால் சிந்திக்க மாட்டான். அதைப் பற்றியான அறிவு வளர்ந்திருக்காது. அதை வைத்துப் பிழைப்பு நடத்தக் கூடியவர்களின் நிலை என்னவாகும்?

அவன் பாதிக்கப்படுவான். அதேபோல யாரும் நொண்டியாக இல்லாமல் நன்றாக நடக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எவனும் காலைப் பற்றி சிந்தித்திருக்க மாட்டான். அப்படி கால் நொண்டியாக இருப்பதால் தான் அதைப் பற்றி, எலும்பை எப்படிச் சேர்ப்பது? என்று கண்டுபிடிக்கிறான். அதன் மூலம் ஒரு கூட்டம் பிழைப்பு நடத்துகிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் அனைவருக்கும் ஒரு கோடி ரூபாய் தந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். நிலைமை என்னவாகும்? இந்த உலகம் ஒரு வாரம் கூட இயங்காது அழிந்து விடும். எவனும் வேலைக்குப் போகமாட்டான்.

இப்போதே அரசின் இலவசத் திட்டங்களால் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. எல்லோரிடமும் காசு இருந்தால் யார் வேலை செய்வார்கள்?

இதை வைத்து அல்லாஹ்வை குறை கூறப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் மூலமாகத் தான் அல்லாஹ், ஞானமிக்கவன் எனபதை நிரூபிக்கிறான். எனவே இப்படி இருந்தால் தான் ஒருவர் மற்றவரைச் சார்ந்து இருப்பார். உதாரணத்திற்கு வியாபாரியைச் சார்ந்து மக்கள் மக்களை சார்ந்து வியாபாரிகள். நோயாளியைச் சார்ந்து மருத்துவர் மருத்துவரைச் சார்ந்து நோயாளி. இப்படித் தான் உலகம் இயங்க முடியும் அதே போல் நாம் அனைவரும் செல்வத்தை மட்டும் பாக்கியம் என்று எண்ணுகிறோம். அது மட்டும் பாக்கியமில்லை. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் சீராக இயங்குவதே ஒரு பெரிய பாக்கியமாகும்.

அல்லாஹ்வே இதைக் கூறிக் காட்டுகிறான்: மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தை யும் வழங்கி சோதிக்கும் போது ‘என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்’ என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது ‘என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்’ எனக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 89:15, 16

இதை இன்றைக்கு மனிதன் நிதர்சனமாகக் கூறுவதைப் பார்க்கிறோம். அதேபோல் இன்றைக்கு நேர்மையாக நடப்பவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவன் எனறெல்லாம் கூறி கேலி செய்வதைப் பார்கிறோம். ஆனால் அந்த மறுமையில் நாம் அவர்களைக் கேலி செய்யலாம். அது தான் நிலையான இன்பம் என்பதைப் புரிந்து கொண்டால் நாம் கவலைப்பட மாட்டோம். செல்வத்தின் மீதுள்ள பேராசை நம்மை விட்டு அகன்றுவிடும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டோம்.

என்ன தான் கூறினாலும் பணக்காரர்கள் சொகுசாகத் தான் இருக்கிறார்கள். கார், பங்களா என்று இன்பத்தை அனுபவிக்கிறார்கள். மினரல் தண்ணீரைக் குடிக்கிறார்கள். அந்த மாதிரியான இன்பத்தை நாம் அனுபவிக்கவில்லை என்பது ஒரு குறையாகத் தான் இருக்கும். என்ன தான் நோய் நொடி இல்லாமல் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஏழையாக வாழக்கூடிய அனைவருக்கும் வரும். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)

நூல்: புகாரி 5645 இப்படிப்பட்ட ஒரு எண்ணம் யாருக்காவது வந்தால் அவன் செல்வம் அதிகமாக இல்லை என்று கவலைப்படமாட்டான்.

இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்கள், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாகத் தருகின்றான் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அதே போல் நாம் செய்த அமல்கள் குறைவாக இருந்தால் அதைச் சரி செய்வதற்கு அல்லாஹ் துன்பங்களைத் தருகிறான். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு செய்தியைக் கூறுகிறார்கள்: நீங்கள் அனுபவிக்கும் வருத்தம், துன்பம், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாக்குகிறான் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்மைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்கருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)

நூல்: புகாரி 5642

அல்லாஹ் மறுமையிலே கொடுக்கவிருக்கும் தண்டனையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவெல்லாம் ஒரு செல்லமாகத் தட்டுவதைப் போன்று தான் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கடம் வந்து, ‘நான் வப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள்,

‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்: புகாரி 5652

அப்படியானால் நமக்கு இந்த உலகத்தில் ஏற்படும் கஷ்டம், சோதனையைப் பொறுத்துக் கொண்டால் அதற்கு அல்லாஹ் கூலியை வழங்குவான் எனற நம்பிக்கையை நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்குச் சான்றாக நபி (ஸல்) அவர்கள் மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ர)

நூல்: புகாரி 5653

இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண் என்பது 50 சதவீதம் அருட்கொடையை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் இந்தக் கண். எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தைத் தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக்கூடாது.

அல்லாஹ்வைத் திட்டவும் கூடாது. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி) நூல்: முஸ்லிம் 5726

No comments:

Post a Comment