பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 17, 2019

கட்டாயக் கல்யாணம்

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻....தொடர் ➖ 1⃣1⃣5⃣*

*☄ திருமணத்தின்*
                 *ஒழுங்குகள் [ 06 ] ☄*

   *☄கட்டாயக் கல்யாணம்☄*

*🏮🍂முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது* மறுமையில் கடுமையான குற்றமாகும்.

*وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ*

_*பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.*_

*📖 (திருக்குர்ஆன் 2:232) 📖*

*🏮🍂அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.* பெண்களின் இந்த உரிமையைப் பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.

*🏮🍂பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாகக் கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.*

ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻋﻮﻥ، ﺣﺪﺛﻨﺎ ﺣﻤﺎﺩ، ﻋﻦ ﺃﺑﻲ ﺣﺎﺯﻡ، *ﻋﻦ ﺳﻬﻞ ﺑﻦ ﺳﻌﺪ، ﻗﺎﻝ: ﺃﺗﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻣﺮﺃﺓ، ﻓﻘﺎﻟﺖ: ﺇﻧﻬﺎ ﻗﺪ ﻭﻫﺒﺖ ﻧﻔﺴﻬﺎ ﻟﻠﻪ ﻭﻟﺮﺳﻮﻟﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﺎﻝ: «ﻣﺎ ﻟﻲ ﻓﻲ اﻟﻨﺴﺎء ﻣﻦ ﺣﺎﺟﺔ»، ﻓﻘﺎﻝ ﺭﺟﻞ: ﺯﻭﺟﻨﻴﻬﺎ، ﻗﺎﻝ: «ﺃﻋﻄﻬﺎ ﺛﻮﺑﺎ»، ﻗﺎﻝ: ﻻ ﺃﺟﺪ، ﻗﺎﻝ: «ﺃﻋﻄﻬﺎ ﻭﻟﻮ ﺧﺎﺗﻤﺎ ﻣﻦ ﺣﺪﻳﺪ»، ﻓﺎﻋﺘﻞ ﻟﻪ، ﻓﻘﺎﻝ: «ﻣﺎ ﻣﻌﻚ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ؟» ﻗﺎﻝ: ﻛﺬا ﻭﻛﺬا، ﻗﺎﻝ: «ﻓﻘﺪ ﺯﻭﺟﺘﻜﻬﺎ ﺑﻤﺎ ﻣﻌﻚ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ»*

_*🍃நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்களா❓ என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.*_

*📚 நூல்: புகாரி 2311, 5029, 5120.*

*🏮🍂வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா❓ என்று அவரை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிக்கவில்லை. விபச்சாரம் செய்வதற்குத் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர* திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.

*أخبرنا محمد بن النضر بن مساور قال أنبأنا جعفر بن سليمان عن ثابت عن أنس قال خطب أبو طلحة أم سليم فقالت والله ما مثلك يا أبا طلحة يرد ولكنك رجل كافر وأنا امرأة مسلمة ولا يحل لي أن أتزوجك فإن تسلم فذاك مهري وما أسألك غيره فأسلم فكان ذلك مهرها قال ثابت فما سمعت بامرأة قط كانت أكرم مهرا من أم سليم الإسلام فدخل بها فولدت له*

_*🍃உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.*_

*📚 நூல்: நஸயீ 3288 📚*

*🏮🍂பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள்.*

*🏮🍂ஆனாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும்.* பொறுப்பாளர்கள் மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment