பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, October 29, 2019

பெண்களுக்கான - 9

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


            *பாகம் 9* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 *இத்தா*

சில முஸ்லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர்.

 நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம் என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர். இது குற்றமாகும். இத்தா பற்றிய சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே அது பற்றிய விபரங்களை காண்போம். 

 *கணவனை இழந்த பெண்களும்,*

 கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். மேலும் திருமண ஆசையைத் தூண்டக்கூடிய அலங்காரங்களை செய்யக்கூடாது. இந்த கால கட்டமே இத்தா எனப்படும். 

கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், அவர்கள் மறுமணம் செய்யக்கூடாது. 
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

 *அல்குர்ஆன் (2 : 234)* 

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை.

 *அல்குர்ஆன் (2 : 228)* 

கர்ப்பிணிகளின் காலக் கெடு 
அவர்கள் பிரசவிப்பதாகும்.

 *அல்குர்ஆன் (65 : 4)* 

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று *2:234* வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

 அந்தக் காலக்கெடுவிலிலி-ருந்து கர்ப்பினிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்பதை மேலுள்ள வசனத்திலிலி-ருந்து அறியலாம்.

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் . கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.
இத்தாவின் போது 
அலங்கரித்தல் கூடாது
இத்தா இருக்கும் பெண்கள் நறுமணம் பூசுதல் கண்களுக்கு சுர்மா இடுதல் கலர் ஆடைகளை அணியுதல் மருதாணி பூசுதல் போன்ற அலங்காரங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்து உடலையும் கூந்தலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. கூடுதலான அலங்காரங்களையும் ஒப்பனைப் பொருட்களையும் அதாவது மேக்கப் காலைபொருட்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்கüல்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது.

 ஆனால் நெய்வதற்கு முன் நூ-ல் சாயமிடப்பட்ட  (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணவனை இழந்தப் பெண் குங்குமப்பூச் சாயம் பூசப்பட்ட ஆடை மற்றும் சிவப்பு நிற ஆடையை அணியக்கூடாது. இன்னும் அவள் மருதாணி பூசக்கூடாது. அஞ்சனம் ( சுர்மா) இடுவதும் கூடாது. 

 *அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)* 
 *நூல் : நஸயீ (3479)* 

 *இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?* 

இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் அவர்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள்.

 இஸ்லாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மற்றப் பெண்களைப் போல் இத்தாவில் இருக்கும் பெண்கள் தாராளமாக வெளியில் சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் வீணாக ஊர் சுத்துவது கூடாது. 
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.

 *அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (2972* )

 *ஜீவனாம்சம்* 

விவாகரத்துக்குப் பின் மவைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை.

 பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதைவிடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.

பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்

இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.

 *திருக்குர்ஆன் 2:241*

 வசனம் இதைத் தான் கூறுகிறது. 
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

 *அல்குர்ஆன் (2 : 241)* 

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிததாகும்.
ஆயினும் முஸ்-லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே *2:241* வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.

இதை " *இத்தா* காலத்தில்' என்று எளிதாகச் சொல்-லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் "அழகிய முறையில்' "நியாயமான முறையில்' என்று கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாக ரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

 *அல்குர்ஆன் (2 : 236)* 

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.
விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது.

 விவாகரத்துக்காக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.
 *திருக்குர்ஆன் 65:6* வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. 

அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி இவ்வசனத்தில்

 *(திருக்குர்ஆன் 2:241)* 

கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது. 
குழந்தை யாருடைய பொறுப்பில் வளரும்?
கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.

 *1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால்*

 தாய்தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பதுதான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். *இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.* 
ஒரு பெண்மணி '' அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறுதான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள்தான் அவனுக்கு  குடிபானமாகும். என்னுடைய மடிதான் அவனுக்கு தங்குமிடமாகும். இவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டு என்னிடமிருந்து இவனை பிரித்துக் கொண்டு செல்ல நாடுகிறார்.'' என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினார். நபியவர்கள் '' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீதான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமைபடைத்தவள்'' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அமர் (ரலி)* 
 *நூல் : ஹாகிம் பாகம் : 2 பக்கம் 225* 

 *2* *. குழந்தை பாலருந்தும் பருவத்தைக் கடந்து விட்டால்* 

குழந்தைக்கு, தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று தீர்மானிக்கின்ற விருப்பத்தை இஸ்லாம் வழங்குகிறது. இதனை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தை தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை ) இருந்தது. அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னுடைய மகள்'' என்றாள் . ராபிஃவு (ரலி) அவர்கள் ''என்னுடைய மகள்'' என்றார். நபி(ஸல்) அவரை ''ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு ''நீங்கள் இருவரும் அதை அழையுங்கள் என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது.  நபியவர்கள் அல்லாஹ்வே இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார் 

 *அறிவிப்பவர் : ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)*  
 *நூல் : அபூதாவூத் (1916)* 

இந்த ஹதீஸிலிருந்து குழந்தை பால் குடிப்பருவத்தை கடந்து விட்டதென்றால் அதனுடைய விருப்பப்படி தாயையோ அல்லது தந்தையையோ தேர்ந்தெடுக்கும்படி செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள்  

 *அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி)* 
 *நூல் : திர்மிதி (1277)* 

இந்த ஹதீஸில் வந்துள்ள ''சிறுவன்'' என்ற வார்த்தைக்கு அரபி மூலத்தில் ''குலாம்'' என்ற சொல் வந்துள்ளது. இது குழந்தை பருவம் முதல், பருவ வயதை  அடைகின்ற வரை உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதிலிருந்து பால்குடிப் பருவம்ன கழிந்ததிலிருந்து பருவ வயதை அடையும் நிலையிலுள்ள குழந்தைகளின் விருப்பத்தைப் பொருத்தே அது தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். குழந்தை யாரை விரும்புகிறதோ அவர்களிடம்தான் அது ஒப்படைக்கப்படும்.

ஆனால் மேற்கூறப்பட்ட இரண்டு நிலைகளும் விவாகரத்துச் செய்யபட்ட குழந்தையின் தாய் மறுமணம் செய்யாமலிருக்கும் வரைதான். அவள் மறுமணம் செய்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தைக்கு வந்துவிடும். இதனை 
'' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீதான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமைபடைத்தவள்'' என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம். 
தாய் மறுமணம் முடித்துவிட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தையிடம் வந்துவிடுகிறது. என்றாலும் தாய்க்கும் அக்குழந்தைகளின் விஷயத்தில் உரிமையிருப்பதால் தாய் குழந்தைகளைச் சந்திக்கவிடாமல் தடுப்பதோ, தாயைப் பற்றி குழந்தைகளிடத்தில் வெறுப்பு உண்டாக்குவதோ கூடாது. தாய் தான் பெற்றெடுத்த குழந்தைகளைச் சந்திப்பதற்கு முழு உரிமையிருக்கிறது.
மேலும் குழந்ததைகள் தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் அதற்குச் செலவு செய்கின்ற பொறுப்பு தந்தையைச் சார்ந்ததாகும். பின் வரும் திருமறை வசனத்திலிருந்த அதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.

 *அல் குர்ஆன் (2: 233)* 

 *பெண்களுக்கு சொத்துரிமை உண்டா?* 

இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் எதையும் கொடுக்காமல் ஆண்களே அனைத்தையும் எடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இப்படியொரு அற்புத சட்டத்தை குர்ஆன் வழக்கில் கொண்டுவந்தது. 
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

 *அல்குர்ஆன் (4 : 7)* 

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

 *அல்குர்ஆன் (4 : 11)* 

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் பாரபட்சம் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலை தான்.

2, பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆண் மக்களால் தான் பராமரிக்கப்படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத் தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும் போது அவர்களைக் கவனிப்பதும் மகன்கள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயமே!

3, ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் தனது சகோதரனின் தயவில் வாழும் நிலை ஏற்படும். "எனக்குக் கிடைத்த அளவு சொத்து உனக்கும் தானே கிடைத்தது; எனவே உன்னை நான் ஏன் பராமரிக்க வேண்டும்'' என்று சகோதரன் நினைக்காமல் அன்புடன் அவளை அரவணைக்க இந்தப் பாரபட்சம் அவசியமாகிறது.

4, தந்தையின் சொத்துக்களைப் பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர் சம்பாதித்ததை விட அவரது மகன்களின் உழைப்பால் அதிகம் பெருகியிருக்கும். மகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்க மாட்டாள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

5, இவை தவிர பெண்களுக்காக தந்தை நகை மற்றும் ஆபரணங்களைச் செய்து போடுகிறார். இது அலங்காரப் பொருள் மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் உள்ளது. இது போன்ற பொருட்களை ஆண் மக்களுக்காக தந்தை வழங்குவதில்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

6, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால், பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆண் மக்களுக்குத் தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போகும். 
இதனால் முதியோர் இல்லம் தான் பெருகும். பெற்றோர் நாதியற்று விடப்படுவார்கள். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இஸ்லாம் இதில் பாரபட்சம் காட்டியுள்ளது.

 *பெண்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா?* 

    எந்தத் தேவையும் இல்லாமல் பெண்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது. 
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
 
 *அல்குர்ஆன் (33 : 33)* 

 அறியாமைக்காலத்தில் வெளியில் சுற்றித்திரிந்ததைப் போல் சுற்றித்திரியக்கூடாது என்று நான் உன்னிடத்தில் உறுதிப்பிரமாணம் வாங்கிக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ருகைகா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.  

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) நூல் : அஹ்மத் (6554)*
 
    பெண் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே சென்றால் (வழிகெடுப்பதற்காக) ஷைத்தான் அவளை நோக்கிவந்துவிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)* 
 *நூல் : திர்மிதி (1093)* 

மார்க்க விளக்கப் பொதுகூட்டங்கள் திருமணங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்கு உதவும் போராட்டங்கள் போன்ற நல்ல காரியங்களுக்காகவும் தேவையான விஷயங்களுக்காகவும் செல்வதில் தவறில்லை. அவ்வாறு செல்லும் போது பர்தாவை முழுமையாக கடைபிடித்துச் செல்ல வேண்டும். 

    நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் போர்க்களத்திற்கு வந்து காயம்பட்ட போர்வீரர்களுக்கு மருத்துவம் செய்யும் பணியை செய்திருக்கிறார்கள். பெருநாள் திடலுக்கு வந்து நன்மையான காரியத்தில் கலந்துகொண்டார்கள்.
(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்கலில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்;

 நோயாüகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்கüடம் "எங்கüல் ஒரு. பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்ல செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகüல் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்கüலும் இறைநம்பிக்கையாளர்கüன் பிரசாரங்கüலும் கலந்து கொள்ளட்டும்!'' என்று சொன்னார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)* 
 *நூல்: புகாரி (324)*  

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ர-) அவர்கள் வெüயே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாம-ருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ர-) அவர்கள் பார்த்துவிட்டு "சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத் தெரியாம-ல்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெüயே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!'' என்று சொன்னார்கள். சவ்தா (ர-) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். சவ்தா (ர-) அவர்கள் வீட்டினுள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெüயே சென்றேன். உமர் (ர-) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்'' என்று கூறினார்கள். 

அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு "வஹீ' (வேதவெüப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் உங்கள் தேவைக்காக வெüயே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று சொன்னார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (4795)* 

 *பெண்கள் தனியாக பயணம் செய்யலாமா?*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 10*

No comments:

Post a Comment