பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, October 23, 2019

பெண்களுக்கான - 4

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


            *பாகம் 4* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 
 *பெண்கள் கிரகணத் தொழுகையில் கலந்துகொள்ளலாமா?* 

சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஏற்படும் போது கிரகணம் அகலும் வரை நபி (ஸல்) அவர்கள் பிரத்யேகமாக தொழுதுள்ளார்கள்.

 சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. இந்த மூன்று கோள்களும் ஒன்றையொன்று இழுத்து மோதிவிட்டால் உலகம் அழியும் நிலை ஏற்படும். 

இந்த இக்கட்டான நிலையில் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதும் தனக்கு பாதுகாப்பை கொடுக்குமாறு கேட்பதும் அவசியமாகிறது. இத்தொழுகையில் பெண்களும் கலந்துகொண்டுள்ளார்கள். எனவே கூட்டாகத் தொழப்படும் இத்தொழுகையில் பெண்கள் கலந்துகொள்வது நபிவழியாகும். 

(ஒரு முறை) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலிலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலிலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலிலி) அவர்களிடம், "மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?'' என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலிலி) அவர்கள் வானை நோக்கி (த் தமது தலையால்) சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்த) "சுப்ஹானல்லாஹ்' (-அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது "(இது மக்களைப் பாதிக்கும்) எதேனும் அடையாளமா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலிலி) அவர்கள் "ஆம்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன். 

 *அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)* 
 *நூல் : புகாரி (86)* 

 *ஹிஜாப் அணிதல்* 

    பெண்கள் முகத்தையும் மணிகட்டு வரை இரு கைகளையும் பாதத்தையும் வெளிப்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. *இதைத் தவிர மற்ற அனைத்து உறுப்புக்களையும் அண்ணிய ஆடவரிடமிருந்து பெண்கள் அவசியம் மறைத்துக்கொள்ள வேண்டும்.* *அவ்வாறு மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடை எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த வடிவத்தில் வேண்டுமானாலும்* தைக்கப்பட்டிருக்கலாம். இதற்கு அரபியில் ஹிஜாப் என்று சொல்லப்படுகிறது. நமது வழக்கில் பர்தா என்றும் புர்கா என்று கூறப்படுகிறது. 

    தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

 *அல்குர்ஆன் (24 : 31)* 

    நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் *(ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்,* தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

 *அல்குர்ஆன: (33 : 59) திருக்குர்ஆன் 24:31* வது வசனத்தில் "பெண்கள் அலங்காரத்தை வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது'' எனக் கூறப்படுகிறது.
இங்கே " *ஜீனத்'* என்ற மூலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. *ஜீனத்* என்றால் அலங்காரம் என்பது பொருள்.அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.
உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, "மேக்கப்' பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை *ஜீனத்* என்ற சொல்லி-ல் அடங்கும்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக்கூடாது.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள " *ஜீனத்* ' என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். *அழகு வேறு, அலங்காரம் வேறு* என்பதை அவர்கள் உணர்வதில்லை. 

    சீலையை பெண்கள் உடுத்தும் வழக்கம் நம் நாட்டில் உள்ளதால் இஸ்லாமிய பெண்களும் சீலையை உடுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆடை பெண்களின் இடுப்புப்பகுதியையும் முதுகுப்பகுதியையும் மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகளையும் வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணியப்படுகிறது. 
பின்வரும் செய்தியை கவனத்தில் வைத்துக்கொண்டு *ஹிஜாப்* விஷயத்தில் பேணுதலாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும். 
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : *நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள்.*  நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் *பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள்.* இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள். 

 *அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (3971)* 

 *பெண்கள் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டப் பகுதி* 

பெண்கள் தமது உடல் அழகில் *கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க* வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலி-ருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது. 
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள் .

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 
 *நூல்: முஸ்லிம் (1612)* 

("விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) "கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்-ன் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)* 
 *நூல் : புகாரி (6228)* 

    கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.
    பெண்கள் முழங்காலிலிருந்து ஒரு முழம் வரை உள்ள பகுதிகளை மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 முழங்காலிலிருந்து ஒரு முழம் என்பது கரண்டை வரைக்கும் வரும். எனவே கரண்டைக்குக் கீழே உள்ள பாதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். 
    பெருமைகொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி)* 
 *நூல் : திர்மிதி (1653)* 

 *முகத்தை மறைப்பது தவறு* 

     *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 5*

No comments:

Post a Comment