பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, October 28, 2019

பெண்களுக்கான - 8

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


            *பாகம் 8* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 *கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்*


கணவனுக்கும் அவனது உறவினர்களுக்கு பணிவிடை செய்வது பெண்கள் மீது கடமையில்லை என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இதனால் கணவனின் உறவினர்களை இவர்கள் சரியாக கவனிப்பது கிடையாது. இது தவறாகும். 

ஒரு ஆண் ஒரு பெண்னை பல நன்மைகளை எதிர்பார்த்து திருமணம் செய்கிறான். தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவள் பனிவிடை செய்யவேண்டும் என்பது அதில் ஒன்றாகும். முரண்டு பிடிக்காமல் முதியவர்களை மதித்து நடப்பதே இறைநம்பிக்கையுள்ள பெண்ணிற்கு அடையாளம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் ஜாபிரே உனக்கு மனைவி உண்டா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஏற்கனவே திருமணமானவளை மனந்தாயா அல்லது கண்ணிப்பெண்னை மனந்தாயா? என்று கேட்டார்கள். அதற்கு நான் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவளைத் தான் மனந்தேன் என்று கூறினேன். நீ சிறிய (இளம்) பெண்னை திருமணம் செய்திருக்கக்கூடாதா? என்று கேட்டார்கள். நான் உங்களுடன் (போருக்கு சென்றிருந்த போது) என் தந்தை இன்னாளில் கொல்லப்பட்டுவிட்டார். அவர் (என் சகோதரிகளான) பல இளம் பெண்களை விட்டுச் சென்றுள்ளார். அவர்களைப் போன்ற ஒரு இளம் பெண்னையே (என் மனைவியாக ஆக்கி) அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் விரும்பவில்லை. எனவே (என் சகோதரிகளான) அந்த இளம்பெண்களுக்கு பேண் பார்த்துவிடவும் அவர்களின் சட்டை கிழிந்துவிட்டால் அதைத் தைத்துக்கொடுக்கவும் (பக்குவம் பெற்ற) ஏற்கனவே திருமணமான பெண்னை நான் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறினேன். நீ நினைப்பது சரிதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)* 
 *நூல் : அஹ்மத் (14332)* 

அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ர-) அவர்கள் (தமது) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ர-) அவர்களுடைய துணைவியார் (மணப் பெண்) உம்மு உசைத் (ர-) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள்.  உம்மு உசைத் (ர-) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ர-) அவர்கள் அந்தப் பேரீச்சங் கனிகளை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பüப்பாக ஊட்டினார்கள். 

 *அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஃத் (ரலி)* 
 *நூல் : புகாரி (5182)* 

 *பெண்கள் வெளியில் சென்றால் அனுமதி கேட்க வேண்டும்* 

பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கணவனிடம் அனுமதி கோர வேண்டும். பெண்கள் கணவனின் அனுமதி பெற்று வெளியில் செல்வது மார்க்கத்தில் உண்டு என்பதை *பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்* 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் மனைவியர் பள்üவாசலுக்குச் செல்ல உங்கüடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-)* 
 *நூல் : புகாரி (5238* )

 *கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுக்கலாமா?* 

கணவன் குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தொகையை கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவனுக்குத் தெரியாமல் தேவையான அளவு அவனது பணத்தில் மனைவி எடுத்துக்கொள்வது குற்றமில்லை. அப்படி எடுக்கும் தொகை முக்கியமான குடும்பத் தேவைகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும். 
முஆவியா (ரலிலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலிலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார்.  அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா? எனக் கேட்டார்கள்.  அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி) அவர்கள்* 
 *நூல் : புகாரி (2211)* 

 *கணவனின் பொருளை வீண்விரயம் செய்யாமல் நல்ல வழியில் செலவழித்தால் மனைவிக்கு நன்மை உண்டு.* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை -வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்; 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (22110)* 

 *குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?* 

கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளது. 
நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் "அஸ்ல்' (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 
 *நூல் : புகாரி (5209)* 

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்... அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (2606)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. 

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (2610* )

மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம். 
நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள். 

 *அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)* 
 *நூல் : புகாரி (2542)* 

தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிûடாயாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாத வாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிக கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பகட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது. 
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

 நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள். 

 *செய்ற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா?* 

    நவீன கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களில் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது ஒன்றாகும். இது இரண்டு முறையில் செய்யப்படுகிறது. கணவனின் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் கருவிகள் மூலம் செலுத்தி கருத்தரிக்கச் செய்யுதல். இவ்வாறு செய்வதில் தவறில்லை. ஏனென்றால் மனைவி என்பவள் கணவனின் விளைநிலம் என்று அல்லாஹ் கூறுகிறான். தன்னுடைய நிலத்தில் தன் விதையை விதைப்பதற்கு கணவனுக்கு முழு அனுமதியுள்ளது. 
    உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங் களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

 *அல்குர்ஆன் (2 : 223)* 

ஆனால் கணவன் அல்லாத யாரோ ஒருவரது விந்தனுவை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தி கருத்தரிக்கச் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனென்றால் தனக்கு உரிமையில்லாத நிலத்தில் விதையைத் தூவி பயிரிடுவதை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதுபோல் தனக்கு உரிமையில்லாதவளிடம் தன் விந்தை செலுத்தி குழந்தையை உருவாக்குவதை இஸ்லாம் ஒத்துக்கொள்ளவில்லை
    குழந்தைகளை பெற்றெடுப்பதால் சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதாலும் *அழகு குறைந்தவிடுகிறது என்பதாலும் சில பெண்கள் குழந்தையை பெற்றெடுப்பதற்கு வாடகைப் பெண்களை அமர்த்துகிறார்கள்.* தங்கள் கணவனின் விந்தணுவை இப்பெண்களின் கருவரைக்குள் செலுத்தி கருத்தரிக்கச் செய்கிறார்கள். *இதுவும் செய்யக்கூடாத மானங்கெட்ட செயலாகும்.* குழந்தையை பெற்றெடுத்தவள் தான் குழந்தைக்குத் தாயாக முடியும் என்ற சாதாரண அறிவு இருந்தால் இதுபோன்ற இழிவுச் செயலை செய்யமாட்டார்கள். 

 *விவாகரத்து (தலாக்)* 

    மனைவியை விட்டுப் பிரிவதற்கு விரும்பும் கணவன் உன்னை விவாகரத்துச் செய்கிறேன் என்று மனைவியிடம் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டுவிடும். இதற்கு *அரபுமொழியில் தலாக்* என்று சொல்லப்படும். இவ்வாறு விவாகரத்துச் செய்திட இஸ்லாத்தில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

    ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன அடியோடு திருமண உறவு முடிந்துவிடும் என்று கருதிவிடக்கூடாது. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் புதிய திருமணம் செய்யாமலேயே மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்துகொள்ளலாம்.

    இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கிவிடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம். இதற்கு எந்தத் தடையும் மார்க்கத்தில் இல்லை. 

    இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் *இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.* 
    முன்பு குறிப்பிட்டது போல் மூன்று மாதவிடாய் காலத்திற்குள் மனைவியுடன் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம்.

 இந்தக் காலம் கடந்து முடிந்த பிறகு இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் இவர்கள் புதிய திருமணத்தை செய்துகொண்டு சேர்ந்து வாழலாம். 
    மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாமல் போனால் மூன்றாவது தடவையாக விவாகரத்துச் செய்யலாம். ஆனால் இது தான் இறுதி வாய்ப்பாகும்.

 *மூன்றாவது முறை விவாகரத்துச் செய்துவிட்டால்* மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டுவிடுகிறது. 

    என்றாலும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் வேறொரு கணவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்தால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் அவளை மறுபடியும் திருமணம் செய்து கொள்ளலாம். 

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தை புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் *மூன்று தலாக் என்றோ முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர்* . அதன் பிறகு சேர்ந்து வாழ வழியில்லை என்றும் நினைக்கின்றனர். 
இது முற்றிலும் தவறாகும். 

 *ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறினாலோ அல்லது மூன்னூறு தலாக் என்று கூறினாலும் ஒரு விவாகரத்துத் தான் நிகழ்ந்துள்ளது.* ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நேரத்தில் மூன்று தலாக் சொல்வது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. 
இப்னு அப்பாஸ் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் முதல் இரண்டு வருடத்திலும் மூன்று முறை தலாக் சொல்வது ஒரு தலாக்காகவே (கருதப்பட்டது.)

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (2689)* 

ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்டது தவறான நடைமுறையாகும். 

இரண்டு சாட்சிகள்
    அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! 

 *அல்குர்ஆன் (65 : 2)* 

இவ்வசனத்தில் விவாகரத்துச் செய்வதற்கான மற்றொரு நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். *அதாவது விவாகரத்துச் செய்யும் போது இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்* என்பதே அந்த நிபந்தனை. 

 *தொலைபேசியில் விவாகரத்துச் செய்யலாமா?* 

    தொலைபேசியில் விவாகரத்து தபால் விவாகரத்து என்றெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய்வதையும் அதை மார்க்க அறிஞர்கள் சரி காண்பதையும் நாம் காண்கிறோம். 

    தபாலில் எழுதுவதற்கும் தொலைபேசியில் பேசுவதற்கும் இரண்டு சாட்சிகள் இருந்தால் போதும் என்று இதை சிலர் விளங்கிக்கொள்கின்றனர். 
    விவாகரத்துச் செய்பவனையும் செய்யப்பட்டவளையும் இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குரிய சாட்சியாக இருக்க முடியும். எனவே எதிர் தரப்பில் உள்ள பெண் யார் என்று தெரியாமல் அவள் இவனுக்கு மனைவி தான் என்பதையும் அறியாமல் தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறான் என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது. 

    எனவே இந்த விதியை கவனத்தில் வைத்துக் கொண்டால் அவசரத்தில் செய்யப்படும் விவாகரத்துகள் தவிர்க்கப்படும். 
விவாகரத்துத் தொடர்பான குர்ஆன் வசனங்கள்
    விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.

 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

 *அல்குர்ஆன் (2 : 228)* 

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.

 மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

 *அல்குர்ஆன் (2 : 229)* 

    (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து,  (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகிற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

 *அல்குர்ஆன் (2 : 230)* 

பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும்  ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

 *அல்குர்ஆன் (2 : 231)* 

பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்!

 உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

 *அல்குர்ஆன் (2 : 232)* 

 *குலா* 

பெண்களின் விவாகரத்து உரிமை
விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு. 
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ர-) அவர்கüன் துணைவியார் நபி (ஸல்) அவர்கüடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அüத்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (தந்து விடுகிறேன்)'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்கüடம்), "தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்-விடுங்கள்!'' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)* 
 *நூல் : புகாரி (5273)* 

மேற்கண்ட செய்தியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும்.

 அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம். 

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து உரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதை திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்களே அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது.

 சமுதாயத் தலைவர் அவளுக்கு நற் போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும். 

 *பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு*

 பெண்னை கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களேத் தவிர நிர்பந்திக்கவில்லை. 
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார்.

 அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

 அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ர-) அவர்கüடம் "அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?'' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் "முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?'' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா "அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்'' என்றார்கள். அப்போது பரீரா, "(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டார்.

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-)* 
 *நூல் : புகாரி (5283)* 

 *குலஃ உடைய சட்டங்களின் சுருக்கம்* 

ஒரு பெண்ணிற்கு தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும். 
அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாலோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்கு கட்டளையிட வேண்டும். 
அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும். 

கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை. 
கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளை திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருப்பது போல் மனைவி குலாஃ செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது. 

தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலஃ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை மறுமணம் செய்யக் கூடாது. அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்துகொள்ளலாம். 

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக்கொண்டார் என்று கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி) நூல் : நஸயீ (3441)* 

 *இத்தா*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் 9*

No comments:

Post a Comment