*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 109 👈👈👈*
*📚📚📚 தலைப்பு 10 குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚*
*31. 🕋🕋🕋விளிம்பில்☪️☪️ நின்று🙋♂️🙋♂️ கொண்டு🙋♀️🙋♀️ அல்லாஹ்வை☪️☪️ வழிபடுகின்றனர்🔰🔰 என்ற 🟣🟣வசனம்🟠🟠 இறங்கியது📚📚📚*
*32. 🧶🧶🧶மறுமையிலும்🟣 தனக்கே 🟠செல்வமும்⚫ சந்ததியும்🟡 வழங்கப்படும்🛑 என்று♻️ கூறிய🔰 போது☪️ இறங்கியது📚📚📚*
*33. ☪️☪️☪️ஜிப்ரீலிடம் 🕋🕋நபி அவர்கள்🕋🕋 கேட்டப்போது🟣 இறங்கியது📚📚📚*
*34. 👹👹👹ரூஹ்☪️☪️ பற்றிய🕋🕋 இறைவசனம்🧶🧶 இறங்கியது📚📚📚*
*35. ⚫⚫⚫உண்மைக்குப் ♻️♻️பரிசாக🧶🧶 இறைவசனங்கள்🕋🕋 இறங்கியது📚📚📚*
*31. 🕋விளிம்பில்☪️ நின்று🙋♂️ கொண்டு🙋♀️ அல்லாஹ்வை☪️வழிபடுகின்றனர்🔰 என்ற 🟣வசனம்🟠 இறங்கியது📚*
*✍️✍️✍️சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:*
*விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர் எனும் (திருக்குர்ஆன் 22:11 ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்வர்.)✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர் களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம் என்று கூறுவார்கள். அவர்களுடைய மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லை யென்றால், இது கெட்ட மார்க்கம் என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது) என்று சொன்னார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*(புகாரி 4742)*
*32. 🧶🧶🧶மறுமையிலும்🟣 தனக்கே 🟠செல்வமும்⚫ சந்ததியும்🟡 வழங்கப்படும்🛑 என்று♻️ கூறிய🔰 போது☪️ இறங்கியது📚📚📚*
*✍️✍️✍️கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறயதாவது :*
*நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. ஆகவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனது கடனைச் செலுத்தமாட்டேன் என்று சொன்னார்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️நான், நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒரு போதும் நிராகரிக்க மாட்டேன் என்று சொன்னேன்.*
*அதற்கவர் இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும் போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன் என்று சொன்னார்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️அப்போது தான் ”நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவானவற்றை அறிந்து கொண்டானா? அல்லது, கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? இல்லை; அவன் சொல்வதை நாம் எழுதிவைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம். அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் (செல்வம் சந்ததி எதுவுமின்றி) தனியாகவே நம்மிடம் வருவான்” எனும் (திருக்குர்ஆன் 19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன✍️✍️✍️.*
*(புகாரி 4735)*
*33. ☪️☪️☪️ஜிப்ரீலிடம் 🕋🕋நபி அவர்கள்🕋🕋 கேட்டப்போது🟣 இறங்கியது📚📚📚*
*🙋♂️🙋♂️🙋♂️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன? என்று கேட்டார்கள். அப்போது தான் (நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன் எனும் (திருக்குர்ஆன் 19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது🙋♀️🙋♀️🙋♀️.*
*(புகாரி 4731)*
*34. 👹👹👹ரூஹ்☪️☪️ பற்றிய🕋🕋 இறைவசனம்🧶🧶 இறங்கியது📚📚📚*
*✍️✍️✍️அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள் என்றார். மற்றவர், உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்) என்றார்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️பின்னர், (அனைவரும் சேர்ந்து) அவரிடம் கேளுங்கள் என்றனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹை)ப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என அறிந்து கொண்டேன். ஆகவே, நான் எனது இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன்🙋♀️🙋♀️🙋♀️.*
*🙋♂️🙋♂️🙋♂️வேத அறிவிப்பு (வஹீ) இறங்கிய போது, அவர்கள், (நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையினால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது எனும் (திருக்குர்ஆன் 17:85ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*(புகாரி 4721)*
*35. ⚫⚫⚫உண்மைக்குப் ♻️♻️பரிசாக🧶🧶 இறைவசனங்கள்🕋🕋 இறங்கியது📚📚📚*
*✍️✍️✍️4678 அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:*
*(என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்து விட்ட செய்தியை அறிவித்த போது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன்:*
*அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்த தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இந்த நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்:🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️திண்ணமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்கள் மீதும் (அருள்புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண் டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️மேலும் எவரது விவகாரத்தில்*
*தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்ததோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகிவிட்டிருந்ததெனில்,) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர் களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகி விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். திண்ணமாக அல்லாஹ்தான் மிக மன்னிப் போனும், கருணையுடையோனுமாயிருக் கிறான். இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள். (திருக்குர்ஆன் 9:117-119)🙋♀️🙋♀️🙋♀️*
*36. 👹👹👹நயவஞ்சகர்கள்🧶🧶 தபூக்கில் 🟣🟣கலந்து🟠🟠 கொள்ளாத🟡🟡 போது⚫⚫ இறங்கியது📚📚📚*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 110*
*🌹🌹🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment