பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

அல்குர்ஆன் வசனமும் - 24

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 24*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 15 }*

      *☄️ கேள்வியும் பதிலும் ☄️*

_*🍃(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ என்று கூறுவீராக!*_

    *📖 அல்குர்ஆன் 17:85 📖*

ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺣﻔﺺ ﺑﻦ ﻏﻴﺎﺙ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﺣﺪﺛﻨﺎ اﻷﻋﻤﺶ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ، *ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﺑﻴﻨﺎ ﺃﻧﺎ ﻣﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺣﺮﺙ، ﻭﻫﻮ ﻣﺘﻜﺊ ﻋﻠﻰ ﻋﺴﻴﺐ، ﺇﺫ ﻣﺮ اﻟﻴﻬﻮﺩ، ﻓﻘﺎﻝ ﺑﻌﻀﻬﻢ ﻟﺒﻌﺾ: ﺳﻠﻮﻩ ﻋﻦ اﻟﺮﻭﺡ، ﻓﻘﺎﻝ: ﻣﺎ ﺭﺃﻳﻜﻢ ﺇﻟﻴﻪ؟ ﻭﻗﺎﻝ ﺑﻌﻀﻬﻢ: ﻻ ﻳﺴﺘﻘﺒﻠﻜﻢ ﺑﺸﻲء ﺗﻜﺮﻫﻮﻧﻪ، ﻓﻘﺎﻟﻮا: ﺳﻠﻮﻩ، ﻓﺴﺄﻟﻮﻩ ﻋﻦ اﻟﺮﻭﺡ، ﻓﺄﻣﺴﻚ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻠﻢ ﻳﺮﺩ ﻋﻠﻴﻬﻢ ﺷﻴﺌﺎ، ﻓﻌﻠﻤﺖ ﺃﻧﻪ ﻳﻮﺣﻰ ﺇﻟﻴﻪ، ﻓﻘﻤﺖ ﻣﻘﺎﻣﻲ ﻓﻠﻤﺎ ﻧﺰﻝ اﻟﻮﺣﻲ، ﻗﺎﻝ: " {ﻭﻳﺴﺄﻟﻮﻧﻚ ﻋﻦ اﻟﺮﻭﺡ، ﻗﻞ: اﻟﺮﻭﺡ ﻣﻦ ﺃﻣﺮ ﺭﺑﻲ ﻭﻣﺎ ﺃﻭﺗﻴﺘﻢ ﻣﻦ اﻟﻌﻠﻢ ﺇﻻ ﻗﻠﻴﻼ} [اﻹﺳﺮاء: 85] "*

_அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்._

_*🍃நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரிச்சந்தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரிச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) ‘இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்’ என்றார். மற்றவர், ‘உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது?’ என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் ‘நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக்கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)’ என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து) ‘அவரிடம் கேளுங்கள்’ என்றனர்.*_

_*அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹைப்) பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என அறிந்துகொண்டேன். எனவே, நான் என்னுடைய இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ எனும் (17:85) இறைவசனத்தைக் கூறினார்கள்.*_

       *📚நூல்: புகாரி (4721)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment