பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, December 18, 2020

நன்மைகளை - 01

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🥀 நன்மைகளை அள்ளிக் 🥀*
                               ⤵️ 
              *🥀 கொள்வோம் 🥀*

                *✍🏻.... தொடர் { 01 }*

*🏮🍂இந்த உலகில் வாழும் போது நமது செயல்கள் எவ்வாறு இருந்ததோ அதன் அடிப்படையில் தான் அல்லாஹ் மறுமையில் நமக்குத் தீர்ப்பு வழங்குவான். இதை நினைவில் கொண்டு தீமையான காரியங்களை விட்டு விலகி இருப்பதோடு, முடிந்தளவுக்கு நன்மையான காரியங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும்.*

*🏮🍂இத்தகைய ஆர்வமும் அக்கறையும் எப்போதும் இருக்க வேண்டுமெனில், நமது நற்காரியங்களுக்கு அல்லாஹ் எவ்வாறெல்லாம் கூலியை வழங்குகிறான் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஆகவே.* இது தொடர்பாக சில செய்திகளை  இந்த தொடரில் தெரிந்து கொள்வோம்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🥀நினைப்பதற்கும் நன்மை🥀*

*🏮🍂மார்க்க விசயத்திலோ, உலக விசயத்திலோ ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்ய வேண்டுமென நினைத்தால், அந்த நல்ல எண்ணத்தைப் பாராட்டும் வகையில் அதற்கும் அல்லாஹ் கூலியை வழங்குகிறான்.*

_وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا  فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ_

_*🍃“(எனது அடியான்) அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்” என்று அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுவதாக  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
             *அபூ ஹுரைரா (ரலி)*

       *📚நூல்: புகாரி (7501)📚*

*🏮🍂ஆகவே எந்தவொரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், அல்லாஹ்விடம் கூலியைப் பெறுவதற்காக செய்கிறோம் என்ற மனத்தூய்மை அவசியம். அப்போது தான், ஒருவேளை அந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் கூட அதைச் செய்ய வேண்டுமென நினைத்ததற்கு அல்லாஹ்விடம் கூலியைப் பெற முடியும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment