பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

நாவை* ⤵️ *பேனுவோம் - 9

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 09 }*

                *☄️ அவதூறு { 05 } ☄️*

*☄️பாதிக்கப்பட்டவரின்*
            *பிரார்த்தனைக்கு*
                  *அஞ்சிக் கொள்ளுங்கள்*

*🏮🍂அவதூறின் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டு அல்லாஹ்விடம் முறையிட் டால் அந்த பிரார்த்தனை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிடுவான். அதனால் நாம் இம்மையிலும் மறுமையில் கடும் தண்டனை ஏற்க நேரிடும்.*

2448- حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى ، حَدَّثَنَا وَكِيعٌ ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ الْمَكِّيُّ ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ صَيْفِيٍّ ، عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ ، *عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللهِ حِجَابٌ*

_*🍃அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ர) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *இப்னுஅப்பாஸ் (ரலி),*

     *📚நூல் : புகாரி (2448)📚*

*🏮🍂நபிகளார் காலத்திற்கு பிறகு ஒருவர், நபித்தோழர் மீது அவதூறு சொல்லி அதனால் பதிக்கப்பட்ட சம்பவம் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.*

755- حَدَّثَنَا مُوسَى قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ ، *عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : شَكَا أَهْلُ الْكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ , رَضِيَ اللَّهُ عَنْهُ , فَعَزَلَهُ , وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا ، فَشَكَوْا ، حَتَّى ذَكَرُوا أَنَّهُ لاَ يُحْسِنُ يُصَلِّي ، فَأَرْسَلَ إِلَيْهِ , فَقَالَ : يَا أَبَا إِسْحَاقَ , إِنَّ هَؤُلاَءِ يَزْعُمُونَ أَنَّكَ لاَ تُحْسِنُ تُصَلِّي ؟ قَالَ أَبُو إِسْحَاقَ : أَمَّا أَنَا وَاللهِ , فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، مَا أَخْرِمُ عَنْهَا ، أُصَلِّي صَلاَةَ الْعِشَاءِ ، فَأَرْكُدُ فِي الأُولَيَيْنِ ، وَأُخِفُّ فِي الأُخْرَيَيْنِ ، قَالَ : ذَاكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ , فَأَرْسَلَ مَعَهُ , رَجُلاً ، أَوْ رِجَالاً , إِلَى الْكُوفَةِ ، فَسَأَلَ عَنْهُ أَهْلَ الْكُوفَةِ ، وَلَمْ يَدَعْ مَسْجِدًا إِلاَّ سَأَلَ عَنْهُ ، وَيُثْنُونَ مَعْرُوفًا ، حَتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ ، فَقَامَ رَجُلٌ مِنْهُمْ , يُقَالُ لَهُ : أُسَامَةُ بْنُ قَتَادَةَ , يُكْنَى أَبَا سَعْدَةَ ، قَالَ : أَمَّا إِذْ نَشَدْتَنَا , فَإِنَّ سَعْدًا كَانَ لاَ يَسِيرُ بِالسَّرِيَّةِ ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ ، وَلاَ يَعْدِلُ فِي الْقَضِيَّةِ , قَالَ سَعْدٌ : أَمَا وَاللهِ لأَدْعُوَنَّ بِثَلاَثٍ ، اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا ، قَامَ رِيَاءً وَسُمْعَةً , فَأَطِلْ عُمْرَهُ ، وَأَطِلْ فَقْرَهُ ، وَعَرِّضْهُ بِالْفِتَنِ ، وَكَانَ بَعْدُ إِذَا سُئِلَ يَقُولُ : شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ ، أَصَابَتْني دَعْوَةُ سَعْدٍ , قَالَ عَبْدُ الْمَلِكِ : فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ مِنَ الْكِبَرِ ، وَإِنَّهُ لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي فِي الطُّرُقِ يَغْمِزُهُنَّ.*

_ஜாபிர் பின் சமுரா (ர) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ர) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ர) அவர்கடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை (பதவியிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ரலி) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்கன் முறையீடுகல் ஒன்றாக இருந்தது._

_ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்கடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)” என்று கேட்டார்கள். அதற்கு அபூ இஸ்ஹாக் (சஅத் பின் அபீவக் காஸ்-ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்து வந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்து விடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்கல் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்கல் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்” என்று பதிலத்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே’ என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ஒருவரை’ அல்லது சிலரை’ சஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ரலி) அவர்கள் குறித்து கூஃபாவாசிகடம் விசாரனை நடத்தினார்கள்._

_விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகடம் விசாரனை மேற்கொண்டார். (கூஃபாவிருந்த) ஒரு பள் வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரலி) அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். _*இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூ சஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தான் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அக்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்” என்று (குறை) கூறினார்._*

_*🍃இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு, இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்யிருந்தால் பகட்டுக்காகவும், புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறைகூறமுன்வந்திருந்தால் அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.*_

_இதன் அறிவிப்பாளரான அப்துல் மக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக் களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதி கனாக இருக்கிறேன்; சஅத் அவர்கன் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது” என்று கூறுவார்._

_அப்துல் மக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னாலில் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களை (பார்வை போனதால்) மோதிக் கொள்வார் அவர்களைத் துன்புறுத்துவார்.*_

      *📚நூல்: புகாரி (755)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment