பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, December 6, 2020

மறுமையில் - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🌺மறுமையில் அல்லாஹ்*
             *பார்க்காத பேசாத*
                           *நபர்கள்🌺*

           *✍🏻... தொடர் ➖0️⃣7️⃣*

*🗣️👤செய்த உதவியை*
                  *சொல்லிக்*
                            *காட்டுபவன்*

*🏮🍂பிறருக்குத் தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை அல்லாஹ் பார்க்க மாட்டான். அவனிடம் பேச மாட்டான். அவனைப் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான். நம் சமுதாயத்தில் உதவி செய்யும் நபர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.* அதிலும் தான் செய்த உதவியை சொல்லிக் காட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். உதவி செய்யாதவனை விட, உதவி செய்து விட்டு அதைச் சொல்லிக் காட்டுபவன் அதிக குற்றத்திற்குரியவன்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، *عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ‏"‏ قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مِرَارٍ ‏.‏ قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ ‏"‏ ‏.‏"*

_*🍃‘மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்ள அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_ _இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ‘(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்ள நஷ்டமடைந்து விட்டனர் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டேன். அதற்கு, ‘தமது ஆடையை (பெருமைக்காகக்) கீழே இறக்கிக் கட்டியவர்_ _*(செய்த உபகாரத்தை) சொல்லிக் காட்டுபவர்*_ _பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்._

*🎙️அறிவிப்பாளர்:*
                   *அபூதர் (ரலி)*

       *📚 நூல்: முஸ்லிம் 171 📚*

*🏮🍂தான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித் தந்தாலும் அவனுக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காது, இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.*

*يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடு பவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.*_

*📖 (அல்குர்ஆன் 2:264) 📖*

*🏮🍂ஒரு வழவழப்பான பாறையில் மண் படிந்திருக்கிறது. அந்தப் பாறையின் மீது மழை நீர் விழும் போது பாறையின் மீதுள்ள மண் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு, சிதறி காணாமல் போய் விடும். பாறையின் மீது சிறிய மண் துகளைக் கூட காண முடியாது. இது போன்று பிறர் பார்ப்பதற்காகத் தர்மம் செய்தவனின் செயல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகிறது. சிறிது கூட நன்மை கிடைக்காது. இதையே அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகின்றான்.*

*🏮🍂தான் செய்த உதவியை சொல்லிக் காட்டாதவர்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.*

*الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَا أَنفَقُوا مَنًّا وَلَا أَذًى ۙ لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ*

_*🍃அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 2:262) 📖*

*🏮🍂அல்லாஹ் குர்ஆனில் சொர்க்க வாசிகளின் சில பண்புகளைச் சுட்டிக் காட்டுகிறான். அவர்கள் யாருக்கு உதவி செய்வார்களோ அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்காகவே உதவுவார்கள் என்று கூறுகின்றான்.*

*وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا*

_*🍃அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர் பார்க்கவில்லை’ (என்று கூறுவார்கள்)*_

        *📖(அல்குர்ஆன் 76:8)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment