பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, December 13, 2020

பொறுப்பு - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *👑 பொறுப்பு ஓர் 👑*
                                ⤵️
                  *🔥அமானிதம் 🔥*

                  *✍🏻.... தொடர் : { 04 }*

*🌺மக்களில்*
             *சிறந்தவர்கள் 🌺*

*🏮🍂பதவி, அதிகார விஷயத்தில் மக்களின் பார்வையில் ஏராளமானோர் சிறந்தவர்களாகத் தெரியலாம். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் மக்களில் சிறந்தவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணிக்கின்றார்கள்.*

_تَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ فِي هَذَا الشَّأْنِ أَشَدَّهُمْ لَهُ كَرَاهِيَةً حَتَّى يَقَعَ فِيهِ_

_*🍃“இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்’’ என்று கூறப்படுகிறது.*_

*📚ஆதாரம்: முஸ்லிம் 4945📚*

*🏮🍂தலைமைப் பொறுப்பு, தானாகத் தன்னுடைய தலைக்கு மேலே விழுந்தாலே தவிர, தலைமைப் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுபவர்களும், தலைமைப் பொறுப்புகள் விஷயத்தில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களும் தான் மக்களில் சிறந்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சான்று பகர்கின்றார்கள்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🤲பொறுப்பாளிகளுக்கு*
         *சிறப்பு பிரார்த்தனை:*

*🏮🍂சமுதாய விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவருக்கு சிறப்புமிக்க பிரார்த்தைனையை இறைவனிடத்தில் பிரத்தியேகமாக நபி (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள்.* இந்தப் பிரார்த்தனைகளுக்குச் சொந்தக்காரர்களாக, பொறுப்பாளிகள் மாற முயற்சிக்க வேண்டும்!

_، يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.*_

*📚ஆதாரம்: முஸ்லிம் 3732📚*

*🏮🍂பொறுப்பாளியாக இருப்பவர் மக்களுக்கு சிரமத்தையோ அல்லது சிரமம் தருகின்ற வேலையிலோ ஈடுபட்டால் அல்லாஹ்வின் அந்தப் பொறுப்பாளிகளுக்குக் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துவான்.* எனவே, மக்களிடத்தில் மென்மையான முறையில் *பொறுப்புகளைக் கையாள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment