பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, December 20, 2020

நன்மைகளை - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🥀 நன்மைகளை அள்ளிக் 🥀*
                               ⤵️ 
              *🥀 கொள்வோம் 🥀*

                *✍🏻.... தொடர் { 03 }*

*🥀முயற்சி செய்வதற்கும்*
                 *நன்மை 🥀*

*🏮🍂ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்வதற்கு முனையும் போது போது அதைச் செய்ய முடியாமால் போனாலும் கூட அந்த முயற்சிக்கும் அல்லாஹ் கூலி தருகிறான். இதைப் பின்வரும் நிகழ்வு மூலம் அறிந்து கொள்ளலாம்.*

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ، عَنْ حُمَيْدٍ، *عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ، فَقَالَ: «إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ العُذْرُ»*

_*🍃நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘மதீனாவில் (நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயை, பள்ளத்தாக்கைக் கடந்தாலும்  அவர்களும் நம்முடன் இருக்கும் நிலையிலேயே அதை நாம் கடந்து வருகிறோம். (ஏற்கத்தகுந்த) சில காரணங்களே (புனிதப் போரில் கலந்து கொள்ளவிடாமல்) அவர்களைத் தடுத்து விட்டன’ என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                 *அனஸ் (ரலி)*

      *📚நூல்: புகாரி (2839)📚*

*🏮🍂அல்லாஹ்வின் பாதையில் அவனது மார்க்கத்தைக் காப்பதற்காக போர்க்களத்தில் கலந்து கொள்வது சாதாரண விசயமல்ல. அது மிகச்சிறந்த அறச்செயல். அதில் கலந்து கொண்டு திரும்பி வருபவர்களுக்குக் கிடைக்கும் அதே நன்மை, மதீனாவிலுள்ள சில தோழர்களுக்கும் கிடைக்கும் என்கிறார்கள், நபியவர்கள்.*

*🏮🍂அவர்கள் விரும்பினாலும், முயற்சித்தாலும் நிர்ப்பந்தமான சூழலால் தான் அவர்கள் போருக்கு வரமுடியவில்லை. ஆகவே போரில் கலந்து கொண்டவர்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவர்களுக்கும் கிடைக்கும் என்று நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதை மனதில் கொண்டு நற்காரியங்களைச் செய்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment