பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

இஸ்லாத்தில் பூனை

*இஸ்லாத்தில் பூனை 😺*



💟 *இஸ்லாத்தில் பூனை வளர்க்க அனுமதி உண்டு !*

*💟 பூனை என்பது அசுத்தமான பிராணி அல்ல 🚫 அது சுத்தமான பிராணியே !*


*💟 பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம். அந்த இடம் சுத்தமானதே !*


*💟 பூனை இயல்பாகவே மனிதர்களை சுற்றி வர கூடியதே ஒன்றே ! பூனைகளை வெறுத்து ஒதுக்காதீர்கள் 🚫*



😺 அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன்.

*உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு அவர் பாத்திரத்தைச் சாய்த்தார். என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா? என்று கேட்டார். நான் ஆம் என்றேன். இவை அசுத்தமானவை அல்ல. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.*


( நூல் : திர்மிதி )



⚠️ பலர் இன்றும் கூட பூனைகளை துன்புறுத்துவது ! பூனை குட்டி ஈன்றாள் அதை தாய்யை விட்டு குட்டிகளை பிரிப்பது போன்ற கொடுமைகளை செய்கிறார்கள் 😥

*பூனையை கொடுமை படுத்திய ஒரு பெண்ணிற்கு கிடைத்த பிரதிபலன் 🔥*


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*(முன் சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனையின் காரணமாக வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று அல்லாஹ் கூறினான்.*

அறிவிப்பவர்  : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

( நூல் : ஸஹீஹ்  புகாரி 2365 )


பூனையை வளர்த்தற்காக இந்தப் பெண் தண்டிக்கப்படவில்லை. பூனையைக் கட்டிப்போட்டு பராமரிக்காமல் விட்டதற்காகவே தண்டிக்கப்பட்டாள். 

பூனையைக் கட்டிப் போட்டால் கட்டிப்போட்டவர் தான் அதற்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து பூனையை முறையாக வளர்ப்பது தவறு இல்லை 🚫


❣️ *பூனைகளை விற்க கூடாது நபி அவர்கள் அதற்கு தடை 🚫 விதித்து உள்ளார்கள் ☝️*


அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

*நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்" என விடையளித்தார்கள்.*

( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3194 )


❤️ *மிக பிரலமான மற்றும் அதிகம் ஹதீஸ் அறிவித்த ஸஹாபி*

*அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்பொழுதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருப்பார்கள் அதே சமயத்தில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கும் ஒரு பையில் எப்பொழுதும். ஒரு குட்டி ஆண் பூனை வைத்திருப்பார்கள்.*

*அந்த பூனை அஙவர்களை விட்டும் எங்கும் செல்லாது சென்றாலும் மீண்டும் அவர்களிடமே வந்து விடும் அந்த பூனையிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள் அதற்க்கு தேவையான உணவும் தண்ணீரும் அவ்வப்பொழுது வழ்ங்குவார்கள்*

*அவர்களிடம் குட்டி பூனை எப்பொழுதும் இருப்பதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்*

*" பூனைகளின் தந்தை " என பொருள் வரும் படி  அபூ ஹுரைரா என்று அழைத்தார்கள் அவர்களின் அந்த பெயரே கியாம நாள் வரை நிலைத்து விட்டது*

*அரபியில் " ஹிர்ரா " என்றால் " ஆண் பூனை " என்று பெயர் " ஹுரைரா " என்றால் " குட்டி ஆண் பூனை " என்று அர்த்தம் !*



@அல்லாஹ்_போதுமானவன் 💕

No comments:

Post a Comment