பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 16, 2020

பொறுப்பு - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *👑 பொறுப்பு ஓர் 👑*
                                ⤵️
                  *🔥அமானிதம் 🔥*

                  *✍🏻.... தொடர் : { 06 }*

                *💰 இறுதி பாகம் 💰*

_🏹 உமர் (ரலி) அவர்களின் அற்புதமான குணம்:_

*🏮🍂உமர் (ரலி) ஆட்சிப் பதவியில் இருக்கும் போது மக்கள் அவரையும், அவரது ஆட்சி முறையையும் புகழ்ந்து பேசினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் சொன்ன பதில் அற்புதமான ஓர் எடுத்துக் காட்டாக, பொறுப்பாளர்களுக்கு இருக்கின்றது.*

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، _عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ قِيلَ لِعُمَرَ أَلاَ تَسْتَخْلِفُ؟ قَالَ: «إِنْ أَسْتَخْلِفْ فَقَدِ اسْتَخْلَفَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي أَبُو بَكْرٍ، وَإِنْ أَتْرُكْ فَقَدْ تَرَكَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَأَثْنَوْا عَلَيْهِ فَقَالَ: «رَاغِبٌ رَاهِبٌ، وَدِدْتُ أَنِّي نَجَوْتُ مِنْهَا كَفَافًا، لاَ لِي وَلاَ عَلَيَّ، لاَ أَتَحَمَّلُهَا حَيًّا وَلاَ مَيِّتًا_

_*🍃(நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது(தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை’’ என்று கூறினார்கள்.*_

   *📚ஆதாரம்: புகாரி 7218📚*

*🏮🍂உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட விஷயங்களில், நான் என்னுடைய இறைவனிடத்தில் இருந்து தப்பித்தாலே போதும் என்று நிர்வாக விஷயத்தில் அல்லாஹ்வைப் பற்றிக் கடுமையாக அஞ்சக் கூடியவர்களாக இருந்தார்கள்.* மேலும், எனது ஆட்சி காலத்திற்குப் பிறகு நான் ஒருவரை நியமித்து மரணத்திற்குப் பிறகும் பொறுப்பை சுமக்கத் தயாரில்லை என்று தெள்ளத் தெளிவாக, ஆட்சி பொறுப்பு ஒரு அமானிதம் தான் என்பதை விளக்குகின்றார்கள்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

        *🌺 இறுதியாக: 🌺*

*🏮🍂பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் மற்றும் பொறுப்பில் இருந்து விலகியவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் விளக்குகின்றார்கள்.*

_، طُوبَى لِعَبْدٍ آخِذٍ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، أَشْعَثَ رَأْسُهُ، مُغْبَرَّةٍ قَدَمَاهُ، إِنْ كَانَ فِي الحِرَاسَةِ، كَانَ فِي الحِرَاسَةِ، وَإِنْ كَانَ فِي السَّاقَةِ كَانَ فِي السَّاقَةِ، إِنِ اسْتَأْذَنَ لَمْ يُؤْذَنْ لَهُ، وَإِنْ شَفَعَ لَمْ يُشَفَّعْ_

_*🍃அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும்.*_ _(அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்._

_பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன்  பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.)_

    *📚ஆதாரம்: புகாரி 2887📚*

*🏮🍂பொறுப்பு வழங்கப்பட்டுப் பின்னர் பொறுப்பு கைமாறியவர்களுக்கும், பொறுப்பை வகிப்பவர்களுக்கும் இந்தச் செய்தி மிக அற்புதமான உதாரணம்.* மேல்நிலை, கீழ்நிலை என்று இல்லாமல், இதன் அடிப்படையில் பொறுப்புகளில் செயல்பட்டு, சொர்க்கம் செல்லப் பாடுபட வேண்டும்.

*🏮🍂பதவியை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படாமல், சுவனம் செல்வதை மட்டுமே இலக்காகக் கொண்டு நமது இலட்சியப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.*

*🏮🍂ஒரு ஜமாஅத்தையோ, அரசாங்கப் பொறுப்புகளையோ நிர்வாகம் செய்கின்ற யாராக இருந்தாலும் அல்லாஹ்வுக்குப் பயந்து, நீதிக்கு சாட்சியாளர்களாக இருந்து, பதவி, புகழ், அதிகாரம் கிடைப்பதற்காக அல்லாமல் மக்களை நிர்வாகம் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக!!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
                    ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment