பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, December 14, 2020

பொறுப்பு - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *👑 பொறுப்பு ஓர் 👑*
                                ⤵️
                  *🔥அமானிதம் 🔥*

                  *✍🏻.... தொடர் : { 05 }*

*☄️மிகவும்*
            *மோசமானவர்கள்:*

*🏮🍂மக்களின் பொறுப்பைத் தன்னகத்தே கொண்டு செயல்படுகின்ற பொறுப்பாளர்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; தீயவர்களும் இருக்கின்றார்கள். பொறுப்பாளர்களில் மிகக் கெட்டவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.*

_حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا الْحَسَنُ أَنَّ عَائِذَ بْنَ عَمْرٍو، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى عُبَيْدِ اللهِ بْنِ زِيَادٍ، فَقَالَ: أَيْ بُنَيَّ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ شَرَّ الرِّعَاءِ الْحُطَمَةُ، فَإِيَّاكَ أَنْ تَكُونَ مِنْهُمْ_

_🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்!_ _*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.*_

*📚ஆதாரம்: முஸ்லிம் 3736📚*

*🏮🍂மக்களை நிர்வாகம் செய்பவர்கள் கல் நெஞ்சக்காரர்களாக இருக்கக் கூடாது. இளகிய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சி மக்களை நிர்வகிக்காமல், தன்னுடைய மனம் போன போக்கிலே நிர்வாகம் செய்பவர்கள் தங்களுடைய உள்ளங்களைக் கல் நெஞ்சம் கொண்டவர்களாக மாற்றிக் கொள்வார்கள்.* இத்தகையவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சர்க்கை விடுக்கின்றார்கள்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️பொறுப்பாளர்களின்*
                     *தனிச்சிறப்பு:*

*🏮🍂அல்லாஹ்வுக்காக நேர்மையான முறையிலும், இறையச்சத்தோடும் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தனிச்சிறப்பை வழங்குகின்றது.*

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:_

_إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا_

_*🍃நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).*_

*📚ஆதாரம்: முஸ்லிம் 3731📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment