பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 24, 2020

அல்குர்ஆன் - 41

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : { 41 }*
                           
*☄️கொள்கை*
         *விளக்கங்கள் பற்றி*
            *இறங்கிய வசனங்கள்{ 03 }*

*☄️இறைமறுப்பாளனின்*
                   *மறுமை நிலை ☄️*

_*🍃நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா❓ “எனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்’’ என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா❓ அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா❓ அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான்.*_

*📖அல்குர்ஆன் 19:77 – 80📖*

ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ، ﺣﺪﺛﻨﺎ ﻭﻛﻴﻊ -[95]-، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺃﺑﻲ اﻟﻀﺤﻰ، ﻋﻦ ﻣﺴﺮﻭﻕ، *ﻋﻦ ﺧﺒﺎﺏ، ﻗﺎﻝ: ﻛﻨﺖ ﺭﺟﻼ ﻗﻴﻨﺎ، ﻭﻛﺎﻥ ﻟﻲ ﻋﻠﻰ اﻟﻌﺎﺹ ﺑﻦ ﻭاﺋﻞ ﺩﻳﻦ ﻓﺄﺗﻴﺘﻪ ﺃﺗﻘﺎﺿﺎﻩ، ﻓﻘﺎﻝ ﻟﻲ: ﻻ ﺃﻗﻀﻴﻚ ﺣﺘﻰ ﺗﻜﻔﺮ ﺑﻤﺤﻤﺪ، ﻗﺎﻝ: ﻗﻠﺖ: «ﻟﻦ ﺃﻛﻔﺮ ﺑﻪ ﺣﺘﻰ ﺗﻤﻮﺕ، ﺛﻢ ﺗﺒﻌﺚ»، ﻗﺎﻝ: ﻭﺇﻧﻲ ﻟﻤﺒﻌﻮﺙ ﻣﻦ ﺑﻌﺪ اﻟﻤﻮﺕ، ﻓﺴﻮﻑ ﺃﻗﻀﻴﻚ ﺇﺫا ﺭﺟﻌﺖ ﺇﻟﻰ ﻣﺎﻝ ﻭﻭﻟﺪ، ﻗﺎﻝ: ﻓﻨﺰﻟﺖ: {ﺃﻓﺮﺃﻳﺖ اﻟﺬﻱ ﻛﻔﺮ ﺑﺂﻳﺎﺗﻨﺎ ﻭﻗﺎﻝ: ﻷﻭﺗﻴﻦ ﻣﺎﻻ ﻭﻭﻟﺪا ﺃﻃﻠﻊ اﻟﻐﻴﺐ ﺃﻡ اﺗﺨﺬ ﻋﻨﺪ اﻟﺮﺣﻤﻦ ﻋﻬﺪا، ﻛﻼ ﺳﻨﻜﺘﺐ ﻣﺎ ﻳﻘﻮﻝ ﻭﻧﻤﺪ ﻟﻪ ﻣﻦ اﻟﻌﺬاﺏ ﻣﺪا ﻭﻧﺮﺛﻪ ﻣﺎ ﻳﻘﻮﻝ ﻭﻳﺄﺗﻴﻨﺎ ﻓﺮﺩا}*

_கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_*🍃நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லராக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. எனவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் ‘நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உன்னுடைய கடனைச் செலுத்தமாட்டேன்’ என்று கூறினார். நான், ‘நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்’ என்று சொன்னேன்.*_

_*அதற்கவர் ‘இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா❓ அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும்போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன்’ என்று கூறினார்.*_

_*🍃அப்போதுதான் ‘நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? “எனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்’’ என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான்’ எனும் (19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.*_

*📚நூல்: புகாரி (4735, 4733 , 4732)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment