*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 110 👈👈👈*
*📚📚📚 தலைப்பு 10 குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚*
*36. 👹👹👹நயவஞ்சகர்கள்🧶🧶 தபூக்கில் 🟣🟣கலந்து🟠🟠 கொள்ளாத🟡🟡 போது⚫⚫ இறங்கியது📚📚📚*
*37. 👹👹👹முனாஃபிற்க்கு ☪️☪️நபி 🕋🕋தொழ☪️☪️ வைக்க 🟣🟣முயன்ற🟡🟡 போது🟠🟠 இறங்கியது📚📚📚*
*38. 👹👹👹முனாஃபிக்குகள்☪️☪️ முஸ்லிம்களை🕋🕋 குறைகூறிய🧶🧶 போது ⚫⚫இறங்கியது📚📚📚*
*39. 🌰🌰🌰குகையில் 🛑🛑அமைதி ♻️♻️இறங்கியது🟣🟣 குறித்து🟡🟡 வந்த🟠🟠 வசனம்📚📚📚*
*40. ☪️☪️☪️நபியை🕋🕋 கேலி🟣🟣 செய்த ☪️☪️முஸ்லிம்களை⚫⚫ கண்டித்து🔰🔰 இறங்கியது📚📚📚*
*36. 👹நயவஞ்சகர்கள்🧶 தபூக்கில் 🟣கலந்து🟠 கொள்ளாத🟡 போது⚫இறங்கியது📚*
*✍️✍️✍️4677 அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:*
*என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️அல்உஸ்ரா (எனும் தபூக்) போர், பத்ருப் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த அறப்போரிலும் ஒரு போதும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.*
*மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பக-ல் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற் கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும் போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முத-ல் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப் படி அன்றும் தொழுது விட்டு, தபூக் போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களி டமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.*
*ஆகவே மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்து விட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுவிக்காமல் இருந்து விடு வார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான். அப்போது தான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்த போது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முசலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்முசலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், (அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக் கட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்து விட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்து விடுவார்கள்என்றார்கள்✍️✍️✍️* .
*🙋♂️🙋♂️🙋♂️ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். -நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும் போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.*
*(போருக்குச் செல்லாமல் இருந்து விட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்கு களைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமை யாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் கூறுகிறான்:🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(நம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒரு போதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட் டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள், மறைவானவை, வெளிப் படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 9:94)✍️✍️✍️*
*37. 👹முனாஃபிற்க்கு ☪️நபி 🕋தொழ☪️ வைக்க 🟣முயன்ற🟡 போது🟠 இறங்கியது📚*
*🙋♂️🙋♂️🙋♂️அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடு வதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள்.*
*உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைவித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்! என்று கேட்டார்கள்.*
*அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான் என்று கூறிவிட்டு, (நபியே!) நீங்கள் அவர்களுக்காப் பாவ மன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோரா மலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,)✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள்.*
*உமர் (ரலி) அவர்கள், இவர் நயவஞ்சகராயிற்றே! என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்கவேண்டாம் எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.🙋♀️🙋♀️🙋♀️*
*(புகாரி 4670)*
*✍️✍️✍️4671 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*(நயவஞ்கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்து விட்ட போது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்த போது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, அல்லாஹ்வின் தூதரே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகின்றீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படி யெல்லாம் சொன்னாரே! என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைபுரிந்து விட்டு, ஒதுங்கிக் கொள்ளுங்கள், உமரே! என்று சொன்னார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், இவருக்காகப் பாவமன்னிப்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந் தெடுத்துக் கொண்டேன்.) நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவரு மாயின் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுவித்து விட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் பராஅத் (9ஆவது) அத்தியாத்திலிருந்து அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்எனும் (திருக்குர்ஆன் 9:84, 85 ஆகிய) இரு வசனங்கள் அருளப்பெற்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும்,அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்✍️✍️✍️.*
*38. 👹முனாஃபிக்குகள்☪️ முஸ்லிம்களை🕋 குறைகூறிய🧶 போது ⚫இறங்கியது📚*
*🙋♂️🙋♂️🙋♂️புகாரி-4668 அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது நாங்கள் கூலிவேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார் என்று (குறை) சொன்னார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️அப்போது தான் ”(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறை வழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” எனும் (திருக்குர்ஆன் 9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.✍️✍️✍️*
*39. 🌰குகையில் 🛑அமைதி ♻️இறங்கியது🟣 குறித்து🟡 வந்த🟠 வசனம்📚*
*🙋♂️🙋♂️🙋♂️அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிட மிருந்து மன அமைதியை அருளினான் எனும் (திருக்குர்ஆன் 9:40ஆவது) வசனத் தொடர்.*
*(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சகீனா (மனஅமைதி) எனும் சொல் சுகூன் எனும் வேர்ச் சொல்லிலிருந்து ஃபஈலா எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️4663 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) நபி (ஸல்) அவர்களுடன் (ஸவ்ர் எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு)இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவானே! என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்? என்று கேட்டார்கள்.✍️✍️✍️*
*40. ☪️நபியை🕋 கேலி🟣 செய்த ☪️முஸ்லிம்களை⚫ கண்டித்து🔰 இறங்கியது📚*
*🙋♂️🙋♂️🙋♂️4621 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் என்று குறிப்பிட்டார்கள்.*
*அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக் கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், என் தந்தை யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இன்னார் என்று சொன்னார்கள். அப்போது தான் இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட் டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் எனும் இந்த (திருக்குர்ஆன் 5:101ஆவது) இறை வசனம் இறங்கிற்று.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.4622 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் ளநபி (ஸல்) அவர்களிடம்ன, என் தந்தை யார்? என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற் போய் விட்ட இன்னொருவர் என் ஒட்டகம் எங்கே? என்று கேட்டார். அப்போது தான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட் டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின் றான். (அல்குர்ஆன் 5:101)🙋♀️🙋♀️🙋♀️*
*41. 🤩🤩🤩மது👹👹 மற்றும்🧶🧶 அது🟣🟣 சம்மந்தப்பட்ட⚫⚫ வசனங்கள்🟡🟡 இறங்கியது📚📚📚*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 111*
*🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment