பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

நாவை* ⤵️ *பேனுவோம் - 14

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 14 }*

*🏮🍂புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.*

*الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ ‏"*

_*☄️ முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.*_

    *📚 நூல் :புகாரி 10 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا، أَوْ لِيَصْمُتْ،* وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ ‏"

_*☄️2. எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

         *📚நூல் : புகாரி 6475 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

_*☄️3. நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப்பிடித்துக் கொள்ளத்தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ''எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி! பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்._ _*என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன❓ என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இதுதான் என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
           *சுஃப்யான் இப்னு*
                 *அப்துல்லாஹ் (ரலி).*

     *📚 ஆதாரம் : திர்மிதி 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment