பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, December 4, 2020

மறுமையில் - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🌺மறுமையில் அல்லாஹ்*
             *பார்க்காத பேசாத*
                           *நபர்கள்🌺*

           *✍🏻... தொடர் ➖0️⃣4️⃣*

 *🌾சுயநலத் தொண்டன் 🌾*

*🏮🍂ஒரு இயக்கத்திற்கோ அல்லது ஒரு குழுவிற்கோ நாம் ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பொது நலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும்.* நியாயமானவராகவும் நாணயமான வராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்குச் சாதகமாக நடக்கும் நபரைத் தேர்வு செய்யக் கூடாது. *ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதைக் கவனத்தில் வைப்பதில்லை.*

*🏮🍂தன்னுடைய நலனுக்காக, கொள்ளைக்காரர் களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால் அவனைப் பகைக்கிறார்கள்.*

*🏮🍂நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஒரு கட்சியில் தொண்டனாக இருப்பவன் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக மாறுகிறான். நேற்று வரை தன் தலைவனை போற்றிப் புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக் கொண்டிருக்கின்றான்.* தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் வெறுக்கிறான். *எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறான். இது போன்ற சந்தர்ப்பவாதிகள் இந்த ஹதீஸை கவனத்தில் கொள்ளட்டும்.*

*يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏‏ ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلاَّ لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ،*

_*🍃மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவனுக்குக் கடுமையான வேதனை உண்டு. (அந்த மூவரில் ஒருவன்) அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்.*_

*🎙️அறிவிப்பாளர்:*
               *அபூஹுரைரா (ரலி)*

       *📚நூல்: புகாரீ 2358📚*

*🏮🍂தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்தாலும் கட்டுப்பட வேண்டும் என இந்த ஹதீஸ் தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.*

_*🍃ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நியமித்த ஒரு தலைவர் அவர்களின் தொண்டர்களை, கோபத்தில் நெருப்பில் குதிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட போது இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீங்கள் நெருப்பில் குதித்திருந்தால் மறுமை நாள் வரையிலும் அதிலேயே இருப்பீர்கள் என்று கூறி விட்டு பாவமான விஷயத்தில் கட்டுப்படுதல் இல்லை என்றும் கூறினார்கள்.*_   

    *📚 நூல் : புகாரீ 7257)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment